சின்னசாமிக்கு குட்பை.. பெங்களூருவில் அமையும் 2வது கிரிக்கெட் ஸ்டேடியம்! என்னென்ன வசதிகள் தெரியுமா?
பெங்களூர்: பெங்களூர் சின்னச்சாமி கிரிக்கெட் மைதானத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 11 பேர் பலியாகினர். இடநெருக்கடி தான் இதற்கு காரணம். இதனால் பெங்களூரில் பிரமாண்டமான 2வது கிரிக்கெட் மைதானம் பொம்மச்சந்திராவில் உள்ள சூர்யா சிட்டியில் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த ஸ்டேடியத்தில் ஏற்படுத்தப்பட உள்ள வசதிகள் குறித்த விவரத்தை கர்நாடகா துணை முதல்வர் டிகே சிவக்குமார் தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் வரலாற்றில் முதல் முதலாக ஆர்சிபி எனும் ராயல் சேலஞ்சர்ஸ் அணி கோப்பையை வென்றது. இதையடுத்து கடந்த ஜூன் 4ம் தேதி பெங்களூர் திரும்பிய ஆர்சிபி அணி வீரர்கள் ஊர்வலம் சென்றனர். அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் பலியாகினர். 56 பேர் காயமடைந்தனர்.

இந்த கூட்ட நெரிசல் சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இந்த கூட்ட நெரிசலுக்கு பெங்களூரில் தற்போது உள்ள சின்னச்சாமி கிரிக்கெட் மைதானமும் ஒரு காரணமாகும். அங்கு மொத்தம் 32 ஆயிரம் இருக்கைகள் மட்டுமே உள்ளன. இதனால் பலரும் போட்டி போட்டு மைதானத்துக்குள் நுழைந்த நிலையில் கூட்ட நெரிசல் ஏற்பட்டு உயிரிழப்பு நடந்தது.
அரசுக்கு போன அறிக்கை
இந்த துயர சம்பவத்தைத் தொடர்ந்து, ஓய்வு நீதிபதி ஜான் மைக்கேல் டி குன்ஹா ஆணையம் அரசுக்கு அளித்த அறிக்கையில், ‛‛17 ஏக்கரில் 32,000 இருக்கைகளுடன் அமைந்துள்ள சின்னசாமி ஸ்டேடியம், பெரிய நிகழ்வுகளை நடத்தத் தகுதியற்றது. மக்கள் அதிகம் கூடும் போட்டி, நிகழ்ச்சிகளை இங்கு நடத்தக்கூடாது'' என அறிக்கை அளித்தது.
பொம்மச்சந்திராவில் மைதானம்
இந்த சம்பவத்தை தொடர்ந்து பெங்களூரில் பிரமாண்டமான கிரிக்கெட் மைதானம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. சின்னச்சாமி கிரிக்கெட் மைதானம் பெங்களூர் நகரின் மையப்பகுதியில் கப்பன் பார்க், எம்ஜி ரோட்டையொட்டி அமைந்துள்ளது. இதனால் இடநெருக்கடியும் ஏற்படுகிறது. இதனால் பொம்மச்சந்திராவின் சூர்யா சிட்டியில் 2வது கிரிக்கெட் மைதானம் அமைக்கப்பட உள்ளது.
60,000 இருக்கையுடன் மைதானம்
சூர்யா சிட்டியில் சுமார் ரூ.1,650 கோடி செலவில், 60,000 இருக்கைகளுடன் இந்த மைதானம் அமைக்கப்பட உள்ளது.இந்த மைதானத்தில் பல்வேறு வசதிகள் ஏற்படுத்தி கொடுக்கப்பட உள்ளது. இதுதொடர்பாக துணை முதல்வர் டிகே சிவக்குமார் நேற்று தனது எக்ஸ் பக்கத்தில் கூறியுள்ளதாவது:
உலக தரத்திலான விளையாட்டு காம்ப்ளக்ஸ் பெங்களூரில் விரைவில் வருகிறது. பெங்களூர் பொம்மச்சந்திராவில் உள்ள சூர்யா சிட்டியில் 75 ஏக்கர் நிலப்பரப்பில் ரூ.1,650 கேடி மதிப்பீட்டில் 60,000 இருக்கையுடன் இந்த மைதானம் அமைய உள்ளது.
என்னென்ன வசதிகள்
இந்த மைதானம் பெங்களூரின் விளையாட்டு கலாசாரம் மற்றும் நகர வளர்ச்சிக்கு பூஸ்ட்டாக இருக்கும். இந்த மைதானத்தில் கிரிக்கெட் மட்டுமல்லாது உட்புற மற்றும் வெளிப்புற விளையாட்டு அரங்குகள் அமைக்கப்பட உள்ளது.
ஒலிம்பிக் தரத்திலான நீச்சல் குளம், அதிநவீன ஜிம், அதிநவீன பயிற்சி மையங்கள், விருந்தினர் மாளிகை, ஹாஸ்டல்கள், ஹோட்டல்கள், கூட்ட அரங்கம் உள்ளிட்டவை இடம்பெற உள்ளது.
ஓசூரில் இருந்து பக்கம்
பெங்களூரில் தற்போது அமையும் கிரிக்கெட் மைதானத்தை ஓசூரில் இருந்து 20 கிலோமீட்டர் தொலைவில் தான் உள்ளது. இதனால் தமிழ்நாட்டில் இருந்து எளிதாக இந்த மைதானத்தை அடைய முடியும். மாறாக பெங்களூரில் நகரில் இருப்பவர்கள் இந்த மைதானத்துக்கு வர சிரமத்தை எதிர்கொள்ளலாம்.
ஏனென்றால் பெங்களூர் நகரில் இருந்து பொம்மசந்திரா வரும் சாலை மிகவும் முக்கியமான ரோடாகும். இங்கும் எப்போதும் போக்குவரத்து நெரிசல் அதிகம் இருக்கும். இதனால் இந்த மைதானத்துக்கு பெங்களூரின் மையப்பகுதியில் இருந்து வருவோர் சிரமத்தை எதிர்கொள்வார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
-
ஜுவல்லரி கடைகளுக்கு விழுந்த அடி! ஒரு ரூபாயில் தங்கம்.. இளைஞர்களின் ஸ்மார்ட் மூவ்! உரிமையாளர்கள் ஷாக் -
தவெக விற்கு தேர்தலில் ஆதரவு கிடையாது.. ‘ஜனநாயகன்’ லீக் காட்சிகளால் பின்வாங்கிய முஸ்லிம் மக்கள் கழகம் -
திமுகவிற்கு ‘குட்பை'.. விஜயின் தவெகவிற்கு மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் ஆதரவு! -
பெட்ரோல் டூவீலர்களுக்கு மொத்தமாக தடை.. அரசு திட்டவட்டம்! ஏற்கனவே பைக் வைத்திருப்போர் என்ன செய்யணும்? -
இரவிலேயே பாய் விரித்து இடம்.. நெல்லையில் எல்கேஜி அட்மிஷனுக்காக விடிய விடிய காத்திருந்த பெற்றோர்கள் -
மணி பிளான்ட் இனி தேவையில்லை.. காந்தம் போல பணத்தை ஈர்க்கும் 'அந்த' ஒரு செடி! வீட்டில் எங்கே வைக்கலாம் -
6 மாதங்களில் அண்ணாமலைக்கு தமிழக முதல்வர் பதவி! இபிஎஸ் தலையில் இடியை இறக்கிய திருமாவளவன் -
பாண்டியன் ஸ்டோர்ஸ்: மயில் கர்ப்பத்தை பற்றி பழனி சொன்ன விஷயம்! கோபத்தில் சரவணன்.. கதிர் செய்த நல்ல விஷயம் -
Gold: பசிபிக் கடலுக்கடியில் குவிந்து கிடக்கும் ”தங்கம்” கண்டுபிடித்த விஞ்ஞானிகள்.. எம்மாடியோவ்! -
ராகுல் காந்தியை பார்த்ததும்.. திரும்பி வந்து பேசிய பிரதமர் மோடி.. நாடாளுமன்ற வளாகத்தில் நடந்த சுவாரசியம் -
சிறகடிக்க ஆசை: விஜயா செய்த சதி, ஜெயிலுக்கு போகும் மொத்த குடும்பம்.. மனோஜால் ஏற்படும் விபரீதம்! ஜெயித்த ரோகிணி -
ஈரான் கொடுத்த ஷாக்.. ஆடிப்போன அமெரிக்கா.. பூதாகரமாக வெடிக்கும் கண்ணிவெடி விவகாரம்!












Click it and Unblock the Notifications