Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இதுதான் நடக்கும்.. செந்தில் பாலாஜி ஸ்டைலில் டிகே சிவக்குமார் சொன்ன வார்த்தை.. பாஜக ஆட்சி மாறுதா?

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: கர்நாடகாவில் நடந்த லோக்சபா தேர்தல் தொடர்பான எக்சிட் போல் முடிவுகள் வந்துள்ளன. இந்த முடிவுகள் பற்றி அம்மாநில துணை முதல்வர் டிகே சிவக்குமார் முக்கியமான சில விஷயங்களை கட்சி நிர்வாகிகளிடம் பேசி இருக்கிறார்.

டிகே சிவக்குமார் என்ன பேசினார் என்று பார்க்கும் முன் ஒரு சின்ன வரலாறு.. 2022 பிப்ரவரி மாதம் தமிழ்நாட்டில் மாநகராட்சி தேர்தல் முடிவுகள் வரும் முன் முதல்வர் ஸ்டாலின் உளவுத்துறை ரிப்போர்ட் ஒன்றை கேட்டு இருக்கிறார். தேர்தல் முடிவுகள் பற்றிய ரிப்போர்ட் அது. அதில் கோவையில் 50 கவுன்சிலர்களை திமுக பெறும், 70 கவுன்சிலர்களை திமுக கூட்டணி வெல்லும் என்று கூறியுள்ளனர்.

lok sabha election 2024 karnataka congress bjp jds 2024 politics

செந்தில் பாலாஜி ஸ்டைல்: அப்போது செந்தில் பாலாஜியை அழைத்து விசாரிக்க அவரோ 95-96 கவுன்சிலர்களை திமுக கூட்டணி வெல்லும் என்று அடித்து கூறி இருக்கிறார். இதை அப்போது உளவுத்துறையை நம்பவில்லை. அதன்பின் மாநகராட்சி தேர்தல் முடிவுகள் வந்தன.

அதில் கோவையில் மொத்தமாக 100 வார்டுகளில் 96 வார்டுகளில் திமுக கூட்டணி வென்றுது. செந்தில் பாலாஜி சொன்னது போலவே நடந்தது. கோவையில் திமுக - 73, காங் - 9, சிபிஎம் - 4, சிபிஐ - 4, மதிமுக - 3, மமக - 1, கொமதேக - 2 ஆகிய வார்டுகளை வென்றது. மாறாக அதிமுக வெறும் 3 வார்டுகளை மட்டுமே இங்கு வென்றது.

10 எம்எல்ஏக்கள், எஸ்பி வேலுமணி போன்ற வலுவான தலைவர்களை வைத்துக்கொண்டு கோவையில் அதிமுக இப்படி ஒரு தோல்வியை சந்தித்தது. அப்போது உளவுத்துறை அதிகாரி ஒருவர் செந்தில் பாலாஜியிடம் சென்று நாங்களே ஆட்கள் வைத்து எடுத்த சர்வேவை விட எப்படி துல்லியமாக சொன்னீர்கள் என்று வியப்பாக கேட்டு உள்ளனர்.

அந்த அளவிற்கு செந்தில் பாலாஜிக்கு தெருவிற்கு தெரு ஆட்கள் உள்ளனர். அவருக்கு துல்லியமாக ரிப்போர்ட் கொடுக்க பெரிய படையே உள்ளது.

டிகே சிவக்குமார் ஸ்டைல்: இப்போது டிகே சிவக்குமார் கதைக்கு வருவோம். இப்போது செந்தில் பாலாஜி போலவே டிகே சிவக்குமார் கர்நாடக லோக்சபா ரிசல்ட் பற்றி கட்சி மீட்டிங்கில் பேசி இருக்கிறாராம்.

அதன்படி கர்நாடகாவில் காங்கிரஸ் தோல்வி அடையும் என்று தேர்தலுக்கு பிந்தைய எக்சிட் போல் கணிப்புகள் தெரிவிக்கின்றன. இந்தியா டிவி கருத்து கணிப்பில் பாஜக கூட்டணிக்கு 19 முதல் 25 தொகுதிகளும், காங்கிரஸ் கட்சிக்கு 4 முதல் 8 தொகுதிகளும், ஜன் கீ பாத் கருத்து கணிப்பில் பாஜக கூட்டணிக்கு 21 முதல் 23 தொகுதிகளும், காங்கிரஸ் கட்சிக்கு 5 முதல் 7 தொகுதிகளும் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் கர்நாடகா லோக்சபா தேர்தலில் பாஜக - ஜேடிஎஸ் கூட்டணி தான் அதிக இடங்களை அள்ளும் என தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏபிபி நியூஸ் கருத்து கணிப்பில் பாஜக கூட்டணி 23 முதல் 25 தொகுதிகளிலும், காங்கிரஸ் கட்சி 3 முதல் 5 தொகுதிகளிலும் வெல்ல வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது. அதேபோல் இந்தியா நியூஸ் கருத்து கணிப்பில் பாஜக கூட்டணிக்கு 23 இடங்களும், காங்கிரஸ் கூட்டணிக்கு 5 இடங்களும் கிடைக்கும் எனவும், இந்தியா டுடே கருத்து கணிப்பில் பாஜகவுக்கு 23 முதல் 25 இடங்களும் காங்கிரஸ் கட்சிக்கு 3 முதல் 5 இடங்களும் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

என்ன சொன்னார்?: இப்படிப்பட்ட நிலையில்தான் இந்த கணிப்பெல்லாம் பலிக்காது, கண்டிப்பாக இந்தியா கூட்டணி வெல்லும் என்று கட்சி மீட்டிங்கில் டிகே சிவக்குமார் கூறி இருக்கிறாராம்.

அதன்படி, இன்று நடந்த ஜூம் கூட்டத்தில் முதல்வர் சித்தராமையாவிடம் காங்கிரஸ் தலைவர் கார்கே பேசி இருக்கிறார். அப்போது டிகே சிவக்குமார் உடன் இருந்துள்ளார்

கார்கே : காங்கிரசுக்கு உங்கள் நம்பர் என்ன?
சித்தராமையா: 15-20 இடங்கள் கிடைக்கும்.

கார்கே : உளவுத்துறை என்ன சொல்கிறது?
சித்தராமையா: 12-15 இடங்கள் கிடைக்கும் என்று உளவுத்துறை சொல்கிறது.
டிகே சிவக்குமார்: ஆனால் என்னை பொறுத்தவரை 15-20 இடங்கள் கண்டிப்பாக கிடைக்கும்.

கார்கே : அப்படியானால் டிகே சிவக்குமார் ஏன் நீங்கள் கூடுதலாக கணிக்கிறீர்களா?
டிகே சிவக்குமார்: எனது கருத்துக்கணிப்பு, தனிப்பட்ட வேட்பாளரின் சொந்த கருத்துக்கணிப்பின் அடிப்படையில் சொல்கிறேன்.

ராகுல்: காங்கிரஸ் 15-18 என வெற்றி பெற்றால், நான் கர்நாடகாவிற்கு வருகிறேன். உங்கள் இருவருக்கும் மாலை கொடுக்கிறேன், என்று கூறியுள்ளார். தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பெல்லாம் பலிக்காது, கண்டிப்பாக இந்தியா கூட்டணி வெல்லும் என்று கட்சி மீட்டிங்கில் டிகே சிவக்குமார் கூறி இருக்கிறாராம்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+