புதர் பகுதியில் நடந்த அக்கிரமம்.. உருகி வழிந்த காதல்.. கடைசியில் சாதி தீயில் சாம்பலான பெண்..!
காதலியை எரித்து கொன்ற காதலனை போலீசார் கைது செய்தனர்
பெங்களூரு: சாதி தீயில் ஒரு படித்த இளம்பெண் எரிந்து சாம்பலாகி உள்ளார்.. இந்த சம்பவம் கர்நாடகாவில் நடந்துள்ளது.
கர்நாடக மாநிலம் விஜயபுரா பகுதியை சேர்ந்தவர் சிவக்குமார்.. 27 வயதாகிறது.. இவர் அங்குள்ள ஒரு பொறியியல் கல்லூரில் படித்து வந்தார்..
அப்போது தானிஸ்வரி என்பவரை காதலித்தார்.. இருவருமே ஒரே பொறியியல் கல்லூரியில் ஒன்றாகவே படித்தவர்கள்..

தனி ரூம்
பொறியியல் படிப்பு முடித்த பிறகு, சிவகுமார் பெங்களூர் எலக்ட்ரானிக் சிட்டி பகுதியில் ஒரு பிரைவேட் கம்பெனியில் வேலைக்கு சேர்ந்துவிட்டார்.. அங்கேயே ரூம் ஒன்றை எடுத்து தங்கி வேலையும் பார்த்து வருகிறார்.. தானிஸ்வரி கல்லூரி படிப்பு முடிந்ததுமே மேல்படிப்பு படிக்க வேண்டும் என்று, அவரும் பெங்களூர் எலக்ட்ரானிக் சிட்டி பகுதிக்கு வந்து தனியாக ரூம் எடுத்து தங்கி படித்து வந்துள்ளார்.

காதலர்கள்
ஆளுக்கு ஒருபக்கம் தனியாக தங்கி வந்தபோதிலும், காதல் மட்டும் விடாமல் தொடர்ந்துள்ளது.. இருவருக்குமே வார இறுதி நாட்களில் விடுமுறை என்பதால், அப்போது சந்தித்து பேசி வந்தனர்.. இந்நிலையில், தானிஸ்வரி வீட்டில் மாப்பிள்ளை பார்க்க ஆரம்பித்துள்ளனர்.. ஒரு நல்ல மாப்பிள்ளையை தானிஸ்வரியின் அப்பா அசோக் சர்மா தேடிமுடித்துவிட்டார்.. மகளுக்கும் இந்த விஷயத்தை சொல்லி, மாப்பிள்ளையை நேரில் பார்க்க கிளம்பி வர சொன்னார்..

விருப்பம்
இதையடுத்து வீட்டுக்கு சென்ற தானிஸ்வரி, சிவக்குமாரை பற்றியும், காதலை பற்றியும் சொல்லி, அவரையே தனக்கு திருமணம் செய்து வைக்குமாறு கேட்டுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அசோக் சர்மாவும், மகளின் விருப்பத்திற்கு இணங்கினார்.. சிவகுமாரை நேரில் அழைத்து வர சொன்னார்.. அவரிடம் சம்மதம் வாங்கிய பிறகு திருமணம் செய்து கொள்ளலாம் என்றார்.. இதைக்கேட்டு பூரித்து போன தானிஸ்வரி, சிவகுமாரிடம் விஷயத்தை சொல்லி, தன் அப்பாவிடம் அழைத்து சென்றார்..

சிவக்குமார்
உடனே தானிஸ்வரி அப்பாவும், சிவக்குமாரிடம் திருமண பேச்சை எடுத்துள்ளார்.. அப்போதுதான் அந்த குண்டை தூக்கி போட்டார் சிவக்குமார்.. "நான் வேற ஜாதி, தானிஸ்வரி வேறு சாதி.. எங்க வீட்டில் இந்த கல்யாணத்துக்கு ஒப்புக் கொள்ள மாட்டார்கள்.. வேற சாதி என்றாலே அவர்கள் இறந்து விடுவார்கள்... அதனால் இந்த திருமணத்தில் சம்மதம் இல்லை என்று உறுதியாக சொல்லிவிட்டு, ஊருக்கு திரும்பிவிட்டார். இதைக்கேட்டு தானிஸ்வரியும் அவரது பெற்றோர்களும் அதிர்ச்சியடைந்தனர்.

சம்மதம்
நான் சம்மதம் பெற்று வாங்கிவருகிறேன் என்று தன்னுடைய அப்பாவிடம் சொல்லிவிட்டு, பெங்களூர் எலக்ட்ரானிக் சிட்டிக்கு வந்தார்.. கடந்த 16ம் தேதி சிவகுமாரை நேரில் சந்தித்தார்.. திருமணம் செய்து கொள்ளுமாறு வலியுறுத்தியுள்ளார்... ஆனால் சிவக்குமாரோ மறுப்பு தெரிவித்து கொண்டே இருந்தார்.. ஒரு கட்டத்தில் எரிச்சலடைந்த சிவகுமார், தானிஸ்வரியை, ஒரு புதர் பகுதிக்கு அழைத்து சென்று, அவரது உடலில் பெட்ரோல் ஊற்றி எரித்து உள்ளதாக தெரிகிறது..

தீக்காயம்
வலியில் அலறி துடித்துள்ளார் தானிஸ்வரி.. சத்தம் வருவதை கேட்டு, அந்த பகுதியில் இருந்தவர்கள் ஓடிவந்து, பிறகு தான் தானிஸ்வரியை மீட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.. அப்போதே 80 சதவீத தீக்காயங்கள் ஏற்பட்டிருந்தன.. எனினும் சிகிச்சை பலனின்றி தானிஸ்வரி இறந்துவிட்டார். இதுகுறித்து தானிஸ்வரியின் பெற்றோர் பெங்களூர் எலக்ட்ரானிக் சிட்டி போலீசில் புகார் தந்தனர்.. ஆனால் அதற்குள் சிவகுமார் எஸ்கேப் ஆகிவிட்டார்.. அவரை இப்போது போலீசார் தேடி கொண்டிருக்கிறார்கள்..
-
ராஜினாமா பண்ணிட்டா.. ஆட்டம் முடிஞ்சதுன்னு அர்த்தம் கிடையாது! எம்பி பதவியை உதறிய சித்தராமையா -
100 எம்எல்ஏக்கள் ஆதரவு இருந்தும் முதல்வர் பதவியை விட்டு கொடுத்த சித்தராமையா.. ஏன் தெரியுமா? பின்னணி! -
கர்நாடகா முதல்வராக தேர்வானார் டிகே சிவக்குமார்.. காங்., எம்எல்ஏக்கள் ஆதரவு.. பதவியேற்பு எப்போது? -
கர்நாடகா முதல்வராகிறார் டிகே சிவக்குமார்.. ஜூன் 3ம் தேதி பதவியேற்பு.. சித்தராமையா மகனுக்கு ‘ஜாக்பாட்' -
டி.கே.சிவகுமாருக்கு செக்.. ஆட்டத்தை தொடங்கிய சித்தராமையா! ராகுல் காந்திக்கு பறந்த முக்கிய கோரிக்கை! -
மேகதாது அணை விவகாரம்: தேசிய பசுமை தீர்ப்பாயத்தை நாடிய தமிழக அரசு! அடுத்த கட்ட 'மூவ்’ என்ன? -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக












Click it and Unblock the Notifications