திடீரென சவாரியை கேன்சல் செய்த பெங்களூர் பெண்ணின் கன்னம் பழுத்தது.. டிரைவர் ஆவேசமாக வாக்குவாதம்
பெங்களூர்: பெங்களூரில் ஆன்லைன் ஆப் மூலம் ஓலா ஆட்டோ புக்கிங் செய்திருந்த பெண், திடீரென முன்பதிவை ரத்து செய்தார். இதனால் ஆத்திரம் அடைந்த ஆட்டோ டிரைவர், பெட்ரோலுக்கு பணம் உங்கப்பனா கொடுப்பான் என்று கேட்டு அந்த பெண்ணிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன் கன்னத்தில் அறைந்துள்ளார். இறுதியாக அவரது செல்போனையும் பறிக்க முயன்றுள்ளார். இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகி உள்ளது..
பெங்களூரில் டிராபிக் என்பது பீக் அவர்ஸில் மிகவும் கடுமையாக இருக்கும். வெளியில் செல்வோர் ஆட்டோ, கார் உள்ளிட்டவற்றை ஆப்களில் முன்பதிவு செய்வார்கள். அப்படித்தான் பீக் ஹவர் காரணமாக பெண் ஒருவர் தன் தோழியுடன் வெளியில் செல்ல ஆன்லைன் ஆப்பில் முன்பதிவு செய்துள்ளார். அந்த பெண் ஓலா ஆப்பில் ஒரு ஆட்டோவை முன்பதிவு செய்துள்ளார். இதேபோல் அவரது தோழியும் ஒரு ஆட்டோவை ஆப்பில் முன்பதிவு செய்துள்ளார். இதில் தன் பெண் முன்பதிவு செய்த ஆட்டோ முதலில் வந்துவிட்டது. பின்னாடியே அவரது தோழி முன்பதிவு செய்த ஆட்டோவும் வந்துள்ளது. ஆனால் அந்த ஆட்டோவை அந்த பெண் கேன்சல் செய்துள்ளார்.

புக்கிங் செய்த ஆட்டோவை திடீரென அந்த பெண் ரத்து செய்ததால், சம்பந்தப்பட்ட ஓலா ஆட்டோ டிரைவர் கடும் கோபம் அடைந்தார். அந்த பெண்ணிடம் என் ஆட்டோவில் தான் ஏற வேண்டும் எனறு கூறினார்.. ஆனால் அந்த பெண் ஏற்காமல் ஏற்னவே வந்த ஆட்டோவில் ஏறிச்சென்றார். இதனால் ஆவேசம் அடைந்த அந்த ஆட்டோ டிரைவர் பின்னாடியே சென்று, அந்த பெண்ணை கடுயைமாக திட்டியுள்ளார். மேலும் அந்த ஆட்டோவை போக விடாமல் தடுத்துள்ளார்.
மேலும் அந்த ஆட்டோ ஓட்டுநர் அந்தப் பெண்ணிடம் ஆவேசத்துடன் வாக்குவாதம் செய்துள்ளார். அப்போது அந்த பெண், ஏன் இப்படி கத்துறீங்க என்று கேட்டுள்ளார். அதற்கு அந்த ஆட்டோ டிரைவர், இப்படி திடீர்னு ரத்து செய்தால், பெட்ரோலுக்கு என்ன உங்க அப்பானா காசு கொடுப்பார் என்று இந்தியில் கத்தியுள்ளார். ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றிய நிலையில், அந்த பெண் போலீஸ் புகார் செய்வதாக கூறுகிறார்.
An Auto driver slaps a woman passenger for cancelling the ride.
— Rishi Bagree (@rishibagree) September 5, 2024
Why such incidents keep happening in Bengaluru since LAST 2 YEARS ??
pic.twitter.com/melCwvOd0k
அதற்கு அந்த டிரைவர் உன் விருப்பப்படியே போலீசில் புகார் செய்யலாம் வா என்று பதிலளித்துள்ளார். மேலும் அந்த பெண்ணின் கன்னத்தில் அவர் அறைந்துள்ளார்.. அத்துடன் செல்போனையும் பறிக்க முயற்சித்துள்ளார். மேலும் போலீஸ் ஸ்டேசன் செல்வதற்கு என்னுடைய ஆட்டோவில் ஏற வேண்டும் என்று டிரைவர் வற்புறுத்துகிறார். மேலும் அந்த பெண்ணை மிரட்டிய டிரைவர், உன்னை எல்லாம் செருப்பாலேயே அடிக்கனும் என்று பேசுகிறார்.. இப்படியாக அந்த வீடியோ முடிகிறது.
இதுபற்றிய வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகி உள்ளது. இதுபற்றி அந்த பெண் ட்விட்டரில் வெளியிட்ட பதிவில், "நேற்று பெங்களூரில் பீக் ஹவர்ஸ் காரணமாக நானும் எனது தோழியும் ஓலாவில் இரண்டு ஆட்டோக்களை முன்பதிவு செய்தோம். முதலில் வந்த ஆட்டோவில் ஏறினோம். அதனால் என் தோழி ஆட்டோவை ரத்து செய்தாள். இதனால் மற்றொரு ஆட்டோ டிரைவர் ஆவேசமாக எங்களைப் பின்தொடர்ந்து வந்து என்ன செய்கிறார் என்று பாருங்கள் என்று கூறி வீடியாவை வெளியிட்டுள்ளார்.
இந்த விவகாரம் குறித்து பதில் அளித்துள்ள ஓலா நிறுவனம் நடந்த சம்பவம் மிகவும் அச்சப்படும் அளவிற்கு இருக்கிறது. நிச்சயம் விசாரணை நடத்தப்படும் என்று கூறியுள்ளது. இதனிடையே அடிக்கடி ஆட்டோ ஓட்டுநர்கள் மற்றும் கார் ஓட்டுநர்கள் சிலர் இப்படி பயணிகளை அச்சுறுத்துவதாக புகார்கள் வந்துள்ளது. இந்த விவகாரத்தில் காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் எனறு நெட்டிசன்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications