சுற்றுலா வந்த ஹைதராபாத் பெண் டாக்டர்.. ஆற்றில் அப்படி ஒரு குளியல்.. யாருமே எதிர்பார்க்காத சம்பவம்
பெங்களூர்: தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தைச் சேர்ந்த அனன்யா ராவ் என்ற பெண் அங்குள்ள மருத்துவமனையில் டாக்டராக பணியாற்றி வருகிறார். இவர் கர்நாடகாவின் கொப்பலுக்கு சுற்றுலா வந்தார். அப்படி சுற்றுலா வந்தவர் துங்கபத்ரா ஆற்றில் குளிக்க விரும்பினார். இதன்படி டாக்டர் அனன்யா அங்கிருந்த 20 அடி உயர பாறையில் இருந்து ஆற்றில் குதித்துள்ளார். அதன் பின்னர் அனன்யா வெளியே வரவில்லை.. என்ன நடந்தது என்று பார்ப்போம்.
தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் மாநரகம் நம்பள்ளியை சேர்ந்த 26 வயதாகும் அனன்யா ராவ் என்ற இளம் பெண் அங்குள்ள வி.கே.சி. மருத்துவமனையில் டாக்டராக பணியாற்றி வந்தார். நேற்று முன்தினம் தெலுங்கானா மாநிலத்தில் இருந்து தனது தோழியான ஆஷிதா, நண்பர் சாத்விக் உள்பட சிலருடன் கர்நாடக மாநிலம் கொப்பலுக்கு சுற்றுலாவாக வந்துள்ளார்.

இதற்காக டாக்டர் அனன்யா ராவ் கங்காவதியில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் அவர் அறை எடுத்து தங்கியிருக்கிறார். அவர் தங்கியிருந்த சொகுசு விடுதி அருகே துங்கபத்ரா ஆறு பாய்ந்து ஓடிக்கொண்டிருந்துள்ளது. இதை பார்த்த டாக்டர் அனன்யாராவ், துங்கபத்ரா ஆற்றில் குளிக்க வேண்டும் என்று விரும்பியுள்ளார். மேலும் நண்பர்களையும் அழைத்தார். அதற்கு நண்பர்கள் ஒப்புக்கொண்டதும், அனைவரும் சேர்ந்து ஆற்றில் குளித்து கொண்டிருந்தார்கள்.
அப்போது அனன்யா அங்கிருந்த 20 அடி உயர பாறையில் இருந்து ஆற்றில் குதித்திருக்கிறார். அதன் பின்னர் அனன்யா வெளியே வரவில்லை. அதாவது ஆற்றில் குதித்தவர் நீரில் அடித்து செல்லப்பட்டதாக சொல்லப்படுகிறது. இதை பார்த்து ஆடிப்போன நண்பர்கள், உடனடியாக அனன்யாவை தேடினார்கள். ஆனால் அந்த பகுதியில் அனன்யாவை நண்பர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை. இதையடுத்து அவர்கள் கங்காவதி புறநகர் போலீசாருக்கு உடனடியாக தகவல் அளித்தனர். விரைந்து வந்த போலீசார், தீயணைப்பு படையினரை கையோடு அழைத்து வந்து, அவர்களின் உதவியுடன் அனன்யாவின் உடலை தேடினர். ஆனால் அவரது உடல் கிடைக்கவில்லை.
அவரது உடல் பாறை இடுக்குகளில் சிக்கி இருக்கலாம் என்று கூறப்படுகிறது. தண்ணீர் வரத்து மிக அதிகமாக இருப்பதால் மீட்பு குழுவினரால் பாறை இடுக்குகளுக்குள் செல்ல முடியவில்லை. இருப்பினும் போலீசார், தீயணைப்பு படையினர் டாக்டர் அனன்யாவின் உடலை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள். இதுகுறித்து கங்காவதி புறநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
இதற்கிடையில் பெண் டாக்டர் அனன்யா 20 அடி உயர பாறையில் இருந்து ஆற்றில் குதித்ததை அவரது நண்பர் ஒருவர் செல்போனில் வீடியோ எடுத்திருக்கிறார் அதில் அனன்யா ஆற்றில் குதிப்பதும், மீண்டும் அவர் நீச்சல் அடிப்பதும், சிறிது நேரத்தில் நீரில் அவர் அடித்துச் செல்லப்பட்டு நீரில் மூழ்குவதுமாக வீடியோவில் இருக்கிறது. தற்போது அந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. ஹைதராபாத் டாக்டர்
சுற்றுலா வந்த இடத்தில் ஆற்றில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
தமிழ்நாட்டில் 27 வயது தாசில்தார் சம்பளம்.. 37 வயதில் எவ்வளவு மாறியிருக்கும் தெரியுமா? -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி












Click it and Unblock the Notifications