பெங்களூரில் கணவனுடன் சண்டை போட்டு வந்த இளம் பெண்.. பூங்காவில் வைத்து 6 பேர் செய்த கொடுமை!
பெங்களூர்: பெங்களூர் கங்காவதி பேருந்து நிலையத்தில் கணவருடன் வாய் தகராறில் ஈடுபட்ட பெண்ணிடம் சமாதானம் செய்வது போல் வந்து, கணவனை தாக்கிய 6 பேர் கொண்ட கும்பல், அந்த பெண்ணை பூங்காவில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கர்நாடகா மாநிலம் கொப்பல் மாவட்டம் கங்காவதி அருகே சித்தாப்புரா என்ற கிராமத்தை சேர்ந்த மஞ்சுநாத் என்பவரும். பெங்களூரு கொரகுன்டேபாளையாவை சேர்ந்த 21 வயது இளம்பெண் மீனாவும் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) காதலித்து வந்துள்ளார்கள்.

கடந்த 3 மாதங்களுக்கு முன்பு ஹுலிகே பகுதியில் உள்ள கோவிலில் வைத்து மஞ்சுநாத்தும் மீனாவும் திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்கு பிறகு மஞ்சுநாத் மீனா தம்பதி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டிருக்கிறது. இதனால் கடந்த சில தினங்களுக்கு முன்பு மஞ்சுநாத் தனது மனைவியிடம் கோபித்து கொண்டு பெங்களூர் கங்காவதிக்கு சென்றுவிட்டாராம்
இதனால், இளம்பெண் மட்டும் கோரகுன்டேபாளையாவில் தனியாக வசித்து வந்திருக்கிறார். இந்த நிலையில், சண்டை போட்டு சென்ற கணவரை பார்ப்பதற்காக அந்த பெண் பெங்களூருவில் இருந்து பஸ்சில் கங்காவதிக்கு புறப்பட்டுள்ளார்.
பெங்களூர் கங்காவதி மத்திய பஸ் நிலையத்தில் இளம் பெண் மீனா வந்து இறங்கினார். அப்போது அங்கு மஞ்சுநாத் நின்று கொண்டிருந்தார். அப்போது பேருந்து நிலையத்தில் கணவனிடம் ஏன் கோபித்துக் கொண்டு சென்றாய் என கேட்டு சண்டை போட்டுள்ளார் மீனா. இதனால் மீண்டும் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இருவரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருக்கிறார்கள். அந்த சமயத்தில் அங்கிருந்த 6 பேர், தம்பதியை சமாதானப்படுத்துவது போல் வந்துள்ளார்கள். பின்னர் அவர்கள் திடீரென்று மஞ்சுநாத்தை சரமாரியாக தாக்கியுள்ளார்கள்.
சமாதானம் செய்யும் சாக்கில் இளம்பெண் மீனாவிடம் சில்மிஷம் செய்துள்ளனர். இதனால் பயந்துபோன இளம்பெண் மீனா அருகே உள்ள பூங்காவுக்குள் ஓடினார். ஆனாலும் அவர்கள் 6 பேரும் பின்தொடர்ந்து விரட்டி சென்றனர். பூங்காவில் வைத்து 6 பேரும் மீனாவின் ஆடையை கிழித்து மானபங்கம் செய்தார்களாம். அத்துடன் அவர்களில் ஒருவர் மீனாவை பாலியல் பலாத்காரம் செய்துவிட்டதாக கூறப்படுகிறது. மற்ற இளைஞர்கள் அதற்கு பக்கபலமாக இருந்ததாகவும் கூறப்படுகிறது.
இதற்கிடையே இளம்பெண்ணின் கணவர் துணைக்கு பஸ் நிலையத்தில் இருந்த சிலரை அழைத்து கொண்டு பூங்காவுக்குள் ஓடி வந்தார். அதற்குள் அவர்கள் 6 பேரும் அங்கிருந்து தப்பி சென்றுவிட்டார்கள். இதனிடையே கணவனுடன் சென்ற மீனா, நடந்த சம்பவங்களை கூறி கங்காவதி போலீசில் புகார் அளித்தார்.
அந்த புகாரில் தனது கணவரை தாக்கியதுடன் தன்னை 6 பேர் மானபங்கம் படுத்தியதாகவும், ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்துவிட்டதாகவும் தெரிவித்தார். அதன்பேரில் போலீசார், லிங்கராஜ், மவுலா ஹுசைன், சிவக்குமார சாமி, பிரசாந்த், மகேஷ், மாதேஷ் உள்ளிட்ட 6 பேரையும் கைது செய்தனர். லிங்கராஜ் தான் இளம்பெண்ணை பலாத்காரம் செய்தாக கூறப்படுகிறது. தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.












Click it and Unblock the Notifications