என்ன ஒரு ஆணவம் கம்பீருக்கு? கோலியுடன் சண்டை நடந்தது எப்படி? நேற்று மேட்சில் உண்மையில் நடந்தது என்ன?
பெங்களூர்: நேற்று பெங்களூர் - லக்னோ அணிகளுக்கு இடையிலான மோதலில் கம்பீர் - கோலி இருவரும் சண்டை போட்டுக்கொண்டது ஏன்? இருவருக்கும் இடையில் உண்மையில் என்ன நடந்தது என்பது தொடர்பான விவரங்கள் வெளியாகி உள்ளன.
ஐபிஎல் 2023 சீசன் விறுவிறுப்பாக சென்று கொண்டு இருக்கிறது. இந்த நிலையில் நேற்று பெங்களூர் - லக்னோ அணிகளுக்கு இடையிலான மேட்ச் நடந்தது. நேற்று நடந்த போட்டியில் லக்னோ பிட்ச் கொஞ்சம் கூட பேட்டிங்கிற்கு ஒத்துழைக்கவில்லை.

முழுக்க முழுக்க ஸ்லோ பிட்சாக, பவுலிங் பிட்சாக இந்த பிட்ச் தயார் செய்யப்பட்டு இருந்தது. இதனால் முதலில் பேட்டிங் இறங்கிய பெங்களூர் அணி கடுமையாக திணறியது. அதிரடியாக ஆட கூடிய பெங்களூரின் டாப் ஆர்டர் டு பிளசிஸ், கோலி, மேக்ஸ்வெல் ஆகியோர் கூட மிகவும் மெதுவாக ஆடினார்கள்.
இதனால் பெங்களூர் அணி 20 ஓவரில் 126-9 ரன்கள் மட்டுமே எடுத்தது. டு பிளசிஸ் 44, கோலி 31 ரன்கள் எடுத்தனர்.
இதையடுத்து களமிறங்கிய லக்னோ அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. க்ரிஷ்ணப்பா கவுதம் மட்டும் அதிகபட்சமாக 23 ரன்கள் எடுத்தார். அமித் மிஸ்ரா 19 ரன்கள் எடுத்தார். இதனால் லக்னோ அணி 19.5 ஓவரில் 108-10 ரன்கள் எடுத்து தோல்வி அடைந்தது.

சண்டை: இந்த போட்டியில் தொடக்கத்தில் இருந்தே கோலி தீவிரமாக, ஆக்ரோஷமாக இருந்தது. முன்னதாக க்ரூனால் பாண்டியா அவுட்டான போது கோலி முதலில் வாயில் விரல் வைத்து ஷூ என்று சொல்வது போல காட்டிவிட்டு.. பின்னர் அப்படி செய்ய கூடாது என்று சைகை செய்து ஹார்ட் காட்டினார்.
முன்னதாக பெங்களூர் - லக்னோ மேட்சில்.. லக்னோ வென்ற போது பெங்களூர் ரசிகர்களை பார்த்து ஷூ என்று எம்பி கவுதம் கம்பீர் மிரட்டினார். அவர் லக்னோ அணியின் ஆலோசகராக இருக்கிறார். ஒரு எம்பி இப்படி கிரிக்கெட் ரசிகர்களை பார்த்து இப்படி சொன்னது பெரிய சர்ச்சையானது.

இதற்கு பதிலடி தரும் விதமாகவே க்ரூனால் பாண்டியா அவுட்டான போது கோலி முதலில் வாயில் விரல் வைத்து ஷூ என்று சொல்வது போல காட்டிவிட்டு.. பின்னர் அப்படி செய்ய கூடாது என்று சைகை செய்து ஹார்ட் காட்டினார். கம்பீரின் ஆணவத்திற்கு கோலி அங்கே பாடம் எடுத்தார்.
சண்டை: அதன்பின் லக்னோ வீரர் நவீன் உல் ஹக் 18.4 ஓவரில் அவுட்டானார். அப்போது கோலிக்கும் இவருக்கும் மோதல் ஏற்பட்டது. இந்த மோதல் கடுமையான வாக்குவாதம் ஆனது. களத்திலேயே வார்த்தைகளால் நவீனை கோலி லெப்ட் ரைட் வாங்கினார்.
இது இரண்டு தரப்பிற்கும் இடையிலான மோதலை பெரிதாக்கியது.
குழந்தை கம்பீர்: இதையடுத்து மேட்ச் முடிந்து லக்னோ வீரர் கைலி மேயர்ஸ் சகஜமாக கோலியுடன் பேசிக்கொண்டு இருந்தார். அப்போது குழந்தை போல செயல்பட்ட கம்பீர் வந்து அப்படியே கைலியை அழைத்து சென்றார்.

பள்ளிகளில் சிறுவர்கள் செய்வது போல.. நீ என் டீம்னா அவன்கிட்ட பேச கூடாது என்று சொல்வது போல கம்பீர் நடந்து கொண்டார். ஒரு எம்பியாக இருந்து கொண்டு அவர் மைதானத்தில் நடந்து கொண்ட விதம் கடும் விமர்சனங்களை சந்தித்தது.
கம்பீர் இப்படி நடந்து கொண்டதை கோலி அங்கேயே விமர்சனம் செய்தார். இதை பார்த்து.. என்ன என்ன என்பது போல.. தடுப்பதற்கு ஆள் இருக்கும் தைரியத்தில் கம்பீரும் முரண்டு பிடித்துக்கொண்டு முன்னேறி சென்றார்.
கோலி பயமின்றி அவர் முகத்திற்கு நேராக சென்று அவர் செய்தது தவறு என்று கூறி அவரை கண்டித்து பேசினார்.
ராகுல் சமாதானம்: கடைசியில் ராகுல் கம்பீரை சமாதானம் செய்ய முயன்றார். அவர் சமாதானம் ஆகவில்லை. அதேபோல் நவீன் உல் ஹக்கை அழைத்து கோலியிடம் பேச வைக்க முயன்றார். கோலி இதற்கு தயாராக இருந்தும் நவீன் பேசவில்லை. இதையடுத்து கோலி கோபம் அடைந்து நவீனை பார்த்து போடா என்பது போல சைகை காட்டினார்.
-
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம் -
டிடிவி பராக்.! இரட்டை இலை என்னோடது.. அமித் ஷாவிடம் டீல் பேசிய அண்ணன்! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
கிளம்பு, கிளம்பு.. போர் முடிஞ்சிப்போச்சு.. டிரம்ப் அறிவித்த 'அந்த' ஒரு விஷயம்.. ஈரான் செம ஹேப்பி! -
“அதிமுக என்ற கட்சியே இருக்காது.. இன்னும் பல MLAக்கள் தவெகவுக்கு வருவார்கள்” - அமைச்சர் செங்கோட்டையன்












Click it and Unblock the Notifications