"சபலம்".. மடத்தில் தவியாய் தவித்த சாமியார்.. இளம்பெண்ணுடன் காதல் வேறு.. கடைசியில் நடந்ததுதான் ஹைலைட்
லெட்டர் எழுதி வைத்துவிட்டு, இளம்பெண்ணுடன் மாயமானார் சாமியார்
பெங்களூரு: சாமியார் ஒருவர், லெட்டர் எழுதிவைத்துவிட்டு, இளம்பெண்ணுடன் ஓடிய சம்பவம் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
கடந்த வாரம் வடமாநிலத்தில் ஒரு சாமியார் கைதானார்.. அவர் மத்திய பிரதேசத்தில் மிகவும் பிரபலமானவர்.. வைராக்கிய ஆனந்த் கிரி என்று அந்த சாமியாருக்கு பெயர்.. மிர்ச்சி பாபா என்றும் அழைப்பார்கள்..
நிறைய அரசியல் தலைவர்கள் இவருக்கு நேரடி தொடர்பு.. அதனால், தேர்தல் சமயத்தில் பிரச்சாரங்களும் செய்வார்..

மிர்ச்சி பாபா
குழந்தை பாக்கியம் இல்லாத இளம்பெண் ஒருவர், இந்த சாமியாரிடம் அருள்வாக்கு தேடி சென்றுள்ளார்.. தன் துயரத்தை சொல்லி உள்ளார்.. இந்த தீர்த்தத்தை குடி, குழந்தை பிறக்கும் என்று சொல்லி, மயக்க மருந்து கலந்த நீரை குடிக்க வைத்துள்ளார்.. அந்த பெண் மயங்கி விழுந்ததும், அங்கேயே அவரை பலாத்காரமும் செய்துள்ளார்.. இதனால் அதிர்ச்சி அடைந்த பெண் போலீசில் விஷயத்தை சொல்லி, இப்போது மிர்ச்சி பாபா ஜெயிலில் உள்ளார்.. இப்படி போலி சாமியார்களின் அட்டகாசங்கள் நாளுக்கு நாள் பெருகி வருகிறது.

மாயம் - சாமியார்
அந்த வகையில், இன்னொரு சம்பவம் கர்நாடகாவில் நடந்துள்ளது.. ஆனால், இது கொஞ்சம் வித்தியாசமான சம்பவம்.. ராமநகர் மாவட்டம் மாகடி தாலுகா சோலூரில், குத்தகே என்ற மடம் உள்ளது... இந்த மடத்தின் சாமியாராக இருந்து வருபவர் சிவமகந்தே சுவாமி.. இவருக்கு ஹரீஷ் சுவாமி என்று இன்னொரு பெயர் இருக்கிறதாம்.. இவர்தான் திடீரென மடத்தில் இருந்து காணாமல் போய்விட்டார்.. இதனால், மடத்தில் இருந்தவர்கள், சாமியாரை காணவில்லை என்று பதறினார்கள்.

தேடாதீங்க
இந்நிலையில், ஒரு கடிதம் மடத்தில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டது.. அந்த கடிதத்தில், "என்னால், சாமியாராக வாழ்க்கையை தொடர முடியவில்லை... நிம்மதி இல்லாமல் வாழ்ந்து வந்தேன்... அதனால் மடத்தின் வாழ்க்கையில் இருந்து விடுபட்டுள்ளேன்... என்னை யாரும் தேட வேண்டாம். எங்கோ சென்று நிம்மதியாக வாழ உள்ளேன்" என்று கூறியுள்ளார். இந்த சாமியார் இப்படி ஓடுவது, இது முதல் முறை இல்லை.. ஏற்கனவே இப்படித்தான், மடத்தில் இருந்து ஓடினாராம்.. ஆனால், சாமியார் ஓட்டம் பிடித்ததில் விஷயமே வேறு என்கிறார்கள்..

ஜூட்
அவருடைய லவ் மேட்டர்தான் காரணமாம்.. இந்த சாமியார் ஒரு பெண்ணை காதலித்து வந்துள்ளார்.. அந்த பெண்ணுடன் தான் மடத்தில் இருந்து ஓடியிருப்பது தெரியவந்துள்ளது... ஆனால், சாமியார் அதையெல்லாம் சொல்லாமல் டீசன்ட்டாக லெட்டர் எழுதி வைத்துவிட்டு ஓடிப்போயுள்ளார்.. அந்த காதலியுடன் சேர்ந்து இல்லற வாழ்க்கையில் ஈடுபடுவதற்காக மடத்தில் இருந்து ஓடி விட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.. இந்த சம்பவம் மாகடியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.. மடத்திலேயே இருந்துகொண்டு, சாமியார் என்ற போர்வையில் பல பெண்களை சீரழிக்கும் சில போலிகளை போல் இல்லாமல், ஒருவகையில் இப்படி ஓடிவிட்டதுகூட நல்லதுதான் போலும்..!












Click it and Unblock the Notifications