ஹிட் லிஸ்ட்.. இவர்தான் அடுத்த முதல்வரா.. குறுக்கே வந்த தலைகள்.. பாஜகவை முந்துகிறதா காங்கிரஸ்?
பெங்களூரு: இன்றைய தினம் கர்நாடக ரிசல்ட் வெளியாக உள்ள நிலையில், முதல்வர் பதவி யாருக்கு போக போகிறது? மாநிலத்தை ஆளப்போவது யார் என்ற எதிர்பார்ப்பு எகிறி கொண்டிருக்கிறது.
கர்நாடக தேர்தலை பொறுத்தவரை லிங்காயத் சமூகத்தினரே வெற்றி தோல்வியை தீர்மானிக்கும் இடத்தில் உள்ளனர்.. பாஜகவின் வாக்கு வங்கியாக கருதப்படும் லிங்காயத் சமூகத்தினர் வட கர்நாடகத்திலும், கடலோர மாவட்டங்களிலும் அதிகமாக வசிக்கிறார்கள்.
இந்த சமுதாய மக்களிடையே செல்வாக்கு பெற்று விளங்கும் எடியூரப்பா வயது மூப்பு காரணமாக இந்த தேர்தலில் போட்டியிடவில்லை. முதல்வர் பசவராஜ் பொம்மை, முன்னாள் முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர், முன்னாள் துணை முதல்வர் லட்சுமண் சவதி ஆகியோரும் லிங்காயத் சமூகத்தினரிடையே செல்வாக்கு பெற்ற தலைவர்களாக உள்ளனர்.

ஜெகதீஷ் ஷெட்டர்: இவர்களில் ஜெகதீஷ் ஷெட்டரும், லட்சுமண் சவதியும் 'சீட் கிடைக்காததால் பாஜகவில் இருந்து விலகி, காங்கிரசுக்கு தாவி அந்த கட்சியின் சார்பில் போட்டியிடுகிறார்கள்.. இதெல்லாம் பாஜகவுக்கு பின்னடைவாக கருதப்படுகிறது.. அதனால், இந்த முறை, வேட்பாளர் தேர்வில் ஆளும் பாஜகவில் கடுமையான அதிருப்தி நிலவியது.. அதனாலேயே பல பெரிய தலைகளை புறக்கணித்துவிட்டு 75 தொகுதிகளில் புதுமுகங்களை நிறுத்தி இருக்கிறார்கள்..
இதேபோல் காங்கிரசிலும் பலருக்கு சீட் கிடைக்கவில்லை.. சீட் கிடைக்காத பலர் அதிருப்தியில் உள்ளனர்... இதனால் 2 கட்சிகளுமே முதல்வர் வேட்பாளரை அறிவிக்காமலேயே இந்த தேர்தலை சந்தித்துள்ளன.
நம்பிக்கை: இந்த தேர்தலில் பிரதமர் மோடியின் செல்வாக்கைத்தான் பாஜக அளவுக்கு அதிகமாக நம்பி இருக்கிறது... காங்கிரஸ் கட்சியோ, ஆளும் கட்சியின் மீதான மக்களின் அதிருப்தி + தங்களின் கடந்த கால சாதனைகளையும் நம்பியே இந்த தேர்தலை சந்தித்துள்ளன.. பொதுவாக இரு கட்சிகளுக்குமே கணிசமான வாக்கு வங்கியை கொண்ட மாநில தலைவர்கள் இருக்கிறார்கள் என்றபோதிலும், மக்கள் செல்வாக்கு பெற்ற மாபெரும் தலைவர்கள் யாரும் இல்லை என்றே சொல்லலாம்.
ஒருவேளை கர்நாடகாவில் பாஜக ஆட்சியமைத்தால் முதல்வர் பதவி யாருக்கு வழங்கப்படும் என்ற எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது... அந்தவகையில், சில தலைவர்களின் பெயர்களும் முணுமுணுக்கப்பட்டு வருகின்றன.

இதில் டாப்பில் உள்ள முதல் பெயரே, பசவராஜ் பொம்மைதான்.. இத்தனைக்கும் இவரது ஆட்சியில்தான், முறைகேடு, ஊழல் புகார்கள் எழுந்தன. ஆனாலும், தற்போதைய முதல்வர் என்பதுடன், லிங்காயத் சமுதாயத்தை சேர்ந்தவர் என்பது இவருக்கு பிளஸ் பாயிண்டாக உள்ளது... லிங்காயத் சமுதாயம் தான் கர்நாடகாவில் பாஜகவுக்கு மிகப்பெரிய ஓட்டு வங்கியாக திகழ்ந்து வருவதால், அடுத்த ஆண்டு நடக்கும் எம்பி தேர்தல் வரை இவரையே முதல்வராக்க பாஜக முடிவு செய்யலாம் என்று தெரிகிறது.
பரிசீலனை: இரண்டாவது இடத்தில் பரிசீலனையில் உள்ளவர், பாஜகவின் மூத்த தலைவரும், மத்திய நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சருமான பிரகலாத் ஜோஷி ஆவார்.. இவர் பிராமணர் வகுப்பை சேர்ந்தவர்.. கட்சியின் சீனியர்.. செல்வாக்கு பெற்றவர்.. பாஜக தலைவர்களுக்கு நெருக்கமானவர்.. தார்வார் எம்பி தொகுதியில் 4வது முறையாக எம்பியாகவும் இருக்கிறார்.. அதனால் இவர் பெயரும் முதல்வர் பதவிக்கான பரிந்துரையில் இருக்கிறது.

பின்னடைவு: ஆனாலும், லிங்காயத் சமுதாயத்தை சேர்ந்தவரை தவிர்த்துவிட்டு, ஜோஷிக்கு முதல்வர் பதவி வழங்கினால், அது 2024 எம்பி தேர்தலில் பாஜகவுக்கு பின்னைடைவை ஏற்படுத்த வாய்ப்புள்ளதாக தெரிகிறது.. அந்தவகையில் முதல்வர் வேட்பாளர் லிஸ்ட்டில் இவருக்கு 2வது சாய்ஸ்தான்.. இவருக்கு அடுத்தபடியாக, முருகேஷ் நிராணி, பசனகவுடா பட்டீல் எத்னால் போன்றோரும் முதல்வர் பதவிக்கு முயற்சித்து வருகிறார்கள்.. காரணம் இவர்கள் லிங்காயத் சமுதாயத்தை சேர்ந்த முக்கிய தலைவர்கள் ஆவர். லிங்காயத் சமுதாயத்தை சேர்ந்த பசனகவுடா பட்டீலும் முதல்வர் பதவி மீது குறிவைத்து காய்நகர்த்தி கொண்டிருக்கிறார்.
அதேபோல, ஒக்கலிகர் சமுதாயத்தை சேர்ந்த சிடி ரவி, பெங்களூர் மல்லேஸ்வரம் தொகுதி சிட்டிங் எம்எல்ஏவும், அமைச்சருமான அஸ்வத் நாராயணன், அமைச்சர் ஆர் அசோக் உள்ளிட்டவர்களும் முதல்வர் பதவிக்காக காய் நகர்த்தி கொண்டிருப்பதாக தெரிகிறது.. இதில் முருகேஷ் நிராணிக்கு ஓரளவு சான்ஸ் இருப்பதாக தெரிகிறது.. தொழில்துறை அமைச்சராக இப்போது உள்ளதுடன், எடியூரப்பாவுக்கு நெருக்கமானவரும்கூட.. கட்சியில் சீனியர்.. பாகல்கோட்டையின் பீலகி தொகுதியில் பலமுறை வெற்றி கண்டவர்..
துணை முதல்வர்: துணை முதல்வர் பதவியை பொறுத்தவரை, எடியூரப்பாவின் மகன் விஜயேந்திராவுக்கு வழங்கப்படலாம் என்கிறார்கள்.. ஆனால், இதற்கு பாஜக வெற்றி பெற்றாக வேண்டும்.. அப்படியே வெற்றி பெற்றாலும் முதல்வர் யார் என்பதை எம்எல்ஏக்கள் கூட்டத்தில் அறிவித்து, அதற்கான ஒப்புதல் பெற வேண்டும்.. அதற்கு பிறகே துணை முதல்வர் ரேஸ் துவங்கும் என தெரிகிறது.












Click it and Unblock the Notifications