யாருங்க இது? ரூ.1,622 கோடி சொத்துடன் தேர்தல் களத்தில் குதித்த சுயேட்சை வேட்பாளர்! அலறும் காங், பாஜக!
பெங்களூர் : கர்நாடகா சட்டமன்றத் தேர்தல் வேட்பு மனு தாக்கல் நாளையுடன் நிறைவடையும் நிலையில், வேட்பு மனு தாக்கல் சூடுபிடித்துள்ளது. இதில் சுயேட்சையாக வேட்பு மனு தாக்கல் செய்த பெண் வேட்பாளர் அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்துள்ளார். காரணம் அவரது சொத்து மதிப்பு.
கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கி உள்ளது. அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து வருகின்றன. வேட்புமனு தாக்கல் நாளையுடன் நிறைவு பெறுவதால், முக்கிய வேட்பாளர்கள் உள்பட பலர் அந்தந்த பகுதிகளில் உள்ள தேர்தல் அலுவலகங்களுக்கு படையெடுத்து வேட்புமனுவை தாக்கல் செய்து வருகின்றனர்.

சிக்பேட்டை : இந்த தேர்தலில், பெங்களூர் சிக்பேட்டை தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட சீட் கேட்டு வந்த கே.ஜி.எப்.பாபு, தனது மனைவி சஜியா தரணத்தை சுயேச்சையாக களம் இறக்கி உள்ளார். அவர்களது பெயரில் 1,622 கோடி சொத்துகள் இருப்பதாக தேர்தல் ஆணையத்தில் கணக்கு காட்டி உள்ளனர்.
இதனால், சாஜியா தரணம், கர்நாடகா தேர்தலில் போட்டியிடும் பணக்கார வேட்பாளர்கள் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளார். சுயேட்சையாக போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்துள்ள சாஜியா மற்றும் அவரது கணவரின் சொத்து மதிப்பு ரூ.1,622 கோடி என்பது பாஜக, காங்கிரஸ் கட்சிகளையே புருவம் உயரச் செய்துள்ளது.
கேஜிஎஃப் பாபு மனைவி : ஏழாம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ள குடும்பத்தலைவியான சாஜியாதான் தற்போதைய சூழலில் கர்நாடகாவில் மிகப்பெரிய கோடீஸ்வர வேட்பாளராக களத்தில் நிற்கிறார். 37 வயதான சாஜியாவின் கணவரும் ரியல் எஸ்டேட் அதிபருமான கேஜிஎஃப் பாபு என்ற யூஷுப் ஷரிப் காங்கிரஸ் சார்பில் சிக்பேட்டை தொகுதியில் போட்டியிட சீட் கேட்டு வந்தார்.
இதற்கிடையே தான் ஆயிரக்கணக்கான பேருடன் வந்து அமர்க்களமாக வேட்பு மனு தாக்கல் செய்தார் சாஜியா. தனது கணவர் கேஜிஎஃப் பாபுவுக்கு காங்கிரஸ் கட்சி சீட் கொடுத்தால், தனது வேட்பு மனுவை வாபஸ் பெறப்போவதாக கூறியிருந்தார். ஆனால், காங்கிரஸ் சார்பில் சிக்பேட்டை தொகுதி வேட்பாளராக தேவராஜ் அறிவிக்கப்பட்டுள்ளார்.
இதனால், கர்நாடகாவின் பணக்கார வேட்பாளராக வேட்பு மனு தாக்கல் செய்துள்ள சாஜியா தரணம், சிக்பேட்டை தொகுதியில் காங்கிரஸ், பாஜக வேட்பாளர்களை போட்டியிடுவாரா அல்லது வேட்பு மனுவை வாபஸ் பெறுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

பணக்கார வேட்பாளர்கள் : ஒசக்கோட்டை தொகுதியில் பாஜக சார்பில் களமிறங்கியிருக்கும் அம்மாநில அமைச்சர் எம்.டி.பி.நாகராஜ், தனது சொத்து மதிப்பு 1,609 கோடி எனத் தெரிவித்துள்ளார். தனது மனைவியிடம் 2 கிலோ 879 கிராம் தங்க நகைகள் உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
கனகபுரா தொகுதியில் போட்டியிடும் கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார், தனக்கும், தனது மனைவிக்கும் சேர்த்து 1,414 கோடி ரூபாய் அளவிற்கு சொத்துக்கள் இருப்பதாக தெரிவித்துள்ளார். இருவருக்கும் 200 கோடி ரூபாய்க்கு மேல் கடன் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications