Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மேட்டரே வேற.. "இது" மட்டும் நடந்தால்.. கர்நாடகாவில் பாஜக தான்.. காங்கிரசுக்கு ரொம்ப கஷ்டம் தான்!

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: கர்நாடகாவில் மே மாதம் தேர்தல் நடைபெற உள்ளது. அங்கே மும்முனை போட்டி நிலவுவது போலத் தெரிந்தாலும், மாநிலம் முழுக்க ரியல் போட்டி என்பது பாஜக, காங்கிரஸ் இடையே மட்டும் தான். அது குறித்து விரிவாகப் பார்க்கலாம்

கடந்த 2018இல் நடந்த கர்நாடக தேர்தலில், அப்போது ஆட்சியில் இருந்த சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் கட்சி ஆட்சியை இழந்தது.. இருப்பினும், வாக்கு வங்கி அடிப்படையில் அப்போது காங்கிரஸ் கட்சி பெற்ற வாக்குகள் மிக மிக அதிகமாகவே இருந்தது.

கர்நாடகாவில் கடந்த சுமார் 40 ஆண்டுகளில் ஆட்சியில் இருக்கும் கட்சியின் வாக்கு வங்கி அதிகரிப்பது இதுவே முதல்முறையாகும். இதனால் அந்த தேர்தல் முடிவுகள் ரொம்பவே முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.

 கர்நாடகா

கர்நாடகா

கடந்த 2013இல் காங்கிரஸின் 36.59% வாக்குகளைப் பெற்ற நிலையில், 2018இல் அது 38.14% வாக்குகளைப் பெற்றுள்ளது. இருப்பினும் வென்ற சீட் அடிப்படையில் காங்கிரஸ் பெரும் சரிவைக் கண்டது.. 2013இல் 122 இடங்களில் பெற்ற காங்கிரஸ் 2018இல் வெறும் 80இல் மட்டுமே வெல்ல முடிந்தது. வாக்குகள் அதிகம் பெற்றால் மட்டுமே பெரும்பான்மையைப் பெற்றுக் விட முடியாது என்பதைக் காங்கிரஸ் கட்சிக்குக் காட்டுவதாக இது அமைந்தது. இதனால் 2023ல் பெரும்பான்மை பெறக் காங்கிரஸுக்கு வாக்கு வங்கியை அதிகரிப்பதைத் தாண்டி, ஜேடிஎஸ் கட்சியும் பலவீனமாக வேண்டி இருக்கிறது.

 ரியல் போட்டி

ரியல் போட்டி

இப்போது கர்நாடகாவில் காங்கிரஸ், பாஜக, ஜேடிஎஸ் ஆகிய கட்சிகளுக்கு இடையே மும்முனைப் போட்டி நிலவுவது போலத் தெரிந்தாலும் பெரும்பாலான இடங்களில் காங்கிரஸ் பாஜகவுக்கும் இடையேயும் காங்கிரஸ் ஜேடிஎஸ் இடையே தான் போட்டி. சில இடங்களில் மும்முனை போட்டி இருக்கவே செய்கிறது. அதேநேரம் வெகு சில இடங்களில் மட்டுமே பாஜக ஜேடிஎஸ் இடையே நேரடி போட்டி இருக்கிறது. 2018 தேர்தலை வைத்துப் பார்க்கும் போது, அங்குள்ள 222 தொகுதிகளில் 110 தொகுதிகளில் காங்கிரஸ் பாஜக இடையே நேரடி போட்டி இருக்கிறது. இந்தத் தொகுதிகளில், காங்கிரஸ், பாஜக வேட்பாளர்கள் தான் 80% மேல் வாக்குகளைப் பெற்றனர்.

ஜேடிஎஸ்

ஜேடிஎஸ்

ஜேடிஎஸ் கட்சி பல இடங்களில் எந்தவொரு தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. குறிப்பாக வடக்கு மற்றும் கடலோர கர்நாடகத்தில் ஜேடிஎஸ் கட்சி குறிப்பிடத்தக்கப் பங்கு வகிக்கவில்லை; தெற்கு கர்நாடகாவில் இருந்து தான் அவர்களுக்கு அதிகபட்ச வாக்குகள் கிடைத்துள்ளது. பாஜக பலவீனமாக இருக்கும் தெற்கு கர்நாடகாவில் உள்ள பழைய மைசூர் பகுதியில் உள்ள 29 தொகுதிகளில் காங்கிரஸ், ஜேடிஎஸ் இடையே தான் நேரடி போட்டி இருக்கிறது. அங்கே காங்கிரஸ் பலவீனமாக உள்ள ஒரு சில தொகுதிகளில் மட்டும் பாஜக மற்றும் ஜேடிஎஸ் இடையே போட்டி நிலவுகிறது.

 வாக்கு வங்கி

வாக்கு வங்கி

கடந்த 2008ஆம் ஆண்டு முதல் ஜேடிஎஸ் கட்சியின் வாக்குகள் சீராகவே இருந்து வந்துள்ளது. 2008 முதல் 18-20% வரை அவர்களின் வாக்குகள் இருந்துள்ளன. இருப்பினும், இந்த வாக்குகள் குறைந்த இடங்களில் இருந்து மட்டுமே வந்துள்ளது. ஜேடிஎஸ் கட்சியின் கோட்டையாகத் தென் கர்நாடகா இருந்து வருகிறது. அங்கிருந்தே இவர்களுக்கு வாக்குகளும் அதிகம் வந்துள்ளது. அதேநேரம் மாநிலத்தில் மற்ற இடங்களில் அவர்கள் வாக்குகளை இழந்தே உள்ளனர். சுமார் 50% இடங்களில் காங்கிரஸ் மற்றும் பாஜக இடையே தான் நேரடி போட்டி. அங்கே ஜேடிஎஸ் கட்சிக்குப் பெரிய வாக்கு வங்கி இல்லை.

 பெரும்பான்மை வேண்டும் என்றால்

பெரும்பான்மை வேண்டும் என்றால்

ஜேஎடிஸ் கட்சியின் வாக்குகள் அதிகரித்தால், அது வட மற்றும் மத்திய கர்நாடகாவில் பாஜகவை காட்டிலும் ஜேடிஎஸ் கட்சிக்கே அதிக பாதிப்பை ஏற்படுத்தும். எனவே, காங்கிரஸுக்கு முழுப் பெரும்பான்மை கிடைக்க வேண்டுமானால், அது பாஜகவின் வாக்குகளைப் பெற்றால் மட்டும் போதாது. ஜேடிஎஸ் கட்சியின் வாக்குகளைப் பெறவேண்டும். பெரும்பாலான தேர்தல்களைப் போலவே இந்த தேர்தலும் மிக கடுமையானதாகவே இருக்கும். சில ஆயிரம் வாக்குகள் என்பது பல இடங்களில் வெற்றி தோல்வியைத் தீர்மானிக்கும்.

 கிங் மேக்கர்

கிங் மேக்கர்

தேர்தலில் பல இடங்களில் வெறும் 5% வாக்குகளைப் பெற்றாலே காங்கிரஸ் மற்றும் பாஜக வேட்பாளர்களின் தலைவிதியை ஜேடிஎஸ் தீர்மானிக்க முடியும். மாநில ஆட்சியை அமைப்பது மட்டுமின்றி பல தொகுதிகளில் வெற்றி தோல்வியைத் தீர்மானிப்பதிலும் ஜேடி(எஸ்) கிங் மேக்கராக உள்ளது. கடந்த 2008 முதல் நடந்த தேர்தல்களின் டேட்டாவை வைத்துப் பார்க்கும் போது, சுமார் 61 தொகுதிகளில் முதல் இரு கட்சிகளுக்கு இடையே இருக்கும் வாக்குகளைக் காட்டிலும் ஜேடிஎஸ் கட்சிக்கு அதிக வாக்குகள் கிடைத்துள்ளது. இதில் பெரும்பான்மையான இடங்கள் வடக்கு மற்றும் மத்திய கர்நாடகாவில் உள்ளன

 ஜேடிஎஸ் திட்டம்

ஜேடிஎஸ் திட்டம்

காங்கிரஸை விடக் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் பாஜக அதிக இடங்களை இழக்கிறது என்று புள்ளிவிவரங்கள் காட்டினாலும், ஜேடிஎஸ் இருப்பு என்பது காங்கிரஸை விட பாஜகவுக்கு அதிகம் உதவுகிறது.. அதாவது, ஜேடிஎஸ் இருப்பு என்பது காங்கிரஸ் வேட்பாளரின் வாக்குகளையே குறைக்கிறது. இதற்குக் காரணம், ஜேடிஎஸ் வலுவாக இல்லாத இடங்களில் காங்கிரஸ் மற்றும் பாஜக வேட்பாளர்களை அறிவித்த பின், அங்கே சிலர் அதிருப்தி தெரிவிப்பார்கள் அவர்களையே பெரும்பாலும் தங்களுடன் இணைத்துக் கொண்டு ஜேடிஎஸ் சீட் தரும்.

 காங்கிரஸ் சிக்கல்

காங்கிரஸ் சிக்கல்

பாஜக இந்துத்துவா அடிப்படையிலான கட்சி என்பதால் அதிருப்தி தலைவர்கள் விலகும் வாய்ப்புகள் குறைவு. இந்துத்துவா வாக்கு வங்கியும் பாஜகவுக்கே வரும், அதேநேரம் காங்கிரஸ் உள்ளூர் தலைவர்கள் நம்பி இருக்கும் ஒரு கட்சியாகும். ஜேடிஎஸ் கட்சியில் அவர்கள் சேரும் போது, அவர்களும் காங்கிரஸை போலவே மத சிறுபான்மையினர் தாழ்த்தப்பட்ட மக்கலின் வாக்குகளையே குறி வைக்கிறார்கள். இதற்குக் கர்நாடகாவில் பல உதாரணங்களைச் சொல்ல முடியும். அதேபோல மக்களவை தேர்தலில் ஜேடிஎஸுக்கு பெரிய இடம் இல்லை.

 பாஜக ஆதிக்கம்

பாஜக ஆதிக்கம்

அப்போது ஜேடிஎஸ் வாக்காளர்கள் பெரும்பாலும் காங்கிரஸைக் காட்டிலும் பாஜகவுக்கே வாக்களிக்கிறார்கள். இதை வெறும் மோடியால் மட்டும் எனச் சொல்லிவிட முடியாது. ஏனென்றால் மோடி பிரதமராகும் முன்னரும் கர்நாடகாவில் இதே நிலை தான். எனவே, தெற்கு கர்நாடகத்தில் ஜேடிஎஸ் பலவீனமடைந்தால், காங்கிரஸை விட பாஜகவுக்குத்தான் வாக்காளர்கள் வாக்களிக்க வாய்ப்பு அதிகம். ஜேடிஎஸ் இல்லாமல் போனால், அது காங்கிரஸை காட்டிலும், பாஜகவுக்கு சாதகமாகவே அமையும். இப்போது கர்நாடகாவில் பாஜகவே ஆதிக்கம் செலுத்தும் கட்சியாக மாறும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+