கர்நாடகாவில் யாருக்கு ஜெயம்? நாடே எதிர்பார்க்கும் முடிவுகள்.. தெரிந்துகொள்ள வேண்டிய டாப் பாயிண்ட்ஸ்
பெங்களூர்: பாரதிய ஜனதா கட்சி ஆட்சி நடைபெற்று வரும் ஒரே தென் மாநிலமான கர்நாடகாவின் சட்டப்பேரவை தேர்தல் முடிவு நாளை வெளியாகிறது. இந்த தேர்தல் முடிவை நாடே எதிர்பார்த்துக் கொண்டு இருக்கும் நிலையில், அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய சில விஷயங்கள் பற்றி இங்கே பார்க்கலாம்.
பாரதிய ஜனதா கட்சி ஆட்சி நடைபெற்று வரும் ஒரே தென் மாநிலமான கர்நாடகாவில் நேற்று முன் தினம் சட்டப்பேரவை நடைபெற்றது. 224 சட்டமன்ற தொகுதிகளைக் கொண்ட கர்நாடகாவில் நேற்று சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. மாநிலம் முழுவதும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. எந்த வித அசம்பாவித சம்பவங்களும் இன்றி தேர்தல் அமைதியாக நடைபெற்றது.

மொத்தம் 73 சதவிகித வாக்குகள் பதிவானது. தற்போது ஆட்சியில் உள்ள பாஜக 224 தொகுதிகளிலும், எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சி 223 தொகுதிகளிலும், ஜனதா தளம்(எஸ்) கட்சி 207 தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளன. அதேபோல், அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி 209 தொகுதிகளிலும், பகுஜன் சமாஜ் கட்சி 133 தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளனர்.
கர்நாடகாவை பொறுத்தவரை பாஜக - காங்கிரஸ் இடையே நேரடி போட்டி நிலவுகிறது. குமாரசாமியின் ஜேடிஎஸ் கட்சியும் கணிசமான செல்வாக்கை கொண்டு இருப்பதால் கர்நாடக சட்டமன்ற தேர்தலில் மும்முனை போட்டி நிலவுகிறது. தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நாளை நடைபெறுகிறது.
தேர்தலுக்கான வாக்குப்பதிவு முடிந்ததும் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகளை பல்வேறு செய்தி நிறுவனங்களும் வெளியிட்டன. அதில் பெரும்பாலனாவை கர்நாடகாவில் தொங்கு சட்ட சபைக்கே வாய்ப்புகள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், கடந்த 25 ஆண்டுகளில் இரண்டு முறை மட்டுமே கர்நாடகாவில் பெரும்பான்மையுடன் கூடிய ஆட்சி அமைந்துள்ளது.
அதேபோல், 38 ஆண்டுகளாக ஆளும் கட்சியே மீண்டும் வென்றதில்லை என்ற வரலாறும் கர்நாடகாவில் உள்ளது. இதனால், நாளைய வாக்கு எண்ணிக்கை நாடு முழுவதும் உன்னிப்பாக கவனிக்கப்படும் என்பதில் சந்தேகம் இல்லை. அடுத்த ஆண்டு நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலுக்கு , கர்நாடக மாநிலத்தில் கிடைக்கும் வெற்றி பாஜக மற்றும் காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளுக்குமே மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும் என்பதால் இந்த தேர்தல் முடிவு சற்று கூடுதல் கவனம் பெற்றுள்ளது என்றே சொல்லலாம்.
பிரதமர் மோடியின் அனல் பறக்கும் பிரசாரம், ரோட் ஷோ மற்றும் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியின் சூறாவளி சுற்றுப்பயணம் ஆகியவற்றிற்கு மக்கள் போட்டு இருக்கும் மார்க் என்னவென்று நாளை தெரிந்து விடும். நாடே இந்த தேர்தல் முடிவை எதிர்பார்த்துக் கொண்டு இருக்கும் நிலையில், அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய சில விஷயங்கள் பற்றி இங்கே பார்க்கலாம்;
* தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் பெரும்பாலும் காங்கிரஸ் கட்சிக்கு சாதகமாகவே உள்ளது. வெளியான 11 கணிப்புகளில் நான்கு கணிப்புகள் காங்கிரஸ் கட்சி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் என்று தெரிவித்துள்ளது. இதனால், காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள் முகத்தில் இப்போதே மகிழ்ச்சி தென்பட துவங்கியிருக்கிறது. எனினும் மக்களின் தீர்ப்பு 13 ஆம் தேதி 8 மணிக்கு மேல் தான் தெரியும்.
* தேர்தலுக்கான வாக்குப்பதிவு காலை 8 மணிக்கு தொடங்குகிறது. வாக்கு முன்னணி நிலவரங்கள் 8.30 மணியில் இருந்து தெரிய வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
*கர்நாடக சட்டசபை தேர்தலில் மொத்தம் 58 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாக்குச்சாவடிகளில் 5 கோடிக்கும் அதிகமாக வாக்காளர்கள் வாக்களித்தனர். வாக்குகள் பதிவாகியுள்ள மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் அனைத்தும் சீல் வைக்கப்பட்டு வாக்கு எண்ணும் மையங்களில் வைக்கப்பட்டுள்ளன.
* கர்நாடகம் முழுவதும் 34 மையங்களில் வாக்கு எண்ணிக்கை நடக்கிறது. அதாவது ஒரு மாவட்டத்திற்கு ஒரு மையம் என்ற அளவில் வாக்கு எண்ணிக்கை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
முக்கிய வேட்பாளர்கள்:
சித்தராமையா - வருணா தொகுதி (காங்கிரஸ்)
டிகே சிவக்குமார்- கனகபுரா தொகுதி(காங்கிரஸ்)
பசவராஜ் பொம்மை- ஷிக்கோன் தொகுதி ( பாஜக)
ஜெகதீஷ் ஷெட்டர் - உப்பள்ளி தர்வார் (காங்கிரஸ்)
எச்.டி குமாரசாமி - சென்னபட்னா (ஜேடிஎஸ்)
பிஒய் விஜேயேந்திரா - ஷிகாரிபுரா ( பாஜக)
சி.டி ரவி - சிக்மகளூர் ( பாஜக)
-
விஜய்யிடம் காசு வாங்கிக்கொண்டு பெரம்பூரில் பாமக போட்டி.. காடுவெட்டி குருவின் மகள் பேச்சு -
ஈரான் போர் முடிந்ததும்.. இந்தியாவுக்கு அடுத்த பிரச்சனை Monsoon.. மக்களே உஷார்! -
"ஜெயலலிதாவால் ஜெயிலில் அடைக்கப்பட்டவரிடம் கட்சியை விற்றுவிட்டார் எடப்பாடி”.. கு.ப.கிருஷ்ணன் தாக்கு! -
பொற்கொடியால் திருமாவளவனுக்கு அரசியல் சிக்கல்? திமுக கண்ட் அண்ட் ரைட் வார்னிங்? அப்ப அந்த 8 தொகுதி -
மண்டியிட்டதா அமெரிக்கா? ஈரான் மீதான எல்லாம் தடைகளும் நீங்குகிறது? டிரம்பிற்கு இது பெரும் சறுக்கல்? -
ஈரானின் 10 கண்டிஷன்.. தடைகளை நீக்கு... நஷ்டஈடு கொடு.. அமெரிக்காவை அதிரவைத்த ஈரானின் அமைதி டீல் -
சிறகடிக்க ஆசை: விஜயா பற்றி முத்துக்கு தெரிந்த பெரிய உண்மை.. மீனா எடுத்த நல்ல முடிவு! அதிர்ச்சியில் குடும்பம் -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் வெற்றி பெறும் துலாம் ராசி.. வேலை விஷயத்தில் கவனம் -
சீனாவிடம் இருந்து போன மெசேஜ்.. உடனே முடிவை மாற்றிய ஈரான்.. வளைகுடா போர் முடிவுக்கு வந்தது எப்படி? -
திமுகவுக்கு திரும்பிய தென்னாற்காடு ‘தலை’.. 12 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் வந்த செஞ்சி ராமச்சந்திரன்! -
பும்ரா பந்தில் சிக்ஸ் அடித்த பின்.. வைபவ் சூர்யவன்ஷியிடம் என்ன பேசினீர்கள்? ஜெய்ஸ்வால் ஓபன் டாக்! -
கோட்டையை ‘குறி’ வைக்கும் எடப்பாடி.. முக்கிய IAS, IPS அதிகாரிகளை வளைக்க திட்டம்? என்ன நடக்கிறது?












Click it and Unblock the Notifications