"எப்போதும் வெள்ளை டீ சர்ட் ஏன்.." வந்து விழுந்த கேள்வி.. ஒரே வரியில் ராகுல் காந்தி பளிச் பதில்! அடடே

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: எப்போதும் ஏன் வெள்ளை டீ சர்ட் போடுகிறீர்கள் என்ற கேள்விக்கு ராகுல் காந்தி அளித்த பதில் இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.

ராகுல் காந்தியை எப்போது பார்த்தாலும் ஒரு மாதிரி தான் இருப்பார்.. அதே வெள்ளை டீசர்ட்.. எளிமையான ஒரு பேண்ட்.. சுறுசுறுப்பான நடை. இது தான் 53 வயதான காங்கிரஸின் ராகுல் காந்தியின் அடையாளம்.

Why always White T shirt Congress Rahul Gandhi gives simple answer

இப்படி பெரும்பாலான நேரங்களில் ராகுல் காந்தி எப்போதும் வெள்ளை டீ சர்ட் தான் போட்டு இருப்பார். இதற்கிடையே கர்நாடகாவில் பிரச்சாரத்தின் போது எப்போதும் ஏன் வெள்ளை டீ-சர்ட் அணிகிறார் என்ற கேள்விக்கு அவர் பதிலளித்துள்ளார்.

வெள்ளை டீ சர்ட்: இந்த கேள்விக்கு ராகுல் காந்தி, "இதற்குக் காரணம் வெளிப்படைத்தன்மை மற்றும் எளிமை தான். மேலும் நான் ஆடைகளைப் பற்றி அதிகம் கவலைப்படுவதில்லை. நான் அதில் எளிமையாக இருக்கவே விரும்புகிறேன்" என்றார்.

கர்நாடக பிரச்சாரத்திற்காகக் காங்கிரஸ் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் காங்கிரஸ் காங்கிரஸ் தலைவர் கார்கே மற்றும் கர்நாடக முதல்வர் சித்தராமையா ஆகியோர் ராகுல் காந்தி நேர்காணல் செய்வது போல இருக்கிறது. அப்போது ராகுல் காந்தி இரு தலைவர்களிடமும் பல்வேறு கேள்விகளைக் கேட்கிறார். அதற்கு அவர்களும் கேஸ்வலாக பதிலளிக்கிறார்கள். அப்போது தான் வெள்ளை டீ சர்ட் கேள்விக்கு ராகுல் காந்தி இந்த பதிலை அளித்தார்.

பிரச்சாரம்: அதேபோல இதில் வேறு பல கேள்விகளும் கேட்கப்பட்டு இருக்கிறது.. குறிப்பாகப் பிரச்சாரத்தின் போது எது நன்றாக இருந்தது.. எது மோசமாக இருந்தது என்று ராகுல் காந்தி கேட்ட கேள்விக்கு கார்கே, "கெட்டது என எதுவுமில்லை. பிரச்சாரம் நன்றாகவே போகிறது.. ஏனென்றால் நாம் நாட்டிற்காக இதைச் செய்கிறோம்.. இது நல்லது.. நாட்டை கெடுக்க நினைத்தவரை தடுக்க நாம் வேலை செய்கிறோம்... குறைந்தபட்சம் நாம் நாட்டிற்காக ஏதாவது செய்கிறோம் என்ற திருப்தி கிடைக்கிறது" என்றார்.

அதேபோல காங்கிரஸ் கர்நாடக முதல்வர் சித்தராமையாவிடம் அதிகாரம் அல்லது சித்தாந்தம் ஆகிய இரண்டில் எது தேர்வு செய்வீர்கள் என்ற கேள்வியைக் கேட்கிறார் ராகுல். அதற்கு சித்தராமையா, "எப்போதும் சித்தாந்தம் தான் முக்கியம்.. மக்களின் முன்னால் நீங்கள் சித்தாந்தத்தைத் தான் வைக்க வேண்டும். ஆட்சியில் இருந்தால் உங்கள் சாதனைகளைச் சொல்ல வேண்டும். அப்போது தான் மக்கள் ஆசீர்வாதம் கிடைக்கும்" என்றார்.

அதிகாரம் வரும் போகும்: அப்போது உடன் இருந்த கார்கே, "அதிகாரம் என்பது வரும் செல்லும்.. ஆனால் சித்தாந்தத்திற்கு உண்மையாக இருப்பது பெரிய விஷயம். இதற்காக நமது தலைவர்கள் தியாகம் செய்துள்ளனர்" என்றார்.

சித்தாந்தம் தான் முக்கியம்: அப்போது ராகுல் காந்தி, "நான் இருவர் சொன்ன கருத்துகள் உடனும் உடன்படுகிறேன். என்னைப் பொறுத்தவரைச் சித்தாந்தத்தைப் பற்றிய தெளிவான புரிதல் இல்லாமல் உங்களால் அதிகாரத்தை நோக்கிச் செல்ல முடியாது. மேலும் நமது சித்தாந்தத்தை நாம் மக்களுக்கு உணர்த்த வேண்டும். ஏழைகள், பெண்களுக்கு அதிகாரமளிப்பது, பன்முகத்தன்மை, அனைவரையும் சமமாக நடத்துதல் என அனைத்துமே சித்தாந்தம் சார்ந்தது தான்" என்றார்.

அப்போது ராகுல் காந்தியிடம் பிரச்சாரத்தில் உங்களுக்கு எது பிடிக்கும் எனக் கேட்கிறார்கள். அதற்கு ராகுல், "அது முடியும் தருணம் தான்.. என்னைப் பொறுத்தவரை, இந்த பிரச்சாரம் கிட்டத்தட்ட 70 நாட்களாக நடந்து வருகிறது. பாரத் ஜோடோ யாத்ரா ஒரு பிரச்சாரம் அல்ல, ஆனால் இது இதை விட கடினமாக இருந்தது. இடைவிடாமல் சென்று கொண்டே இருந்தோம். இப்படி நான் நீண்ட காலமே மக்களைச் சந்தித்து வருகிறேன். நாட்டிற்கு என்ன தேவை என்பதை இவை தான் நமக்கு உணர்த்தும்" என்றார்.

கர்நாடகா தேர்தல்: கர்நாடக மாநிலத்தைப் பொறுத்தவரை அங்கு மொத்தம் 28 லோக்சபா இடங்கள் உள்ளன. அங்கு இரண்டு கட்டங்களாகத் தேர்தல் நடக்கும் நிலையில், முதலில் 14 தொகுதிகளுக்கு ஏப்ரல் 26ஆம் தேதி வாக்குப்பதிவு முடிந்துவிட்டது.. மீதமுள்ள 14 தொகுதிகளுக்கு மே 7ஆம் தேதி தேர்தல் நடக்கிறது. இந்த முறை கர்நாடகாவில் அதிகப்படியான இடங்களில் வெல்ல வேண்டும் என்பதில் காங்கிரஸ் மும்முரமாக இருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+