"கேம் சேஞ்சர்.." தென்னிந்தியாவை புரட்டி போடும் திட்டம்.. சென்னை டூ பெங்களூர்.. அடடே என்ன வேகம்
பெங்களூர்: சென்னை- பெங்களூர் எக்ஸ்பிரஸ் சாலை கட்டுமான பணிகள் படுவேகமாக நடந்து வரும் நிலையில், இத்திட்டம் தென்னிந்தியாவுக்கே நிச்சயம் கேம் சேஞ்சராகவே இருக்கும்.
உலகின் உள்ள அனைத்து நாடுகளிலும் போக்குவரத்து உள்கட்டமைப்பு ரொம்பவே முக்கியம். போக்குவரத்து உட்கட்டமைப்பு சிறப்பாக இருக்கும் நாடுகளில் மட்டுமே பொருளாதார வளர்ச்சி மிகச் சிறப்பாக இருக்கும்.

அப்போது தான் பொதுமக்கள் நகரங்களுக்கு இடையே எளிதாகப் பயணிக்க முடியும். நாட்டின் மற்ற பகுதிகளுடன் சிறப்பான போக்குவரத்து வசதிகளைக் கொண்ட நாடுகள் மட்டுமே நல்ல வளர்ச்சியை அடையும்.
சென்னை- பெங்களூர் எக்ஸ்பிரஸ் வே: மேலும், சரக்கை ஓர் இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு எளிதாக எடுத்துச் செல்ல முடியும். இதனால் நாடு முழுக்க விரிவான சாலை உட்கட்டமைப்பை ஏற்படுத்தும் முயற்சியில் மத்திய அரசு உள்ளது. புதிய நெடுஞ்சாலைகளை முக்கிய நகரங்களுக்கு இடையே அமைத்து வருகின்றன. சரக்கு மற்றும் பயணிகள் வாகனங்கள் நகருக்குள் வராமல் வெளியே அப்படியே கடந்து செல்ல ரிங் ரோடு எனப்படும் புறவழிச்சாலைகளும் அமைக்கப்படுகிறது.
இதனிடையே தென்னிந்தியாவின் முக்கிய நகரங்களை இணைக்கும் வகையில் சென்னை- பெங்களூர் இடையே எக்ஸ்பிரஸ் சாலையை அமைக்கவும் திட்டமிட்டுள்ளனர். இரு நகரங்களுக்கு இடையே எக்ஸ்பிரஸ் சாலையை மத்திய அரசு அமைத்து வருகிறது. ரூ.17 ஆயிரம் கோடி செலவில் 263 கிலோமீட்டர் இந்த எக்ஸிபிரஸ் சாலையை அமைத்து வருகின்றனர். இந்த எக்ஸ்பிரஸ் சாலை அடுத்தாண்டு மார்ச் மாதத்திற்குள் நிறைவடைந்துவிடும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
2.5 மணி நேரம்: இந்த எக்ஸ்பிரஸ் சாலை இரு நகரங்களுக்கும் பெரிய பூஸ்ட்டாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. இந்த சாலைகளை ஓட்டி புதிய தொழிற்சாலைகள் நிச்சயம் உருவாகும். 263 கிலோமீட்டர் நீளமுள்ள இந்த எக்ஸ்பிரஸ் சாலை நான்கு வழிச்சாலையாக அமைய இருக்கிறது. மூன்று மாநிலங்கள் வழியாகச் செல்லும் இந்த அதிவேக சாலை இரு நகரங்களுக்கு இடையேயான பயண நேரத்தை 2.5 மணி நேரமாகக் குறைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இரண்டு மாநில தலைநகர்களை இணைக்கும் இந்த நெடுஞ்சாலை தென்னிந்தியாவின் மிகப்பெரிய உள்கட்டமைப்பு திட்டங்களில் ஒன்றாகும். கர்நாடகாவில் உள்ள ஹோஸ்கோட் மற்றும் பங்கார்பேட், ஆந்திரப் பிரதேசத்தில் பலமனேர் மற்றும் சித்தூர் மற்றும் தமிழ்நாட்டின் ஸ்ரீபெரும்புதூர் ஆகியவை இந்த வழித்தடத்தில் வரும் முக்கிய நகரங்கள் ஆகும்.. இந்த நெடுஞ்சாலை இந்த மூன்று மாநில பொருளாதார வளர்ச்சிக்கும் பெரியளவில் பங்களிப்பைத் தரும்.

முக்கிய வணிக மையங்களை இணைக்கும் வகையில், அமையும் இந்த நெடுஞ்சாலை தென்னிந்தியாவில் முக்கியமான வளர்ச்சி திட்டமாகப் பார்க்கப்படுகிறது. இந்த 262 கிமீ தொலைவில், 85 கிமீ தமிழ்நாட்டிலும், 71 கிமீ ஆந்திராவிலும் அமைகிறது. கடந்த 2022 அடிக்கல் நாட்டப்பட்ட இந்த திட்டத்தின் கட்டுமான பணிகள் மிக வேகமாக நடந்து வருகிறது.
கனெக்டிவிட்டி: சென்னைக்கும் எக்ஸ்பிரஸ் வேலைக்கும் தடையற்ற கனெக்டிவிட்டி இருப்பதை உறுதி செய்யத் தாம்பரத்தில் உள்ள சென்னை புறவழிச்சாலையில் (பெருங்களத்தூர் - மாதவரம்) பல்லாவரம் மேம்பாலத்தை இணைக்க உள்ளனர். அதேபோல பெங்களூரு-சென்னை விரைவு சாலை மற்றும் கிழக்கு கடற்கரைச் சாலையில் இருந்து ஜிஎஸ்டி சாலைக்கான சாலை இணைப்பும் மேம்படுத்தப்படும்.
தற்போது, சென்னை மற்றும் பெங்களூரு இடையே சராசரியாக ஐந்து முதல் ஆறு மணி நேரம் வரை ஆகிறது. இந்த புதிய எக்ஸ்பிரஸ் சாலை பெங்களூரு மற்றும் சென்னை இடையேயான தூரத்தை 300 கி.மீ லிருந்து 262 கி.மீ ஆக குறைத்து, பயண நேரத்தை 2.5 மணி நேரமாகக் குறைக்கும். இந்த எக்ஸ்பிரஸ் சாலை 120 கிமீ வேகத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மெதுவாக நகரும் வாகனங்கள், பைக்குகள் மற்றும் ஆட்டோ ரிக்ஷாக்கள் இதில் அனுமதிக்கப்படாது.
-
சென்னையில் சிறுவனுக்கு பாலியல் தொல்லை.. காவலரை டிஸ்மிஸ் செய்து அதிரடி உத்தரவிட்ட ஆணையர்! -
பெங்களூருவுடன் ஒப்பிடுவது தவறு.. பரந்தூர் விமான நிலையம் குறித்து பூவுலகின் நண்பர்கள் கருத்து -
விஜய்-க்கு புது சவால்.. 13 மாசமாச்சு.. சென்னை ஏர்போர்ட் - கிளாம்பாக்கம் மெட்ரோ திட்டத்தை மறந்த மத்திய அரசு! -
உலுக்கிடுச்சே.. மூடிய அறைக்குள் சிக்கிய காதலன்.. அரண்டு போன பிசினஸ்மேன் கணவன்! பெங்களூரு பகீர் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications