கட்டிடங்கள் புதையும்.. சுரங்க பாதை போட்டால் பெங்களூரே இருக்காது.. "மேன் மேட் டிசாஸ்டர்".. எச்சரிக்கை

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: பெங்களூர் நகரில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க 190 கிமீ சுரங்கப்பாதை அமைக்க முடிவு எடுக்கப்பட்டு உள்ளது. அதற்கான பொது டெண்டர்களை 45 நாட்களுக்குள் மாநில அரசு அழைக்கும் என்றும் கர்நாடக துணை முதல்வர் டிகே சிவக்குமார் தெரிவித்துள்ளார். ஆனால் இந்த திட்டம் வந்தால் பெங்களூர் நகரத்திற்கே பெரிய அழிவு ஏற்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

பெங்களூருவில் போக்குவரத்து நெரிசலை சமாளிக்க 190 கிமீ நீள சுரங்கப்பாதை சாலை முன்மொழியப்பட்டுள்ளது, எட்டு நிறுவனங்கள் அதற்கு தகுதி பெற்றுள்ளன. இந்த நிறுவனங்கள் சாத்தியக்கூறு அறிக்கையை சமர்ப்பித்து 45 நாட்களுக்குள் பொது டெண்டர்களை அழைக்க நாங்கள் தயாராகி வருகிறோம் என்று அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

Why Bangalore tunnel road project may end up bad for the city? Weatherman shocking warning

எங்கே வரும்?: இந்த நிறுவனங்கள் சுரங்கப்பாதை எப்படி இருக்க வேண்டும், நான்கு அல்லது ஆறு வழிச்சாலையாக இருக்க வேண்டுமா, எங்கிருந்து துவங்கி முடிக்க வேண்டும் என்பது குறித்து ஆய்வு செய்து அறிக்கை அளிக்கும். மேலும், நகர் முழுவதும் விரிவாக்கம் செய்ய வேண்டுமா என்பது குறித்தும் முடிவு எடுக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

தற்போதைக்கு 190 கி.மீ.க்கு இந்த திட்டம் முன்மொழியப்பட்டு உள்ளது. பெல்லாரி ரோடு, பழைய மெட்ராஸ் ரோடு, எஸ்டீம் மால் சந்திப்பு முதல் மெக்ரி சர்க்கிள், மில்லர் ரோடு, சாளுக்கிய சர்க்கிள், டிரினிட்டி சர்க்கிள், சர்ஜாபூர் ரோடு, ஓசூர் ரோடு, கனகபுரா ரோடு - கிருஷ்ணா ராவ் பார்க், மைசூர் ரோடு - சிர்சி சர்க்கிள். , மாகடி சாலை, துமகுரு சாலை முதல் யஷ்வந்த்பூர் சந்திப்பு வரை, வெளிவட்ட சாலை, கோரகுண்டேபாளைய, கேஆர் புரம், சில்க் போர்டு பகுதிகள் வரை சாலை அமைக்கப்பட்டு உள்ளன.

எச்சரிக்கை: ஆனால் இந்த திட்டம் வந்தால் பெங்களூர் நகரத்திற்கே பெரிய அழிவு ஏற்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. அதன்படி பெங்களூர் வெதர்மேன் செய்துள்ள போஸ்டில், பெங்களூர் நகரத்தின் பாதுகாப்பிற்காக சுரங்கப்பாதை சாலை திட்டத்தை கைவிடுமாறு அரசிடம் கோருவதில் பெங்களூரில் உள்ள அனைவரும் இணைந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம். பெங்களூரு போக்குவரத்தை எளிதாக்க 190 கிமீ சுரங்கப்பாதை சாலை அமைப்பது என்பது மிகவும் மோசமான யோசனை மற்றும் எங்கள் நகரத்திற்கு ஆபத்தானது

பெங்களூரு மிகவும் பாறை மற்றும் கடினமான நிலத்தடி கொண்டுள்ளது. ஏற்கனவே சுரங்க மெட்ரோ பணிகளின் காரணமாக விரிசல்கள் ஏற்பட்டன. மெட்ரோ பணிகள் காரணமாக கட்டிடங்கள் நடுங்கின, சில இடங்களில் விரிசல்கள் ஏற்பட்டன. அப்படி இருக்க இப்போது இவ்வளவு கிலோ மீட்டர் தூரத்திற்கு சுரங்கம் அமைப்பது தவறு ஆகும். அதோடு 20 - 100 அடி ஆழம், 100 அடி ஆழத்திற்கு கீழ் பல இடங்களில் தண்ணீர் குழாய்கள் அமைக்கப்பட்டு உள்ளன.

மோட்டார்கள் அமைக்கப்பட்டு உள்ளன. 600 மில்லியன் லிட்டர் தண்ணீரை இந்த பம்புகள் தினமும் இரைக்கின்றன. இந்த தண்ணீர் இல்லாமல், நகரின் தண்ணீர் தேவையை நிர்வகிப்பது மிகவும் கடினமாக இருக்கும். விரிவான சுரங்கப்பாதை திட்டங்கள் ஆழமற்ற நீர்நிலைகளை பெரிதும் சீர்குலைக்கும். இதனால் பாம்புகளில் தண்ணீர் வராது. இதனால் தண்ணீர் பாதிப்பு, பற்றாக்குறை ஏற்படும். பெங்களூரில் கடினமான கிரானைட் பாறைகளைக் கொண்ட பகுதியில் சுரங்கப்பாதைகள் அமைப்பது அதிக செலவை ஏற்படுத்தும்.

இது, கடினமானது மற்றும் அதிக நேரம் எடுக்கும் வலிமிகுந்த செயல். இதனால் பெங்களூர் கடுமையாக பாதிக்கப்படும். இதனால் பல கட்டிடங்கள் இடியும் அளவிற்கு பெங்களூரே இல்லாமல் போகும் அளவிற்கு கூட சிக்கல்கள் ஏற்படும். மேல் மண்ணில் தளர்வான மணல், வண்டல் படிவுகள் மற்றும் மென்மையான களிமண் உள்ள இடங்களில் சுரங்கங்கள் அமைப்பதைத் தவிர்க்க வேண்டும். போதுமான முன்னெச்சரிக்கை எடுக்கப்படாவிட்டால், கட்டிடங்கள் அப்படியே புதையும் வாய்ப்புகள் உள்ளன.

நகரத்தில் பொதுப் போக்குவரத்து வசதிகளை உருவாக்குவதற்குப் பணத்தைப் பயன்படுத்துவதற்குப் பதிலாக திட்டத்தின் செலவு மிகவும் அதிகமாக உள்ளது. இதற்கு கூடுதல் பஸ், மெட்ரோ, ரயில் விடலாம். இந்த சுரங்கங்களில் வெள்ளம் ஏற்படும் அபாயம் உள்ளது. இங்கே தண்ணீர் தேங்கும் அபாயம் உள்ளது. அதேபோல் உயர் மாடி கட்டிடங்கள் இருக்கும் இடங்களில் இந்த டனல் அமைப்பது மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். இதனால் கட்டிடங்களுக்கு ஆபத்து ஏற்படும், என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+