உடனே வெளியேற்றுங்க.. ஐபிஎஸ்ஸா இருந்தது குத்தமா?கர்நாடகாவில் அண்ணாமலைக்கு புதிய சிக்கல்!பின்னணி என்ன?
பெங்களூர்: கர்நாடகா மாநில பாஜக தேர்தல் இணை பொறுப்பாளராக தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து பணிகளை செய்து வருகிறார். இந்நிலையில் தான் அண்ணாமலையை உடனடியாக கர்நாடகாவில் இருந்து வெளியேற்ற வேண்டும் என காங்கிரஸ் கட்சி தேர்தல் அதிகாரியிடம் பரபரப்பபான புகார் அளித்துள்ள நிலையில் அதன் பின்னணியில் உள்ள பரபரப்பான தகவல் வெளியாகி உள்ளது.
கர்நாடகாவில் மொத்தம் 224 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இந்த தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக தேர்தல் மே மாதம் 10ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை கைப்பற்ற பாஜக முயற்சித்து வருகிறது.
கர்நாடகா சட்டசபை தேர்தலில் மீண்டும் பாஜகவை வெற்றி பெற வைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் பிரதமர் நரேந்திர மோடி, பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்டவர்கள் அடிக்கடி கர்நாடகா சென்று தீவிர பிரசாரம் செய்து வருவதோடு, பொதுக்கூட்டங்களில் பேசி வருகின்றனர்.

கர்நாடகாவில் அண்ணாமலை: மேலும் தமிழ்நாடு மாநில பாஜக தலைவரான அண்ணாமலையும் கர்நாடகா தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ளார். கர்நாடகா மாநில பாஜக தேர்தல் பொறுப்பாளராக மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானும், இணை பொறுப்பாளராக அண்ணாமலையும் நியமிக்கப்பட்டனர். இதனால் அண்ணாமலை கடந்த சில வாரங்களாகவே கர்நாடகாவில் முகாமிட்டு வேட்பாளர் தேர்வு, தலைவர்களின் பிரசாரம் உள்ளிட்ட பல்வேறு பணிகளை தீவிரமாக மேற்கொண்டு வருகிறார். இதற்கிடையே கர்நாடகா மாநில பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலிலும் அண்ணாமலையின் பெயர் இடம்பெற்றுள்ளது.
பணம் கொண்டு சென்றதாக புகார்: இந்நிலையில் தான் கடந்த 17 ம் தேதி உடுப்பிக்கு ஹெலிகாப்டரில் அண்ணாமலை சென்ற நிலையில் அவர் கட்டுக்கட்டாக பணம் எடுத்து சென்றதாக காங்கிரஸ் கட்சியின் வினய் குமார் சொரகே பரபரப்பான குற்றச்சாட்டை முன்வைத்தார். இதனை அண்ணாமலை முற்றிலுமாக மறுத்தார். அதேபோல் தேர்தல் ஆணையமும் விளக்கம் அளித்தது. அதில் அண்ணாமலை பயணித்த ஹெலிகாப்டர், கார் சோதனை நடத்தப்பட்டது. அப்போது அவர் பணம் எதுவும் எடுத்து செல்லவில்லை என கூறியது. இதையடுத்து அந்த பிரச்சனைக்கு தீர்வு காணப்பட்டது.
வெளியேற்றக்கோரி புகார்: இதன் தொடர்ச்சியாக தான் தற்போது காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளரான நாகராஜ் கவுடா கர்நாடகா மாநில தலைமை தேர்தல் அதிகாரிக்கு அண்ணாமலைக்கு எதிராக கடிதம் ஒன்றை அளித்துள்ளார். அதில், ‛‛ கர்நாடகாவில் ஐபிஎஸ் அதிகாரியாக பணியாற்றியவர் அண்ணாமலை. அவர் தற்போது கர்நாடகா சட்டசபை தேர்தலில் பாஜகவின் நட்சத்திர பேச்சாளராக உள்ளார். மேலும் கர்நாடகா முழுவதும் அவர் சுற்றுப்பயணம் செய்து பிரசாரம் மேற்கொள்கிறார்.

தேர்தலுக்கு பாதிப்பு: பணம்பெங்களூர் உள்பட மாநிலத்தின் பல்வேறு இடங்களில் அண்ணாமலை பணியாற்றி உள்ளார். மாஜி ஐபிஎஸ் அதிகாரி என்பதால் தனது செல்வாக்கை பயன்படுத்தி போலீஸ் அதிகாரிகளை பாஜகவுக்கு ஆதரவாக செயல்பட வைக்கலாம். கர்நாடகா மாநில முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி என்பதால் கர்நாடகத்தில் தேர்தல் பிரசாரம் செய்யவும் கர்நாடகாவில் தங்கவும் தேர்தல் ஆணையம் தடை விதித்து அவரை வெளியேற்ற வேண்டும்'' என கூறப்பட்டுள்ளது. இதுபற்றி புகார் அளித்த காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் நடராஜ் கவுடாவிடம் கேட்டபோது, ‛‛அண்ணாமலை தனது செல்வாக்கை பயன்படுத்தி பணம் பட்டுவாடா செய்யலாம். இதனால் தேர்தல் நேர்மையான முறையில் நடப்பதில் பாதிப்பு ஏற்படும். இதனால் காங்கிரஸ் கட்சி சார்பில் நான் அண்ணாமலைக்கு எதிராக புகார் அளித்தேன்'' என்றார்.
புகார் அளித்து ஏன்: இந்நிலையில் தான் காங்கிரஸ் கட்சியின் இந்த புகாரின் பின்னணியில் உள்ள அம்சம் பற்றிய விபரம் வெளியாகி உள்ளது. அதாவது அண்ணாமலை 2011ல் ஐபிஎஸ் அதிகாரியானார். இவர் கர்நாடகாவில் பணியில் சேர்ந்து செயல்பட்டு வந்தார். உடுப்பி மாவட்ட கார்கலா மற்றும் உடுப்பி ஏஎஸ்பியாவும், அதன்பிறகு உடுப்பி மற்றும் சிக்கமகளூர் மாவட்ட எஸ்பியாகவும் பணியாற்றினார். அதன்பிறகு பெங்களூர் தெற்கு மண்ட துணை போலீஸ் கமிஷனராகவும் செயல்பட்டார். இதனால் பல போலீஸ் அதிகாரிகள் அவருக்கு பழக்கம் உள்ளது. மேலும் அவரது பேட்ச் ஐபிஎஸ் அதிகாரிகளுடன் அண்ணாமலைக்கு நட்பு இருக்கலாம். இதன்மூலம் அண்ணாமலை போலீஸ் அதிகாரிகளை பாஜகவுக்கு ஆதரவாக செயல்பட வைக்கலாம் என காங்கிரஸ் நினைக்கும் நிலையில் இந்த புகார் அளிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
-
ஷாக்கில் சரவணன்! எடப்பாடிக்காக விழுந்து விழுந்து வேலை பார்ப்பாரே அவரா? பாஜக விஐபிகள் மெகா ஸ்கெட்ச் -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
சென்னையில் 16 தொகுதிகளில் அதிமுக போட்டியிடும் 13 தொகுதிகள் விவரம்.. 3ல் கூட்டணி கட்சிகள் போட்டி -
14 அமைச்சர்களிடம் நேருக்கு நேர் மோதல் இல்லை.. பாஜக, அமமுகவை கோர்த்துவிட்ட எடப்பாடி பழனிசாமி! -
அண்ணாமலை சட்டமன்றம் செல்ல வேண்டும்.. அதுவே என் விருப்பம்.. வானதி சீனிவாசன் சொன்ன வார்த்தை! -
தேர்தலில் போட்டியில்லை.. டெல்லிக்கு கடிதம் எழுதிய அண்ணாமலை.. பாஜகவில் டிவிஸ்ட் -
அதிவேகத்தில் அதிமுக.. ஏரியா பிரித்த எடப்பாடி! அதிமுக கூட்டணியில் யார்? எங்கே போட்டி? உத்தேச லிஸ்ட்! -
நடிகை கவுதமியை மீண்டும் ஏமாற்றிய அதிமுக – பாஜக.. ராஜபாளையம் ஜான் பாண்டியனுக்கு ஒதுக்கியதன் பின்னணி -
18 தொகுதிகளில் பாஜக வெல்வது கடினம்? திமுகவிடம் கோர்த்துவிட்ட எடப்பாடி பழனிச்சாமி! தாமரைக்கு ‘செக்’ -
பாஜகவுக்கு பல்ப் கொடுத்த எடப்பாடி.. வெயிட்டான தொகுதிகளை வச்சுகிட்டாரே! எந்தெந்த தொகுதிகளில் போட்டி? -
30 சிறுமிகளிடம் சில்மிஷம்.. தொக்காக சிக்கிய பாஜக கவுன்சிலர் மகன்! கோவாவில் ஷாக் -
"அந்த" 54 தொகுதிகள் தான் மேஜிக்.. மம்தாவை காலி செய்ய சக்கர வியூகம்.. இறங்கி அடிக்கும் பாஜக!












Click it and Unblock the Notifications