Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மாரியம்மன் கோவிலில் மனைவியுடன் சூர்யகுமார் யாதவ்.. சாமி தரிசனத்தின் பின்னணியில் இப்படியொரு காரணமா?

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி பேட்ஸ்மேன் சூர்யகுமார் யாதவ், தனது மனைவி தேவிஷா ஷெட்டியுடன் மாரியம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்த போட்டோ மற்றும் வீடியோக்கள் இணையதளங்களில் பரவி வருகிறது. இந்நிலையில் அதன் பின்னணியில் உள்ள சுவாரசிய தகவல் வெளியாகி உள்ளது.

ஐசிசி 20 ஓவர் உலககோப்பையை இந்திய அணி வென்று அசத்தியுள்ளது. கடந்த கடந்த 29 ம் தேதி மேற்கிந்திய தீவின் பார்படாஸ் மைதானத்தில் நடந்த போட்டியில் 7 ரன்கள் வித்தியாசத்தில் தென்ஆப்பிரிக்காவை வீழ்த்தி இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது.

suryakumar yadav cricket mariyamman temple

இதன்மூலம் கடந்த 2007 ம் ஆண்டுக்கு பிறகு 17 வருட இடைவெளியில் மீண்டும் இந்திய அணி டி20 உலககோப்பையை வென்று அசத்தியுள்ளது. அதன்பிறகு கடந்த 4ம் தேதி இந்திய அணி வீரர்கள் இந்தியா திரும்பினர். பிரதமர் மோடியை கோப்பையுடன் சந்தித்தனர். அதன்பிறகு மும்பையில் கோப்பையுடன் வீரர்கள் ஊர்வலம் சென்றனர்.

இந்த இறுதி போட்டியில் இந்தியா சாம்பியன் பட்டம் வெல்ல மிக முக்கிய காரணமாக இருந்தவர். இவர் தான் கடைசி ஓவரில் தென்ஆப்பிரிக்கா வீரர் டேவிட் மில்லர் அடித்த பந்தை சிக்ஸ்க்கு விடாமல் ஜம்ப் செய்து அற்புதமாக கேட்ச் பிடித்தார். இது தான் ஆட்டத்தின் திருப்பு முனையாக அமைந்தது. மேலும் 8 போட்டிகளில் விளையாடிய அவர் 199 ரன்கள் குவித்து இந்திய அணியின் வெற்றிக்கு வித்திட்டார்.

suryakumar yadav cricket mariyamman temple

இந்நிலையில் தான் தற்போது இணையதளங்களில் போட்டோ ஒன்று வேகமாக பரவி வருகிறது. அதாவது சூர்யகுமார் யாதவும் அவரது மனைவி தேவிஷா ஷெட்டியும் மாரியம்மன் கோவிலில் தரிசனம் செய்யும் போட்டோ தான் அது. இந்நிலையில் தான் அவர்களின் இந்த தரிசனத்தின் பின்னணியில் உள்ள சுவாரசிய தகவல் வெளியாகி உள்ளது.

அதாவது சூர்யகுமார் யாதவும், அவரது மனைவி தேவிஷா ஷெட்டியும் கர்நாடகா மாநிலம் தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூரு விமான நிலையத்தில் வந்திறங்கினர். அன்றைய தினம் அவர்களின் 8 வது ஆண்டு திருமண நாளாகும். தேவிஷா ஷெட்டியின் சொந்த ஊர் மங்களூராகும். இதையடுத்து அவர்கள் 2 பேரும் விமான நிலையத்தில் கேக் வெட்டி திருமண நாளை கொண்டாடினர்.

அதன்பிறகு 9 ம்தேதி இருவரும் உடுப்பியின் காபுவில் உள்ள மாரிகுடி அம்மன் கோவிலில் (மாரியம்மன் கோவில்) தரிசனம் செய்தனர். இந்த கோவில் என்பது தேவிஷா ஷெட்டியின் மனதுக்கு மிகவும் நெருக்கமானதாக கூறப்படுகிறது. இதனால் இந்தியா டி20 உலககோப்பையை வென்றால் கோவிலுக்கு கணவருடன் வந்து தரிசனம் செய்வதாக தேவிஷா ஷெட்டி வேண்டியுள்ளார்.

தற்போது இந்தியா வென்று டி20 உலககோப்பையை வென்ற நிலையில் அவர் தனது கணவர் சூர்யகுமார் யாதவுடன் காபு மாரியம்மன் கோவிலில் தரிசனம் செய்துள்ளார். உலககோப்பையை வென்றது மற்றும் திருமண நாள் ஆகிய இரண்டு கொண்டாட்டங்களையொட்டி தேவிஷா ஷெட்டி தனது கணவர் சூர்யகுமார் யாதவை மாரியம்மன் கோவிலுக்கு அழைத்து வந்து சாமி தரிசனம் செய்துள்ளார்.

இந்த போட்டோ தான் தற்போது இணையதளங்களில் வேகமாக பரவி வருகிறது. சூர்யகுமார் யாதவ் - தேவிஷா ஷெட்டி தம்பதி கோவிலில் சிறப்பு பூஜை செய்து வழிபாடு நடத்தினர். முன்னதாக கோவில் நிர்வாகம் சார்பில் மாலை அணிவிக்கப்பட்டு அவர்களுக்கு வரவேற்பு வழங்கப்பட்டது.

மேலும் சூர்யகுமார் யாதவின் மனைவி தேவிஷா கர்நாடகாவின் தட்சின கன்னடா மாவட்டம் மங்களூரை சேர்ந்தவராக இருந்தாலும் கூட மும்பையில் தான் வசித்து வந்தார். அங்கு அவரும், சூர்யகுமார் யாதவும் ஒரே கல்லூரியில் பயின்ற நிலையில் காதலித்தனர். அதன்பிறகு இருவரும் கடந்த 2016ம் ஆண்டில் திருமணம் செய்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+