மனைவியின் 8 கல்யாணம்.. கணவன் சொன்னதுமே பதறிய பெண்.. "இல்லீங்க ஜட்ஜ் ஐயா, வெறும் 4 தான்.. பரபர கோர்ட்
பெங்களூரு: கணவன் - மனைவி விவாகரத்து வழக்கு ஒன்று நீதிமன்றத்துக்கு வந்துள்ளது.. இந்த வழக்கு விசாரணையின்போது, இரு தரப்பு வழக்கறிஞர்களும் நீதிமன்றத்தில் எடுத்துரைத்த வாதங்கள் தற்போது வெளியாகி அனைவரையும் திக்குமுக்காட வைத்து வருகிறது
குடும்ப வன்முறை புகார் மனுக்களை நேரடியாக ரத்து செய்யும் அதிகாரம் உயர்நீதிமன்றத்துக்கு இல்லை என்று, 3 நீதிபதிகள் அடங்கிய முழு அமர்வு, கடந்த 2022-ல் விசாரித்து தீர்ப்பும் வழங்கியிருக்கிறது.

வழக்குகள்: இது தொடர்பாக வழக்கினை அப்போது விசாரித்த நீதிபதிகள், "குடும்ப வன்முறை தடைச்சட்டத்தின்கீழ் குற்றவியல் நடுவர் நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்படும் புகார்களை ரத்து செய்யக்கோரி குற்றவியல் விசாரணை முறைச்சட்டத்தின் 482-வது பிரிவின்கீழ் தொடரப்படும் வழக்குகளை விசாரிக்க உயர் நீதிமன்றத்துக்கு அதிகாரம் இல்லை..
இதுதொடர்பாக குற்றவியல் நடுவர் நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்படும் புகார்களை குடும்ப நல நீதிமன்றங்களுக்கு மாற்ற முடியாது.. குற்றவியல் நடுவர் நீதிமன்றங்கள் பிறப்பிக்கும் தீர்ப்புகளை எதிர்த்து முறையாக அமர்வு நீதிமன்றத்திலும் அதன்பிறகு, உயர் நீதிமன்றத்திலும் மேல்முறையீடு செய்யலாம்..
நீதிமன்றம் உத்தரவு: இந்த உத்தரவு, இனிமேல் தாக்கல் செய்யப்படும் வழக்குகளுக்கு மட்டுமே பொருந்தும்.. ஏற்கெனவே குடும்பநல நீதிமன்றங்களுக்கு மாற்றப்பட்ட வழக்குகளுக்கு பொருந்தாது.. குற்றவியல் நடுவர் நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்படும் புகார்களை குடும்ப நல நீதிமன்றங்களுக்கு மாற்ற முடியாது" என்று நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்திருந்தது.
இந்நிலையில், குடும்ப வன்முறை வழக்கை ரத்து செய்யக்கோரி வழக்கு ஒன்று கர்நாடக மாநிலத்தில் நடந்துள்ளது.. இதுதான் தற்போது இணையதளத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
மனைவி கொடுமை: விஜயநகராவின் ஹொஸ்பேட்டை சேர்ந்தவர் ராஜா உசேன்... இவர் தன்னுடைய மனைவியை அடித்து கொடுமைப்படுத்தியதாக தெரிகிறது.. எனவே, ராஜா மீது, மனைவியை தாக்கி கொடுமைப்படுத்தியதாக, குடும்ப வன்முறை வழக்கு பதிவானது...
இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி, ஹைகோர்ட்டில் ராஜா மனு தாக்கல் செய்தார்... இதையடுத்து, நீதிபதி நாகபிரசன்னா முன்னிலையில், இம்மனு மீதான விசாரணை நேற்று நடைபெற்றது.. அப்போது மனுதாரர் ராஜா சார்பில் ஆஜரான வழக்கறிஞர், "என் மனுதாரர் மீது பொய்யான வழக்கு பதியப்பட்டுள்ளது.. இப்படி பதிவு செய்யப்பட்ட வழக்கிற்கு, அடிப்படை முகாந்திரம் இல்லை. இவரது மனைவி, என்னுடைய மனுதாரர் ராஜா உட்பட மொத்தம் 8 பேரை திருமணம் செய்துள்ளார்.
8 திருமணங்கள்: இந்த 8 பேரில் என்னுடைய மனுதாரர் தான் கடைசி கணவர்... ஏற்கனவே நடந்த 7 திருமணம் பற்றி, மனுதாரர் ராஜா கேட்டதால், கொடுமைப்படுத்தியதாக அவர் மீது வழக்கு தொடர்ந்துள்ளார்" என்றார்.
வழக்கறிஞர் இப்படி சொல்லிக் கொண்டிருந்தபோதே, மனைவி தரப்பில் ஆஜரான வக்கீல், "இல்லை.. மனுதாரர் சொல்வது முற்றிலும் பொய்... ராஜாவின் மனைவி 8 திருமணம் எல்லாம் செய்யவில்லை, 4 திருமணம் தான் செய்துள்ளார்... முதல் கணவர் இறந்தபிறகு, 3 திருமணங்கள் செய்துள்ளார்... மனுதாரர் தான் கடைசி கணவர்... 8 திருமணம் என்று பொய் சொல்லும் கணவர் மீது, அவதுாறு வழக்கு தொடர போகிறோம்" என்றார்.
ஆவணங்கள்: இதைக்கேட்டதும் மனுதாரரின் தரப்பு வழக்கறிஞர் குறுக்கிட்டு, "இல்லை.. இல்லை.. மனைவி 8 திருமணங்கள் செய்திருக்கிறார்.. எங்களிடம் அதற்கான ஆவணங்கள் உள்ளன. கடந்த முறை இதுசம்பந்தமாக நடந்த விசாரணையின்போது, மனுதாரர் உட்பட 5 கணவர்கள் ஆஜராக வந்தார்கள்.. ஆனால், அவர்களிடம் விசாரணை நடத்த முடியவில்லை... திருமணம் என்ற பெயரில் 8 பேரை அப்பெண் ஏமாற்றி உள்ளார். அவரிடம் குற்றப்பிரிவு போலீசார் விசாரிக்க உத்தரவிட வேண்டும்" என்றார்.
இந்த 2 தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, மனு மீதான விசாரணையை 27ம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.. அத்துடன், அந்த பெண் 8 திருமணங்கள் செய்தது குறித்த ஆவணங்களை சமர்ப்பிக்கும்படியும் உத்தரவிட்டிருக்கிறார்.












Click it and Unblock the Notifications