பிளேஆப் சுற்றுக்கு செல்லுமா ஆர்சிபி? பெங்களூரில் சம்பவம் செய்ய போகும் மழை? என்ன நடக்கும்- வெதர்மேன்
பெங்களூர்: மழை காரணமாக இன்றைய ஆர்சிபி vs குஜராத் போட்டி நடக்குமா எனப் பலருக்கும் சந்தேகம் இருக்கிறது. இதனிடையே இது குறித்து தமிழ்நாடு வெதர்மேன் தனது ட்விட்டரில் விளக்கியுள்ளார்.
இந்தாண்டு ஐபிஎல் தொடர் இப்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. இன்றுடன் லீக் சுற்றுகள் நிறைவடைகிறது. இதுவரை இல்லாத அளவுக்கு ப்ளே ஆப் சுற்றுக்கு கடும் போட்டி நிலவுகிறது.
நேற்று வரை குஜராத் அணி மட்டுமே ப்ளே ஆப் சுற்றை உறுதி செய்திருந்தது. நேற்றைய போட்டியில் வென்றதன் மூலமே சென்னை மற்றும் லக்னோ அணிகள் பிளேஆப் சுற்றுக்குத் தகுதி பெற்றன.

சென்னை மற்றும் லக்னோ அணிகள் சமமாக 17 புள்ளிகளைப் பெற்றிருந்தாலும் நெட் ரன்ரேட் அடிப்படையில் சென்னை 2ஆவது இடத்தை பிடித்தது. இதன் மூலம் சென்னைக்கு இறுதிச் சுற்றுக்குச் செல்ல இரண்டு வாய்ப்புகள் கிடைக்கும். முதலாம் குவாலிப்பையர் போட்டியில் சென்னை அணி வரும் மே 23ஆம் தேதி குஜராத் அணியை எதிர்கொள்கிறது. அதேபோல மறுநாள் அதாவது மே 24ஆம் தேதி எலிமினேட்டர் போட்டி நடக்கிறது.
எலிமினேட்டர் போட்டியில் லக்னோ எந்த அணியை எதிர்கொள்ளும் என்பது இப்போது வரை சஸ்பென்ஸாகவே இருக்கிறது. தற்போதைய சூழலில் பெங்களூர், ராஜஸ்தான், மும்பை என 3 அணிகளும் 14 புள்ளிகளைப் பெற்றுள்ளது. இருப்பினும், நெட் ரன் ரேட் அடிப்படையில் பெங்களூர் 4ஆவது இடத்தில் இருக்கிறது. ராஜஸ்தான், மும்பை அணிகள் 5,6ஆம் இடங்களைப் பிடித்துள்ளன.
இதில் ராஜஸ்தான் அணிக்கு அடுத்த சுற்றுக்குச் செல்லும் வாய்ப்புகள் குறைவு. ஏனென்றால் ராஜஸ்தான் தனது அனைத்து லீக் போட்டிகளிலும் விளையாடி விட்டது. இன்று மும்பை, பெங்களூர் என இரு அணிகளும் தோற்றால் மட்டுமே ராஜஸ்தானுக்கு வாய்ப்பு. அதுவும் பெங்களூர் அணி மோசமாகத் தோற்றால் மட்டுமே ராஜஸ்தான் அடுத்த சுற்றுக்குச் செல்லும்.
பெங்களூர் மற்றும் மும்பை அணிகளில் தங்கள் போட்டியில் வெல்லும் அணி அடுத்த சுற்றுக்குச் செல்லும். இரு அணிகளும் வென்றால் ரன்ரேட் அடிப்படையில் ஒரு அணி செல்லும். தற்போதைய சூழலில் பெங்களூர் அணிக்கே ரன்ரேட் சாதமாக உள்ளது. ரன்ரேட் சாதமாக இருந்தாலும் கூட பெங்களூருக்கு வானிலை இப்போது எமனாக மாறியுள்ளது. அங்கு மழை பெய்யும் நிலையில் போட்டி நடைபெறுமா என்பதில் சந்தேகமே இருக்கிறது.

போட்டி ரத்து செய்யப்பட்டால் இரு அணிகளுக்கும் ஒரு புள்ளி வழங்கப்படும். அப்போது பெங்களூர் 15 புள்ளிகளைப் பெறும். அதேநேரம் மும்பை இன்றைய போட்டியில் வென்றால் 16 புள்ளிகளைப் பெற்று ப்ளேஆப் சென்றுவிடும். எனவே, இன்றைய போட்டி எப்படியாவது நடக்க வேண்டும் எனப் பெங்களூர் ரசிகர்கள் வேண்டி வருகின்றனர். இதற்கிடையே வானிலை அங்கே எப்படி இருக்கும் என்பது குறித்த தகவல்களைத் தமிழ்நாடு வெதர்மேன் தனது ட்விட்டரில் பல ட்வீட்கள் மூலம் பகிர்ந்துள்ளார்.
அதில் அவர், "பலரும் இன்றை ஆர்சிபி vs குஜராத் போட்டி வாஷ்அவுட் ஆக வேண்டும் என வேண்டிக் கொண்டிருக்கிறார்கள்.. சிலர் போட்டி நடக்க வேண்டும் என வேண்டிக் கொண்டு இருக்கிறார். எனது அனுபவத்தில் சொல்கிறேன்.. இன்று போட்டி நடக்கும்.. ஆனால் அவர்கள் குறைய வாய்ப்பு இருக்கிறது. குறுகிய போட்டியாக இருந்தாலும் நிச்சயம் ரிசல்ட் இருக்கும்" எனப் பதிவிட்டுள்ளார்.
அதேபோல மற்றொரு ட்விட்டில், "பெங்களூரில் பெய்யும் முதல் ஸ்பெல் விரைவில் நிற்கும். ஹார்ஸ்லி ஹில்ஸுக்கு அருகிலுள்ள மேகக் கூட்டம், இப்போது வீசும் கடுமையான இடியுடன் கூடிய மழையைப் பின்பற்றி, மாலை 5.30-6.30 மணியளவில் அடையக் கூடும்" என பதிவிட்டுள்ளார். இந்த ட்வீட்டை அவர் 4.20 மணியளவில் பதிவிட்டிருந்தார்.
கடைசியாக அவர் 5.30 மணியளவில் பதிவிட்ட ட்வீட்டில், "2வது ஸ்பெல் மேகங்கள் வலுவிழந்து வருகின்றன.. மிக மோசமான நிலையில் அடுத்த 1 மணிநேரத்தில் லேசான மழை அல்லது தூறல் இருக்கும்.. போட்டி நிச்சயம் நடக்கும்.. மைதானத்தில் மழை நீர் தேங்கி நின்றால் போட்டி சற்று தாமதமாகத் தொடங்கலாம்.. இருப்பினும், மழையால் போட்டியில் பாதிப்பு இருக்காது. போட்டி நிச்சயம் நடக்கும் ரிசல்டும் கிடைக்கும்" என்று பதிவிட்டுள்ளார்.
-
கடைசி 4 போட்டிகளில் 3ல் சேப்பாக்கம் மண்ணில் ஆடும் சிஎஸ்கே.. சென்னை அணியின் அட்டவணை.. முழு விவரம்! -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்!












Click it and Unblock the Notifications