டிரைவர் இல்லாமல் ஓடும் கார்.. பெங்களூரில் அறிமுகம்! ஆட்டோமொபைல் துறையில் அடுத்த ஸ்டெப் வைத்த இந்தியா
பெங்களூர்: டெஸ்லா காரை போல, ஓட்டுநரே இல்லாமல் இயங்கும் தானியங்கி கார் பெங்களூரில் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது. விப்ரோ, இந்திய அறிவியல் நிறுவனம் மற்றும் ஆர்.வி. பொறியியல் கல்லூரி இணைந்து இந்த காரை உருவாக்கியுள்ளன. இந்தியாவில் ஓட்டுநர் இல்லாமல் இயங்கும் கார் அறிமுகப்படுத்தப்பட்டது இதுவே முதல்முறையாகும்.
பிரபல ஆன்மீகத் தலைவரான ஸ்ரீ சத்யத்மதீர்த்த சுவாமிகள், இந்த காரில் பயணிக்கும் வீடியோ சோஷியல் மீடியாக்களில் பரவலாக ஷேராகி வருகிறது.

உலகின் பல்வேறு நாடுகளில், டிரைவர் இல்லாமல் இயங்கும் கார்கள் இருக்கின்றன. ஆனால், இந்தியாவில் இப்படியான கார்கள் கிடையாது. எனவே இந்தியாவிலும் இதுபோன்ற கார்களை உருவாக்கும் நோக்கில் விப்ரோவும், இந்திய அறிவியல் நிறுவனம் மற்றும் WIRIN எனும் ஆட்டோமொபைல் உதிரி பாகங்கள் உற்பத்தி நிறுவனமும் இணைந்து இந்த காரை உருவாக்கியிருக்கின்றன. சாலைகளில் எங்கு பள்ளம், எங்கு மேடு இருக்கிறது என்பதே தெரியாது இதெல்லாம்தான் இந்திய சாலைகளின் மைனஸ் பாயிண்ட்.
அதேபோல போக்குவரத்து நெரிசலும், போக்குவரத்து விதிகளை வாகனங்கள் முறையாக பின்பற்றாததும் இன்னொரு பிரச்சனை. இதையெல்லாம் சமாளிக்கும் விதத்தில் ஆட்டோ பைலட் காரை உருவாக்குவது மிக சவாலான பணி. இந்த சவால்களை எல்லாம் கணக்கில் கொண்டுதான் தற்போது தானியங்கி கார் உருவாக்கப்பட்டிருக்கிறது. இதற்கான திட்டம் கடந்த 2019ல் தொடங்கப்பட்டது. ஆராய்ச்சியாளர்கள், தொழில்நுட்ப நிபுணர்கள், மாணவர்கள் என பல்வேறு தரப்பினரும் சுமார் 6 ஆண்டுகள் உழைத்து தற்போது இந்த காரை வெற்றிகரமாக உருவாக்கியிருக்கிறார்கள்.
கேமராக்கங்கள், சென்சார்கள் மற்றும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் ஆகியவற்றை இணைந்து இந்த கார் உருவாக்கப்பட்டிருக்கிறது. இந்த கார் இன்னும் முழுமையாக வணிக பயன்பாட்டுக்கு வரவில்லை. சோதனை கட்டத்தில்தான் இருக்கிறது. ஆனாலும், இந்தியாவாலும் சொந்தமாக தானியங்கி காரை உருவாக்க முடியும் என்பதற்கு இது சிறந்த உதாரணமாக இருக்கிறது. அதேபோல ஓட்டுநர் இல்லாத தானியங்கி கார்களை உருவாக்கி வரும் நிறுவனங்களுக்கும் இந்த கார் புதிய நம்பிக்கையை கொடுத்திருக்கிறது.
🚨 India’s first driverless car has been unveiled by IISc, Wipro, and RV College in Bengaluru. pic.twitter.com/AlnNvnAPkc
— Indian Tech & Infra (@IndianTechGuide) October 30, 2025
இக்கார் பெங்களூரின் ஆர்.வி. கல்லூரி வளாகத்தில் சோதனை ஓட்டமாக இயக்கப்பட்டிருக்கிறது. இது சாதாரண மக்கள் பயன்படுத்தும் காராக மாற இன்னும் பல மாற்றங்கள் செய்யப்பட வேண்டும். இதற்கு கொஞ்சம் காலம் ஆகும். ஆனாலும் இது புதிய நம்பிக்கையை கொடுத்திருப்பதாக ஆட்டோமொபைல் துறையினர் கூறுகின்றனர்.
இந்த காரில் தற்போது பாதுகாப்பு அம்சங்களையும், அதேபோல உண்மையான சாலை போக்குவரத்து குறித்த அப்டேட்டையும் சேர்க்க வேண்டும். இதை சேர்த்த பின்னர் மீண்டும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, அரசு அங்கீகாரத்துடன் பின்னர் இந்த கார் மக்கள் பயன்பாட்டுக்கு வரும் என்று சொல்லப்படுகிறது.
-
பெங்களூர்: என்னடா அநியாயம் பண்றீங்க.. வீட்டு வாடகை ரூ.1.1 லட்சமா.. அதிர்ச்சியில் ஐடி ஊழியர்கள்! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications