புத்தாண்டு கொண்டாட்டத்தில் கணவன் கண் எதிரில் மனைவிக்கு பாலியல் சீண்டல்.. பெங்களூரில் கொடுமை
பெங்களூர்: பெங்களூரில் புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது, கணவரோடு இருந்த பெண் ஒருவர் பாலியல் சீண்டலுக்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பெங்களூரில் எம்ஜிரோடு பகுதியில் நள்ளிரவில் புத்தாண்டு விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். ஆண்களும், பெண்களும் என பல ஆயிரக்கணக்கானோர் நள்ளிரவில் எம்ஜி ரோடு பகுதியில் கூடி நின்று, புத்தாண்டை வரவேற்பார்கள்.

ஆனால் சமீப காலமாக இந்த கூட்ட நெரிசலை பயன்படுத்தி காமுகர்கள், அங்கு வரும் பெண்களின் உடலில் கண்ட இடங்களையும் தொடுவது, சீண்டுவது அதிகரித்துள்ளது.
கடந்த வருடம், மற்றும் அதற்கு முந்தைய வருடம் இதேபோன்ற புகார் காவல் நிலையத்தில் பதிவான நிலையில், இந்த வருட புத்தாண்டு கொண்டாட்டத்திலும் அத்துமீறல் அரங்கேறியுள்ளது.
ஜெயநகரை சேர்ந்த கணவரும், மனைவியும், எம்ஜிரோடு பகுதிக்கு சென்று நள்ளிரவில் புத்தாண்டு கொண்டாட்டத்தில் பங்கேற்றனர். கொண்டாட்டங்கள் நிறைவடைந்து நள்ளிரவு 1 மணியளவில், அவர்கள் அருகேயுள்ள ரிச்மண்ட் சர்க்கிள் பகுதிக்கு வந்தபோது, மூன்று குடிகாரர்கள், வழிமறித்து, அந்த பெண்ணிடம் பாலியல் சீண்டல் செய்துள்ளனர்.
தட்டிக்கேட்ட கணவரை தாக்கி, அவரின் பர்ஸ், செல்போன் போன்றவற்றை பறித்துக்கொண்டு தப்பியோடியுள்ளனர். இதுகுறித்து அசோக் நகர் காவல் நிலையத்தில் புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது. சம்பவத்தில் ஈடுபட்ட ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
-
சிறைக்கு தள்ளப்படும் Byjus ரவீந்திரன்.. பெங்களூரை கலக்கிய Byju's நிறுவனருக்கு கெட்ட காலம்! -
கர்நாடக அரசியலில் அதிரடி.. 1 முதல்வர், 4 துணை முதலமைச்சர்கள்.. டிகே.சிவக்குமார் மாஸ்டர் பிளான்! -
இந்திய டெக் ஊழியர்களை கதறவிட்ட Meta.. 3 பிரிவில் கண்ணை மூடிக்கொண்டு பணிநீக்கம்.. எங்குபோய் முடியுமோ -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு?












Click it and Unblock the Notifications