ஒரே பைக்கில் மூன்று பேர்.. மாறி மாறி முத்தம் கொடுத்த இளம்பெண்.. பெங்களூர் சாலையில் அநாகரீகம்
பெங்களூர்: பரபரப்பான பெங்களூர் சாலையில், ஒரே பைக்கில் மூன்று பேர் சென்றதோடு மட்டுமின்றி, பின்னால் இளைஞரும் - இளம்பெண்ணும் நடு ரோடு என்றும் பாராமல் மாறி மாறி முத்தமிட்டுக்கொண்டு சல்லாபத்தில் ஈடுபடும் வீடியோ இணையத்தில் வெளியாகி வேகமாக பரவி வருகிறது. சாலையில் செல்லும் மற்ற வாகன ஓட்டிகளை முகம் சுளிக்க வைத்த இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். சம்பந்தபட்ட இளைஞரிடம் அபராதம் வசூல் செய்துள்ளனர்.

நாட்டிலேயே அதிக போக்குவரத்து நெரிசல் உள்ள நகரம் என்றால் அது பெங்களூர்தான். இந்தியாவின் சிலிகான் வாலி என்ற பெருமையை பெற்ற பெங்களூர் உலக அளவில் அதிக போக்குவரத்து நெரிசல் காணப்படும் நகரங்களில் ஒன்றாக உள்ளது. காலை மற்றும் மாலை நேரங்களில் பீக் நேரத்தில் சில கிலோ மீட்டர் தொலைவு செல்வதற்கு வாகன ஓட்டிகள் படும் பாடு திண்டாட்டமாகவே இருக்கும்.
பெங்களூர் சாலை
ஆனால், இத்தனை போக்குவரத்து நெரிசலுக்கு மத்தியிலும் சில வாகன ஓட்டிகள் சாலைகளில் போக்குவரத்து விதிகள் என்றால் என்ன? என்று கேட்கும் அளவுக்கு வாகனத்தை ஓட்டும் காட்சிகளும் நாள்தோறும் அரங்கேறுகின்றன. ரேசிங் கிரவுண்டில் செல்வது போல பைக்கை ஓட்டி செல்வது, லேப்டாப்பில் அலுவலக வேலை பார்த்துக்கொண்டே காரை ஓட்டிசெல்வது என சில வாகன ஓட்டிகள் டிராபிக் ரூல்ஸ்களை மதிக்காமல் வாகனத்தை ஓட்டி சென்று தங்களுக்கு ஆபத்தை ஏற்படுத்துவது மட்டும் இன்றி பிற சக வாகன ஓட்டிகளுக்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்தும் விதமாக வாகனம் ஓட்டி செல்கிறார்கள்..
மாறி மாறி முத்தமிட்ட இளம்பெண் - வாலிபர்
இந்த நிலையில் ஒரே பைக்கில் மூன்று பேர் சென்றதோடு, பைக்கில் பின்னால் இருந்த இளம்பெண்ணும் - வாலிபரும் மாறி மாறி முத்தமிட்டுக்கொண்டு செல்லும் வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. பட்டப்பகலில் நடுரோட்டில் இளம்பெண்ணும், வாலிபரும் செய்த செயல் மற்ற பயணிகளுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் பயணம் செய்ததோடு, அனைவரையும் முகம் சுளிக்க வைக்கும் வகையில் இருந்தது. இது தொடர்பான விவரங்களை பார்க்கலாம்.
பெங்களூர் ராகிகுடா பேருந்து நிலையத்தில் இருந்து மெட்ரோ ரயில் நிலையம் செல்லும் சாலையில், ஒரு மோட்டார் சைக்கிள் சென்றுகொண்டிருந்தது. அதில் 2 வாலிபர்கள் ஒரு இளம்பெண் பயணம் செய்தனர். ஒரு வாலிபர் பைக்கை ஓட்டிச் செல்ல, மற்றொரு வாலிபரும் இளம்பெண்ணும் பின்னால் அமர்ந்திருந்தனர். பைக்கில் சென்று கொண்டிருக்கும்போதே, நடு ரோடு என்றும் பாராமல் பின்னால் இருந்த இளைஞரும் - இளம்பெண்ணும் ஒருவரை ஒருவர் மாறி மாறி முத்தமிட்டுக்கொண்டு அநாகரீக செயலில் ஈடுபட்டுள்ளனர்.
வீடியோ எடுத்து இணையத்தில் விட்ட நபர்
இதனை ஒருசில வாகன ஓட்டிகள் கண்டும், காணாதபடி சென்றனர். மற்ற வாகன ஓட்டிகளுக்கு சங்கடத்தை ஏற்படுத்தும் வகையில் இளைஞரும் இளம்பெண்ணும் சென்றதை பார்த்த சிலர், இதுகுறித்து அவர்களிடம் கேட்டுள்ளனர். அதற்கு அந்த இளைஞர்கள் நாங்கள் அப்படித்தான் செல்வோம் என்று சொல்லி மிரட்டியதாக கூறப்படுகிறது. அப்போது அவர்கள் பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த மற்றொரு வாலிபர் இதனை வீடியோ பதிவு செய்துள்ளார்.
பின்னர் இந்த வீடியோவை அந்த நபர் தன் எக்ஸ் தளத்தில் பகிர்ந்தார். இதையடுத்து இந்த வீடியோ வைரலானது. வீடியோவை பார்த்த பலரும், அந்த வாலிபர்கள் மற்றும் இளம்பெண்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து வந்தனர். இந்த வீடியோ போலீசார் கண்ணிலும் பட்டது. இதையடுத்து மோட்டார் சைக்கிளின் பதிவு எண்ணை வைத்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இதையடுத்து சம்பந்தப்பட்ட வாலிபர் அடையாளம் காணப்பட்டு அவருக்கு போலீசார் அபராதம் விதித்து நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
காதலியை பெட்ரோல் டேங்கில் அமர வைத்து
பெங்களூரில் அண்மையில் காதலியை பெட்ரோல் டேங்கில் அமர வைத்துக்கொண்டு மற்ற பயணிகளை முகம் சுளிக்கும் வகையில் வாலிபரும் இளம்பெண்ணும் கட்டிப்பிடித்தபடி முத்தமிட்டுக்கொண்டு பயணம் செய்த வீடியோ வைரலானது. வீடியோ வைரலான நிலையில், இருசக்கர வாகனத்தின் பதிவெண்ணை வைத்து அந்த நபர் சென்னையை சேர்ந்தவர் என்பதை கண்டுபிடித்த போலீசார் அவரை அதிரடியாக கைது செய்தனர். அப்போது அந்த இளைஞர் பிரபலம் அடைவதற்காக இப்படி செய்ததாக போலீசாரிடம் கூறியிருந்தார்.












Click it and Unblock the Notifications