என்னோட கடைசி ஆசை இது.. இறுதிசடங்குக்கு வா.. சாகும் முன்பு காதலியை உருக்கமாக அழைத்த காதலன்
பெங்களூரு: நாய் கடித்ததால் ரேபிஸ் தாக்கி கர்நாடகா இளைஞர் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார். தான் இறக்க போகும் நிலையில் , தன்னுடைய இறுதி சடங்கிற்கு வருமாறு அந்த இளைஞர் காதலிக்கு உருக்கமாக கோரிக்கை வைத்திருந்தார். அந்த வீடியோ நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கர்நாடகா மாநிலம் பெங்களூரு அருகே நெலமங்களா டபஸ்பெட் தபெஸ்பேட் பகுதியைச் சேர்ந்தவர் கிரண். இவரை அண்மையில் வெறி நாய் ஒன்று கடித்தது.

இதில் காயம் அடைந்த கிரண் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் அவருக்கு வெறி நாய் கடி காரணமாக ரேபிஸ் தொற்று தாக்கியது. அவரை காப்பாற்ற மருத்துவர்கள் எவ்வளவோ முயன்றும் முடியாமல் தவித்துள்ளார்கள்.
கிரணும் ஒரு பெண்ணும் காதலித்துள்ளார்கள். ஆனால் அவருடைய காதலியின் தந்தை அவர்களின் காதலை ஏற்றுக்கொள்ளவில்லை. அவர் காதலிக்கு பரிசளித்த கொலுசு மற்றும் மோதிரங்களை பார்த்து சண்டை போட்டிருக்கிறார். காதலும் கைகூடாமல் போன கிரண், வெறிநாய் கடியால் காயம் அடைந்த கிரண் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்நிலையில், வெறிநாய் கடித்து ராபிஸ் தொற்று அதிகமான நிலையில், இனி பிழைக்க மாட்டோம் என்பதை கிரண் உணர்ந்துள்ளார். இதையடுத்து தன் காதலியை அப்பா கூறும் பையனையே திருமணம் செய்துகொள்ளுமாறு கிரண் உருக்கமாக வீடியோ வெளியிட்டுள்ளார்.
அந்த அந்த வீடியோவில் அவர் பேசும் போது, "இனி நான் நீண்ட காலம் வாழ மாட்டேன். உன்னை திருமணம்செய்து கொண்டு கடைசி வரைக்கும் கூட இருக்கற அதிர்ஷ்டம் எனக்கு கிடைக்கவில்லை. உன் அப்பா சொல்வதைக் கேட்டு நடந்து கொள்.
உன் அப்பா பார்த்து வைக்கும் பையனை திருமணம் செய்து கொண்டு நன்றாக இரு. நான் ஒரேயொரு வேண்டுகோள் மட்டும் உன்னிடம் வைக்கிறேன். உனக்கு குழந்தை பிறந்தால் அதற்கு என் பெயர் வைப்பியா?.. நீ என் இறுதிச் சடங்கிற்கு நீ வர வேண்டும்.. இதுவே எனது கடைசி ஆசை" என கூறிய கிரண் பேசிக்கொண்டிருக்கும் போதே உயிரிழந்தார். இந்த சம்பவம் ஆகஸ்ட் 9ம் தேதி நடந்துள்ளது. தற்போது தான் பலருக்கும் தெரியவந்துள்ளது.
கிரண் உயிரிழந்த நிலையில் தனது காதலிக்கு அழைப்பு விடுத்து உருக்கத்துடன் வெளியிட்ட வீடியோ சமூக வலைதளங்களில் அதிகம் பேரால் பகிரப்பட்டு வருகிறது. இந்த உருக்கமான வீடியோவை பார்த்த பலரும், தெருநாய்கள் இல்லாத நிலை ஏற்பட வேண்டும் என்றும் கோரியுள்ளனர்.
தயவுசெய்து வீடுகளில் மட்டும் தான் நாய் வளர்க்க அனுமதிக்க வேண்டும் என்றும், தெருநாய்களை தத்தெடுத்து அதனை வேறு இடங்களில் மொத்தமாக பராமரிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளனர்.


Click it and Unblock the Notifications
