கிளம்பி வரட்டா.. காட்டுக்குள் புகுந்த ஜோடி.. "நினைவெல்லாம் ஸ்வர்ணா".. விடிகாலையில் விக்கித்த யாதகிரி
விஷம் குடித்து கள்ளக்காதல் ஜோடி தற்கொலை செய்து கொண்டது தொடர்பான விசாரணை நடக்கிறது
பெங்களூரு: காதலனை மறக்க முடியாமல் தவித்து வந்த இளம்பெண், கணவன் வீட்டில் இருந்து திடீரென வெளியேறிவிட்டார்.. இதையடுத்து, அந்த ஜோடி விஷத்தை குடித்து தற்கொலையும் செய்து கொண்டுவிட்டது.
யாதகிரி மாவட்டம் சகாப்புரா தாலுகா ஹுருசகுண்டகி கிராமத்தை சேர்ந்தவர் ஸ்வர்ணா.. 20 வயதாகிறது.. அதே கிராமத்தை சேர்ந்தவர் ஈஷப்பா.. 22 வயதாகிறது.
இவர்கள் 2 பேரும் கடந்த சில வருடங்களாகவே தீவிரமாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது... இவர்களின் காதல் விவகாரம் 2 வீட்டாருக்கும் தெரியவந்தது.

மாப்பிள்ளை
இதில் ஸ்வர்ணாவின் வீட்டில் காதல் விஷயத்தை கேள்விப்பட்டு கொந்தளித்துவிட்டார்கள்.. பெற்றோர் கடுமையான எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்... எனவே, தங்கள் மகள் ஸ்வர்ணாவுக்கு, அவசர அவசரமாக வேறு ஒரு இடத்தில் மாப்பிள்ளை பார்த்து நிச்சயம் செய்தனர்.. உடனடியாக கல்யாணத்தையும் நடத்தி வைத்துவிட்டனர்.. 2 வருடங்களுக்கு முன்பு இந்த திருமணம் நடந்துள்ளது.. கல்யாணம் முடிந்ததுமே, ஸ்வர்ணாவை அவரது கணவர் பெங்களூருவுக்கு அழைத்து வந்துவிட்டார்... பெங்களூருவிலேயே ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து, 2 பேரும் தங்கிவந்தனர்.. அதே பெங்களூருவிலேயே 2 பேரும் தனியார் நிறுவனங்களில் வேலை பார்த்தும் வந்தனர்.

குழந்தைகள் இல்லை
இவர்களுக்கு குழந்தைகள் இல்லை.. இந்தநிலையில் ஸ்வர்ணாவால் தன்னுடைய காதலனை மறக்க முடியவில்லை. அதேபோல் ஈஷப்பாவுக்கும், ஸ்வர்ணாவை மறக்க முடியவில்லை.. இந்த 2 வருடங்களாகவே 2 பேரும் போனிலேயே பேசி வந்துள்ளனர்.. ஒருகட்டத்தில், காதலனை பிரிந்து இருக்க முடியாமல், 2 நாட்களுக்கு முன்பு ஸ்வர்ணா பெங்களூருவில் உள்ள கணவர் வீட்டில் இருந்து திடீரென கிளம்பி வெளியே வந்துவிட்டார்.. கணவர் உள்பட யாரிடமும் எதையும் சொல்லாமல், யாதகிரிக்கு வந்திருக்கிறார்.. அங்கு காதலன் ஈஷப்பாவையும் சந்தித்துள்ளார்.

பூச்சிமருந்து
இனியும் ஒருவரையொருவர் பிரியக்கூடாது என்று முடிவெடுத்த காதலர்கள், எங்காவது போய் வாழலாம் என்று யோசித்தனர்.. ஆனால், எப்படியும் தங்களை தேடி கண்டுபிடித்து, குடும்பத்தினர் பிரித்துவிடுவார்கள் என்பதால், இருவரும் தற்கொலை செய்து கொள்வது என்று முடிவெடுத்தனர்.. அதற்காக, 2 பேரும் அன்றைய தினம் இரவு கிளம்பி, ஹுருசகுண்டகி கிராமத்தையொட்டிய காட்டுப்பகுதிக்கு விடிகாலை வந்து சேர்ந்தனர்.. அந்த காட்டுக்குள்ளேயே தயாராக கையில், கொண்டு வந்திருந்த விஷத்தை குடித்து தற்கொலையும் செய்து கொண்டனர். நேற்று காலை 2 பேரும் காட்டுக்குள் இறந்து கிடப்பதை, அந்த பகுதி மக்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்..

நினைவெல்லாம் ஸ்வர்ணா
இதுகுறித்து சகாப்புரா புறநகர் போலீசாருக்கும் தகவல் தந்தனர்.. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஈஷப்பா, ஸ்வர்ணாவின் சடலங்களை கைப்பற்றி போஸ்ட் மார்ட்டம் செய்வதற்காக மாவட்ட அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து கொண்டிருக்கிறார்கள். வாயில் நுரைதள்ளிய இறந்த மனைவியின் சடலத்தை கண்டு கணவர் கதறி கதறி அழுதார்.. அப்போதுதான், இந்த ஜோடி 5 வருடங்களாக காதலித்து வந்த விவகாரமே கணவர் குடும்பத்தினருக்கு தெரியவந்ததாம்.. தொடர் விசாரணையும் நடக்கிறது..!!
-
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
ரொம்ப அசால்ட்டா இருந்துருக்காங்க! விசாரணை அதிகாரியின் விசித்திர நடைமுறை! போலீஸை விளாசிய நீதிமன்றம் -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
மதுரையை சேர்ந்தவர்.. கர்நாடக முதல்வர் டிகே சிவக்குமாரின் செயலாளராக தமிழர் நியமனம்.. யார் இவர்? -
மாணவிகளுக்கு மட்டுமில்லை, பள்ளி, கல்லூரி மாணவர்கள் அனைவருக்கும் இலவச பஸ் பாஸ்! டிகே சிவகுமார் பலே -
தன்னை கேலி செய்தாலும்.. கர்நாடகா முதல்வரானதும் டிகே சிவக்குமாருக்கு வாழ்த்து கூறிய விஜய் -
கை, கால்களை வெட்டினால்தான் பயம் வரும்! பலாத்கார வழக்கில் கட் அண்ட் ரைட்டாக சொன்ன கர்நாடக ஹைகோர்ட் -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications