வானியல் அதிசயம்! இன்று நிழல் இல்லாத நாள்.. கொண்டாட்டத்திற்கு தயாராகும் பெங்களூர்! எப்படி நடக்கும்?
பெங்களூர்: கர்நாடக மாநிலம் பெங்களூரில் இன்று 'ஜீரோ ஷேடோ டே' எனப்படும் 'பூஜ்ய நிழல் நாள்' இன்று கொண்டாடப்படுகிறது. பள்ளி, கல்லூரி, அறிவியல் மையங்களில் இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
அனைத்து பொருட்களுக்கும் நிழல் இருக்கும். ஆனால் வருடத்தின் இரண்டு நாட்களில் மட்டும் இந்த நிழல் இருக்காது. இதைத்தான் 'ஜீரோ ஷேடோ டே' என்று சொல்கிறார்கள். அதாவது நாம் நடக்கும் போதும் நம்மை தொடர்ந்து நிழல் வரும் இல்லையா? இந்த குறிப்பிட்ட இரண்டு நாட்களில் மட்டும் நிழல் நம்மை பின் தொடராது. இதற்கு காரணம் சூரியனின் ஒளி கதிர்கள் செங்குத்தாக நம்மீது விழுவதுதான்.

அதாவது பூமியை இரண்டாக கற்பனை செய்துகொள்வோம். ஒன்று வடபகுதி, மற்றொன்று தென்பகுதி. இதை சரிசமமாக பிரிக்கும் கோடுதான் நிலநடுக்கோடு. இதிலிருந்து 23.5 டிகிரி மேலே வடக்காக இருப்பது கடக ரேகை என்று சொல்லப்படுகிறது. இதற்கு கீழே -23.5 டிகிரி இருக்கும் தென் பகுதிகள் மகர ரேகை என்று அழைக்கப்படுகிறது. இந்த இரண்டு பகுதியிலும் சூரியனின் வெளிச்சம் குறிப்பிட்ட நாட்களில் செங்குத்தாக விழும். அப்படியாகத்தான் இன்றைய தினமும் கடக ரேகையில் சூரியனின் வெளிச்சம் செங்குத்தாக விழுகிறது.
நிலநடுக்கோட்டிலிருந்து 23.5 டிகிரி மேலே பார்த்தால் தென்னிந்தியா பகுதிகள் தெரியும். எனவே பெங்களூரில் இன்று பூஜ்ய நிழல் நாள் கொண்டாடப்படுகிறது. இன்றைய தினத்தில் நம்முடைய நிழல் முழுவதும் நமது உடலிலேயே இருக்கும் என்பதால் அது தரையில் விழாது. இது ஒரு அதிசயம் என்றே சொல்லலாம். ஏனெனில் கடக ரேகையிலும், மகர ரேகையிலும் உள்ள இடங்களில் மட்டும்தான் இந்த பூஜ்ய நிழல் நாளை காண முடியும்.
அதாவது இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் தொடங்கி மத்திய பிரதேசம் வரையில் ஏதாவது ஒரு நாளில் நிச்சயம் இந்த பூஜ்ய நிழல் நாளை பார்க்க முடியும். ஆனால் ராஜஸ்தான், டெல்லி, ஜம்மு காஷ்மீர் உள்ளிட்ட பகுதிகளில் இதனை பார்க்க முடியாது. ஏனெனில் இந்த பகுதிகள் கடக ரேகையை தாண்டி இருக்கிறது. எனவே சூரியனின் ஒளி செங்குத்தாக விழாது. இதானல்தான் இந்த பூஜ்ய நிழல் நாளை அறிவியல் ஆய்வாளர்கள் அதிசயமாக பார்க்கிறார்கள். இன்று பெங்களூரில் மதியம் 12.24 மணிக்கு பூஜ்ய நிழல் நாள் தெரியும் என்று விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.
எனவே பள்ளி, கல்லூரி, அறிவியல் மையங்களில் இதை கொண்டாட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதற்கு முன்னர் கடந்த 3ம் தேதி தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்திலும் பூஜ்ய நிழல் நாள் கொண்டாடப்பட்டது. இந்த அதிசய நிகழ்வு ஒரு சில நிமிடங்கள் மட்டுமே நீடிக்கும் என்பதால் மாணவர்களுக்கு இதை காண்பிக்க ஆசிரியர்கள் மிகுந்த ஆர்வமாக இருக்கின்றனர்.
-
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்!












Click it and Unblock the Notifications