செம டிவிஸ்ட்.. பொய் சொல்கிறார்.. டெலிவரி-பாயை குற்றஞ்சாட்டிய பெண்ணுக்கு எதிராக பாய்ந்தது வழக்கு!
பெங்களூர்: பெங்களூரில் சோமேட்டோ நிறுவனத்தின் டெலிவரி ஊழியர் மீது பெண் வைத்த புகாரில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. புகார் வைத்த பெண்ணுக்கு எதிராக சோமேட்டோ ஊழியர் போலீசில் புகார் அளித்துள்ளார்.
பெங்களூரை சேர்ந்தவர் ஹிட்டேசா சந்திராணி. இன்ஸ்டராகிராமில் பிரபலமாக இருக்கும் இவர் கடந்த சில தினங்களுக்கு முன் சோமேட்டோ டெலிவரி பாய் மூலம் தான் தாக்கப்பட்டதாக வீடியோ வெளியிட்டு இருந்தார்.
தன்னுடைய வீட்டிற்கு உணவு டெலிவரி செய்ய வந்தவர்.. தன்னுடைய மூக்கில் குத்தியதாக வீடியோ வெளியிட்டு இருந்தார். அதோடு தன்னுடைய மூக்கில் ரத்தம் வரும் புகைப்படங்களையும் வெளியிட்டு இருந்தார்.

கதை 1
இந்த சம்பவம் தொடர்பாக இரண்டு தரப்பும் வேறு வேறு கதைகளை கூறினார்கள். ஹிட்டேசா சந்திராணி கூற்றுப்படி.. சோமேட்டோ ஊழியர் லேட்டாக டெலிவரி செய்ய வந்துவிட்டு.. தன்னை மோசமான வார்த்தைகளில் திட்டினார். தான் கஷ்டர்மர் கேரில் பேசிக்கொண்டு இருக்கும் போதே அந்த டெலிவரி பாய் தன்னுடைய முகத்தில் குத்தினார். அதோடு கெட்டவார்த்தைகளை பயன்படுத்தினார் என்று குறிப்பிட்டுள்ளார்.

கதை 2
இந்த சோமேட்டோ ஊழியர் காமராஜின் கூற்றுப்படி.. அந்த பெண் கஸ்டமர் கேர் மூலம் ஆர்டரை கேன்சல் செய்துவிட்டார். ஆனால் அதன்பின் உணவை திருப்பி கொடுக்க மறுத்துவிட்டார். பின் காசு கேட்டதற்கு.. நீ லேட்டாக உணவை டெலிவரி செய்தாய் அதனால் காசு கிடையாது என்று கூறி உள்ளார். இதன்பின் கோவம் அடைந்த அந்த பெண் இவரை நோக்கி செருப்பை வீசி உள்ளார், இதை தடுக்கும் போது கைதவறி அந்த பெண்ணின் மூக்கில் தான் குத்துவிட்டதாக காமராஜ் கூறியுள்ளார்.

சோமேட்டோ தரப்பு
இதில் சோமேட்டோ தரப்பு இதுவரை நியாயமாக செயல்பட்டு உள்ளது. இரண்டு தரப்புக்கும் சப்போர்ட் செய்யாமல் அந்த பெண்ணின் மருத்துவ செலவை சோமேட்டோ ஏற்றுக்கொண்டுள்ளது. அதேபோல் காமராஜின் வழக்கு செலவையும் ஏற்று, அவரை ஊதியத்துடன் கூடிய சஸ்பெண்ட் செய்துள்ளது. இரண்டு தரப்புக்கும் நியாயமாக சோமேட்டோ செயல்பட்டுள்ளது.

வழக்கு
ஒரு பக்கம் காமராஜூக்கு எதிராக ஹிட்டேசா சந்திராணி கொடுத்த போலீஸ் புகாரில், காமராஜ் கைது செய்யப்பட்டு தற்போது பெயிலில் வெளியே வந்துள்ளார். இந்த நிலையில் புதிய திருப்பமாக ஹிட்டேசா சந்திராணி மீது காமராஜ் புகார் அளித்துள்ளார். இவர் பொய் சொல்கிறார், தனக்கு எதிராக பொய்யான புகார் கொடுத்துள்ளார், தன்னை அவமானப்படுத்திவிட்டார் என்று ஹிட்டேசா சந்திராணிக்கு எதிராக காமராஜ் புகார் அளித்துள்ளார்.

உண்மை என்ன
இதில் அந்த பெண்ணுக்கு எதிராக மூன்று பிரிவின் கீழ் வழக்கு பதியப்பட்டுள்ளது. இதில் யார் பக்கம் நியாயம் இருக்கிறது என்பது இப்போது வரை கண்டுபிடிக்கப்படவில்லை. இந்த விஷயத்தில் இரண்டு தரப்பையும் போலீஸ் விசாரித்து வருகிறது. காமராஜ் கண்ணீருடன் வெளியிட்ட வீடியோவும் ஒரு பக்கம் வைரலாகி வருகிறது. இன்னொரு பக்கம் அந்த பெண் வெளியிட்ட வீடியோவும் வைரலாகி வருகிறது.

போலீஸ் விசாரணை
அந்த பெண் சொல்வது உண்மையா .. காமராஜ் சொல்வது உண்மையா என்று உறுதியாக சொல்ல முடியவில்லை. பெண் என்பதால், ஹிட்டேசா சந்திராணிக்கு ஆதரவாக இருப்பதா.. வறுமையான பின்னணி கொண்ட காமரா
-
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு












Click it and Unblock the Notifications