தமிழ்நாட்டின் "பறவை மனிதன்.." திருச்செந்தூர் அருகே.. எங்கும் எதிரொலிக்கும் கீச்.. கீச் சத்தம்
திருச்செந்தூர்: இந்தியாவின் பறவை மனிதன் என அழைக்கப்படுபவர் சலீம் அலி. மும்பைக்காரர். முதன் முதலாகப் பறவைகள் பற்றிய கணக்கெடுப்பை இந்தியாவில் நிகழ்த்தியவர் மட்டுமின்றி 65 ஆண்டுகள் பறவை ஆராய்ச்சியில் ஈடுபட்டார்.
Recommended Video
அவரைப் போலவே பறவைகளோடு வாழ்க்கையை நடத்த ஆரம்பித்துள்ளார், தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அடுத்த, ஆலந்தலை என்ற கிராமத்தைச் சேர்ந்த ஒரு மாற்றுத் திறனாளி.

திருச்செந்தூரிலிருந்து குலசேகரன்பட்டினம், மணப்பாடு, குட்டம், உவரி செல்லும் சாலையில், சுமார் 5வது கி.மீட்டரில் உள்ளது ஆலந்தலை மீனவ கிராமம். இந்த ஊரைச் சேர்ந்தவர் ரவி. இவர் ஒரு மாற்றுத்திறனாளி.
சிறுவயதிலே பறவைகள் மீது ஆசை கொண்ட இவர் குடும்ப வறுமை காரணமாக சகோதரி ஏற்பாட்டில் மதுரையில் மாற்றுத்திறனாளிகளுக்கான அறக்கட்டளையில் தங்கி படித்துள்ளார். அங்கு ஒருவேளை நல்ல உணவு கிடைப்பதே அரிதாக இருந்துள்ளது.
இதனால் மதுரையில் உள்ள அவரது சகோதரி வீட்டில் தங்கி வேலைக்கு சென்றுள்ளார். ஒருவேளை உணவு கிடைக்க தான் பட்ட கஷ்டத்தை உணர்ந்த ரவி, அவரது முதல் மாத சம்பளத்தில் பறவைகளுக்கு உணவளிக்க முடிவு செய்து ஒரு ஜோடி ஆப்ரிக்கன் பிஞ்சர்ஸ் பறவையை வாங்கியுள்ளார். அதற்கு உணவு வழங்கி நன்றாக வளர்த்துள்ளார்.
அந்த ஜோடி பறவை இனப்பெருக்கம் மூலம் பெருகவே அதனை விற்பனை செய்துள்ளார்.அதில் கிடைத்த வருமானத்தில் பறவைகள் கூண்டு வாங்கியுள்ளார். மேலும் அவர் வாழ்வாதாரத்திற்கும் மீதமுள்ள பணம் உதவியுள்ளது.
இதனையடுத்து வியாபார நோக்கத்தில் தன்னம்பிக்கையுடன் பறவைகளை வளர்க்க தொடங்கினார் ரவி, அதில் கிடைக்கும் வருமானத்தில் பெரும் தொகையை பறவைகளுக்கு கூண்டுகள் தயார் செய்தும், உணவு தானியங்கள் வாங்கியும், மேலும் சில பறவைகளும் வாங்கியுள்ளார்.
கடந்த 2004 ஆண்டு சொந்த ஊரான ஆலந்தலை வந்த ரவி, தனது வீட்டின் பெரும் பகுதியில் பறவைகளுக்கு கொடுத்து அவற்றை வளர்த்து வருகிறார். இதில் பல வகையான ஆப்ரிக்கன் லவ் பேட்ஸ், கருப்பு,வெள்ளை, கலர் என பிஞ்சர்ஸ் வகைகள் உட்பட சுமார் 1000 பறவைகள் வளர்த்து வருகிறார். மொத்தமே ஆயிரம் பேர் கொண்ட ஒரு ஊரில் பறவைகள் எண்ணிக்கை மட்டும் ஆயிரம் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.
இதையறிந்து, தமிழகம் மட்டுமின்றி இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலிருந்தும் இவரிடமிருந்து பறவைகளை வாங்கி செல்கிறார்கள். கடல் அலைகளின் சத்தம் கேட்டு கொண்டிருந்த ஆலந்தலை மீனவ கிராமத்தில், இப்போது, பல்வேறு பறவைகளின் இசையே கேட்கிறது. மேலும் ரவி வீட்டிற்கு சென்றதும் பறவைகளின் சரணாலயத்தில் இருப்பது போல் இருந்தது.
இதுகுறித்து ரவி தெரிவிக்கையில், ஒருவேளை உணவிற்கு கஷ்டப்பட்ட நான் பறவைகள் வளர்த்து உணவு வழங்கினேன். இன்று நான் சொந்த வீடு கட்டி, மாற்றுத்திறனாளியான எனது சகோதரர் குடும்பத்திற்கு உதவி செய்யும் அளவிற்கு இந்த பறவைகள் எனது வாழ்க்கையை உயரத்தியது. தன்னம்பிக்கையுடன் வாழ்ந்து வர, கடவுளாக இந்த பறவைகளை பார்க்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
-
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மெகா ஆஃபர்: ஒரே மாதத்தில் 3 மாத ரேஷன்! மத்திய அரசின் சர்ப்ரைஸ் பின்னணி என்ன -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க!












Click it and Unblock the Notifications