விட்டாபோதும் சாமி.. பணத்தை கொடுத்து வழக்கை முடிக்கும் அதானி.. அமெரிக்காவில் அடுத்தடுத்து ட்விஸ்ட்!
சென்னை: உலக அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய அதானி குழுமத்துக்கு எதிரான அமெரிக்க சந்தை ஒழுங்குமுறை ஆணையம் (SEC) வழக்கில் முக்கிய திருப்பம் ஏற்பட்டுள்ளது.
அதானி குழுமத் தலைவர் கௌதம் அதானி மற்றும் அவரது மருமகன் சாகர் ஆகியோர் மொத்தம் 18 மில்லியன் டாலர் அளவுக்கு பணத்தை செலுத்தி வழக்கை முடிக்க தயாராகியுள்ளதாக நீதிமன்றத்தில் மனு கொடுத்துள்ளனர். இந்த ஒப்பந்தம் இன்னும் நீதிபதியின் ஒப்புதலைப் பெற வேண்டிய நிலையில் உள்ளதால், இறுதி ஒப்புதலுக்காக மொத்த அதானி குடும்பமும் காத்திருக்கிறது.

சிக்கிய அதானி கிரீன் எனர்ஜி
SEC-யின் குற்றச்சாட்டின்படி, கௌதம் அதானி இந்திய அதிகாரிகளுக்கு பல மில்லியன் டாலர் லஞ்சம் கொடுத்து அல்லது கொடுக்க வாக்குறுதி அளித்து, இந்தியாவின் மிகப்பெரிய சோலார் எனர்ஜி திட்டத்துக்கான ஒப்பந்தங்களைப் பெற முயற்சித்ததாகக் கூறப்பட்டது.
இந்த லஞ்ச விவகாரத்தை மறைத்து, அமெரிக்க வங்கிகள் மற்றும் சர்வதேச முதலீட்டாளர்களிடம் இருந்து அதானி குழுமம் பல ஆயிரம் கோடி ரூபாய் நிதி திரட்டியதாக அமெரிக்கா குற்றம் சாட்டியது.
இந்த மாபெரும் ஒப்பந்தம் செயல்படுத்துவதற்காக பல்வேறு தவறான தகவல்கள் கொடுத்து, 750 மில்லியன் டாலர் பாண்ட் வெளியீட்டு உள்ளது. அதன் மூலம் அமெரிக்க முதலீட்டாளர்களிடம் இருந்து குறைந்தது 175 மில்லியன் டாலர் அளவிலான முதலீட்டை திரட்டப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.
மேலும் அதானி கிரீன் எனர்ஜி லிமிடெட் லஞ்ச எதிர்ப்பு விதிமுறைகளுக்கு உட்பட்டு செயல்படுவதாக தவறான மற்றும் பொய்யான தகவல்களை வெளியிட்டதாகவும் SEC குற்றம் சாட்டியது. இத்தகைய நடவடிக்கைக்கு எதிராக அமெரிக்க அரசு வழக்கு தொடரப்பட்டு உள்ளது.
2024-இல் இந்த குற்றச்சாட்டு வெளியானபோது அதானி குழுமப் பங்குகள் 23% வரை கடுமையான சரிவைச் சந்தித்தன.
SEC வழக்கு
கடந்த நவம்பர் 2024-ல் SEC தொடுத்த இந்த வழக்கை முடித்தக்கொள்ளவும், இந்தியா - அமெரிக்கா மத்தியிலான உறவில் விரிசல் ஏற்படாமல் இருக்கவும், கௌதம் அதானி 6 மில்லியன் டாலரும் மற்றும் சாகர் 12 மில்லியன் டாலர் செலுத்தி வழக்கை முடிவுக்கு கொண்டு வர மனு கொடுத்துள்ளனர்.
இந்த ஒப்பந்தம் கடந்த வியாழக்கிழமை அமெரிக்க பெரடல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. ஒப்பந்தம் இறுதியாக நிறைவேறினால், அதானி குழுமத்துக்கு பெரும் நிவாரணம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த வழக்கு இரு நாடுகளின் உயர்மட்ட நிர்வாகத்திலும் பிரச்சனையாக மாறி வருகிறது, அமெரிக்காவில் அதானி முதலீடு செய்ய திட்டமிட்ட பல திட்டங்கள் முடங்கியுள்ளது.
அதானி குழுமத்துக்கு பெரும் நிவாரணம்
இந்த சமரச ஒப்பந்தம் இறுதியாக நிறைவேறினால், அதானி குழுமத்துக்கு பெரும் நிவாரணம் கிடைக்கும். புதுப்பிக்கத்தக்க எரிசக்தி முதல் விமான நிலையங்கள் வரை பல்வேறு துறைகளில் செயல்பட்டு வரும் அதானி குழுமம், சர்வதேச மூலதனச் சந்தைகளுக்கு திரும்பி, தனது விரிவாக்கத் திட்டங்களை தொடர முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அமெரிக்காவில் வழக்குகள் முடிவுக்கு வருவது அதானி குழுமத்திற்குப் பெரும் நிம்மதியை அளித்துள்ளது. இதன் மூலம் சர்வதேச மூலதனச் சந்தைகளில் இருந்து மீண்டும் நிதி திரட்டவும், உலகளாவிய வணிக விரிவாக்கங்களை மேற்கொள்ளவும் அதானி குழுமத்திற்கு வழிவகை ஏற்பட்டுள்ளது.
அதே நேரத்தில், அமெரிக்க நீதித் துறை (DOJ) கௌதம் அதானிக்கு எதிரான மோசடி குற்றச்சாட்டுகளை வாபஸ் பெறும் நடவடிக்கையில் உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதானி குழுமத்தில் நடந்த இந்த மோசடி சம்பவம் உலகளாவிய முதலீட்டு சந்தையில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. அதானி குழுமம் இனி தனது விரிவாக்கத் திட்டங்களை வேகப்படுத்தும் வாய்ப்பு உருவாகியுள்ளது. இதனால் அதானி பங்குகளும் அதிரடியாக உயரும் வாய்ப்பை பெற உள்ளது.
-
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ரஷ்யா வச்ச ஆப்பு.. தள்ளுபடிலாம் தர முடியாது.. பிரீமியம் கட்டணம்! கச்சா எண்ணெய்க்கு 425% கூடுதல் தொகை -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
"அண்ணாமலை வந்ததால் பாஜக ஒன்னும் பலமாகவில்லை".. ஒரு இதழை கூட அசைக்க முடியாது.. தமிழிசை ‘அட்டாக்' -
நாங்க தோத்துட்டோம்.. ஆனா சாகலை! விஜய்க்கு ஏதாவது ஆச்சுனா கம்பெனி பொறுப்பில்லை! மாஜி கொடுத்த வார்னிங்












Click it and Unblock the Notifications