தங்கம் விலையில் நல்ல செய்தி.. "இப்போ குறையும், ஆனால் சீக்கிரமே.." ஆனந்த் சீனிவாசன் சொல்வதை கேளுங்க
சென்னை: கடந்த 10 நாட்களில் கணிசமாக இறங்கினாலும் கூட மீண்டும் ஏற ஆரம்பித்துவிட்டது. இது வரும் காலத்தில் எப்படி இருக்கும் என்பது தெரியாமல் மக்கள் குழப்பத்திலேயே இருக்கிறார்கள். இதற்கிடையே தங்கம் விலை வரும் காலத்தில் எப்படி இருக்கும்.. இனி தங்கம் விலையின் மூவ்மெண்டுகளை முடிவு செய்யப்போவது யார் என்பது குறித்த தகவல்களைப் பிரபலப் பொருளாதார வல்லுநர் ஆனந்த் சீனிவாசன் பகிர்ந்துள்ளார்.
கடந்த சில நாட்களாகத் தங்கம் விலை ஏற்ற இறக்கம் என இரண்டும் கலந்து இருந்து வருகிறது. கடந்த 10 நாட்களில் தங்கம் விலை 5 நாட்கள் குறைந்துள்ளது, 3 நாட்கள் அதிகரித்துள்ளது. இரு நாட்கள் விலை மாற்றம் இல்லாமல் இருந்துள்ளது.

தங்கம் விலை
அதேநேரம் 10 நாட்களுக்கு முன்பு ஜூன் 25ம் தேதி சென்னையில் ஆபரணத் தங்கம் ரூ.9070க்கு விற்பனையானது. நேற்று ஜூலை 4ம் தேதி இது ரூ.9050ஆக இருக்கிறது. அதாவது தங்கம் விலை பெரிய ஏற்றம் இறக்கம் இல்லாமலேயே இருந்து வருகிறது. இதனால் நீண்ட கால நோக்கில் தங்கத்தை வாங்கலாமா என்பதில் கேள்வி எழுந்துள்ளது.
இதற்கிடையே பிரபலப் பொருளாதார வல்லுநரான ஆனந்த் சீனிவாசன் இதற்கான பதிலை அளித்துள்ளார். தங்கம் விலை வரும் காலத்தில் எப்படி இருக்க வாய்ப்பு இருக்கிறது.. இதில் டிரம்ப் செய்த காரியம் எந்தளவுக்கு முக்கிய பங்கு வகிக்கப் போகிறது என்பதை அவர் எளிதாக விளக்கியுள்ளார். இது குறித்து நாம் பார்க்கலாம்.
ஆனந்த் சீனிவாசன்
இது தொடர்பாக ஆனந்த் சீனிவாசன் தனது யூடியூப் பக்கத்தில், "அமெரிக்காவில் தி பிக் பியூட்டிபுல் பில் என்பது நிறைவேறி இருக்கிறது. நீண்ட கால நோக்கில் இது அமெரிக்கப் பொருளாதாரத்தைப் பாதிக்கவே செய்யும். அமெரிக்காவில் பற்றாக்குறை அதிகரிக்கும். பற்றாக்குறை அதிகரிக்க அதிகரிக்க டாலர் மதிப்பு சரியும். அப்படி டாலர் மதிப்பு சரியும் போது தங்கம் விலை அதிகரிக்கும்.
டிரம்ப் செய்த காரியம்
நீண்ட கால நோக்கில் தி பிக் பியூட்டிபுல் பில் என்பது தங்கத்திற்கு நல்ல செய்தி. அதேநேரம் குறுகிய காலத்தில் தங்கம் விலையில் ஏற்றம் இறக்கம் இருக்காது என நினைத்துவிடாதீர்கள். குறுகிய காலத்தில் நிச்சயம் தங்கம் விலையில் இறக்கம் இருக்கலாம். அதாவது ரொம்பவே பாசிட்டிவான செய்தி எதாவது வந்தால் தங்கம் விலை 3-5% வரை குறையலாம். நேற்றைய தினம் ஆபரணத் தங்கம் ரூ.50 குறைந்துள்ளது.
தி பிக் பியூட்டிபுல் பில் அமெரிக்காவின் பணவீக்கத்தையும் அதிகரிக்கும். இதனால் அமெரிக்க மத்திய வங்கி பெரியளவில் வட்டியைக் குறைக்காது. இப்போது அங்கு மத்திய வங்கி கவர்னராக ஜெரோம் பவுல் இருக்கிறார். அவர் இருக்கும் வரை பெரியளவில் வட்டி குறைப்பு இருக்காது. இப்போது அங்கு 4-4.5%ஆக வட்டி இருக்கிறது. ஜெரோம் பவுல் பதவிக்காலம் முடியும் போது 3.5-4%ஆக குறையலாம். அதற்கு மேல் குறையாது.
அமெரிக்காவில் பணவீக்கம்
ஜெரோம் பவுலுக்கு பிறகு யாரை டிரம்ப் நியமிக்கப் போகிறார் என்பது தெரியவில்லை. அடுத்த கவர்னர் யார், அவரது கொள்கை என்னவாக இருக்கும் என்பது நமக்குத் தெரிய வரும். ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது அமெரிக்காவில் பணவீக்கம் அதிகமாகவே இருக்கும். இதனால் வட்டி விகிதம் ஜீரோவுக்கு போவது ரொம்பவே கஷ்டம். அதிகபட்சம் 2.5-3%ஆக இருக்கும். அதற்குக் கீழ் போகாது" என்றார்.
இது ஒரு செய்தி மட்டுமே. இதை நிச்சயமாக முதலீட்டு ஆலோசனையாக எடுத்துக் கொள்ளக் கூடாது. முதலீடு சார்ந்த முடிவுகளை எடுக்கும் முன்பு உங்கள் பொருளாதார ஆலோசகரிடம் உரிய ஆலோசனை கேட்ட பிறகு உங்களுக்கு ஏற்ற முடிவை எடுக்க வேண்டும்.












Click it and Unblock the Notifications