தங்கம் விலை ரூ.8,500க்கு சரியும்? ஆனந்த் சீனிவாசன் சொன்ன மேட்டர்.. இது ரொம்ப முக்கியம் ஆச்சே
சென்னை: தங்கம் விலை கடந்த சில நாட்களாகவே பெரியளவில் ஏற்ற இறக்கம் எதுவும் இல்லாமல் இருந்து வருகிறது. இதனால் எங்கு வரும் நாட்களில் தங்கம் விலை சரியுமோ என்றே மக்கள் ஆர்வமாக எதிர்பார்த்து வருகிறார்கள். இதற்கிடையே வரும் காலங்களில் தங்கம் விலை சரிய வாய்ப்பு இருக்கிறதா.. அப்படியே சரிந்தால் அது எந்தளவுக்குச் சரியும் என்பது குறித்து பிரபல பொருளாதார வல்லுநர் ஆனந்த் சீனிவாசன் விளக்கியுள்ளார்.
கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை ஏற்ற இறக்கம் இல்லாமலேயே இருக்கிறது. இரண்டு நாட்கள் உயர்ந்தால்.. அடுத்த இரு நாட்கள் சரிவது என மாறி மாறியே இருக்கிறது. விலையில் எந்தவொரு மாற்றமும் இல்லை என்பதால் மக்கள் வரும் நாட்களில் அது எங்கு சரியுமோ என்று ஆர்வமாக எதிர்பார்க்கிறார்கள்.

ஆனந்த் சீனிவாசன்
தற்போதுள்ள சூழலில் உண்மையில் தங்கம் விலை குறையுமா.. அதற்கு எந்தளவுக்கு வாய்ப்பு இருக்கிறது என்பது குறித்து பொருளாதார வல்லுநர் ஆனந்த் சீனிவாசன் விளக்கியுள்ளார். மேலும், பிட்காயினுக்கும் தங்கத்திற்கும் இடையே உள்ள வேறுபாடுகள் தொடர்பாகவும் அவர் எளிமையாக விளக்கியுள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது யூடியூப் பக்கத்தில், "தங்கம் விலை ஏற்றம் இறக்கம் என மாறி மாறியே இருக்கிறது. இப்படியே தான் இருக்கும். ஏறினால் அதே அளவுக்கு இறங்கும்.. இப்படியே இந்த ரேஞ்சில் தான் இருக்கும். இதை கன்சாலிடேஷன் ஃபேஸ் என்று சொல்வார்கள். அதாவது கட்டிடம் கட்டும்போது பவுண்டேஷன் போடுவது மாதிரி.. தங்கம் விலை ஒரு பவுண்டேஷன் போட்டுக் கொண்டு இருக்கிறார்கள். இது உறுதியாகக் கொஞ்ச நாள் ஆகும்.
எந்தளவுக்கு சரியும்?
உடனே இதுதான் பேஸ் விலையா.. இதற்குக் கீழ் போகாதா என கேட்காதீர்கள். கொஞ்ச நாள் போனால் தான் தெளிவாகத் தெரியும். நான் ரூ.8500 தான் சொன்னேன். அதற்குக் கீழ் தங்கம் விலை போகவே போகாது.. இப்போது இருக்கும் நிலைமையைப் பார்த்தால் ரூ.10,000க்கு கீழ் கூடப் போகுமா என்பதே கூட சந்தேகமாகத் தான் இருக்கிறது.
ஏனென்றால் அமெரிக்காவில் தங்கம் விலை சரிந்தாலும் இந்தியாவில் ரூபாய் மதிப்பில் சரியாது. ஏனென்றால் அமெரிக்காவுக்கான வர்த்தகக் குறியீடுகள் மோசமாக இருக்கிறது. எனவே, ரூபாய் பலவீனமடைய வாய்ப்புகள் இருக்கிறது. அப்படி ரூபாய் மதிப்பு சரிந்தால் தங்கத்திற்கு ஒரே குஷி. விலை நிச்சயம் அதிகரிக்கும். எனவே, நாம் பாதுகாப்பாக இருப்போம். தங்கமும் பாதுகாப்பாக இருக்கும்.
பிட்காயின்
தங்கம் குறித்து நான் பேசும்போது எல்லாம் பலரும் கிரிப்டோவும் தங்கமும் ஒன்று எனச் சிலர் சொல்வார்கள்.. பலர் என்னையே இதில் கிண்டல் செய்வார்கள். ஏற்கனவே பிட்காயின் விலை ஒரு முறை பயங்கரமாகச் சரிந்தது. அப்போதே நான் எச்சரித்தேன். ஆனால், அதன் பிறகு அமெரிக்காவில் இடிஎப் போட்டு பிட்காயினை ஏற்றினார்கள். அப்போதே இதற்குச் சீக்கிரமே ஆப்பு வைத்துவிடுவார்கள் என சொன்னேன். இப்போது பாருங்கள் பிட்காயின் சந்தையில் பல கோடி டாலர் நஷ்டம். இந்தாண்டு இதுவரை வந்த எல்லா லாபமும் போய்விட்டது.
உலகிலேயே மிகவும் புகழ்பெற்ற கிரிப்டோகரன்சியான பிட்காயினுக்கே இந்த நிலைமை. இன்னும் பல இளைஞர்கள் பெயரிலேயே நுழையாத கிரிப்டோகரன்சிகளில் எல்லாம் போட்டுள்ளனர். அதெல்லாம் என்ன ஆகியிருக்கும் என யோசனை செய்து பாருங்கள். முறைப்படுத்தப்படாத சந்தையில் போட்டால் இதுதான் நிலைமை. யாரிடமும் போய் புகார் கூட கொடுக்க முடியாது. இதனால் தான் பேராசை பெருநஷ்டம் எனச் சொல்கிறேன்.
யாரும் தொட மாட்டார்கள்
தங்கம் என்பது எப்போதும் நமக்கு ஆத்திர அவசரத்துக்கு உதவும்.. வங்கியில் வைத்தால் கூட உடனே பணம் கிடைக்கும். நீங்கள் அதற்கான வட்டியைக் கட்டும்போது கூட அதன் மதிப்பு ஏறிக் கொண்டே போகும். ஆனால், பிட்காயினை எந்தவொரு வங்கியும் தொடாது. ஆத்திர அவசரத்திற்கு எது உதவுமோ.. அதுதான் நமக்குத் தேவை.. மிடில் கிளாஸ் அதைத் தான் செய்ய வேண்டும்!" என்றார்.
இது ஒரு செய்தி மட்டுமே. இதை நிச்சயமாக முதலீட்டு ஆலோசனையாக எடுத்துக் கொள்ளக் கூடாது. முதலீடு சார்ந்த முடிவுகளை எடுக்கும் முன்பு உங்கள் பொருளாதார ஆலோசகரிடம் உரிய ஆலோசனை கேட்ட பிறகு, உங்களுக்கு ஏற்ற முடிவை எடுக்க வேண்டும்.
-
1,200 கோடி டாலர் தங்கத்தை விற்ற ரிசர்வ் வங்கி? அப்படியெல்லாம் இல்லவே இல்லை! விளக்கம் சொன்ன ஆளுநர்! -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி












Click it and Unblock the Notifications