"ஆபத்து.." இனி இந்த தங்கத்தை வாங்க வேண்டாம்.. பேரிடியை இறக்கிய ஆனந்த் சீனிவாசன்! அப்போ போட்ட பணம்?
சென்னை: மிடில் கிளாஸ் மக்களுக்கு ஆபத்தான காலங்களில் தங்கம் மட்டுமே பெரியளவில் உதவும் என்பதைத் தொடர்ந்து சொல்லி வந்தவர் ஆனந்த் சீனிவாசன். இதற்கிடையே அவர் இப்போது ஒரு எச்சரிக்கையைக் கொடுத்துள்ளார். குறிப்பிட்ட ஒரு வகை தங்கத்தை வாங்குவது ஆபத்து என்றும் அதை ரெகுலேட் செய்ய யாருமே இல்லை என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
இந்தியாவில் பொதுமக்கள் எப்போதும் தங்கத்தைத் தான் அதிகளவில் வாங்கிக் குவிப்பார்கள். ஆபத்தான காலங்களில் பலருக்கும் தங்கமே கை கொடுத்துள்ளது. பிரபல பொருளாதார வல்லுநரான ஆனந்த் சீனிவாசன் கூட தங்கத்தை வாங்கும்படியே தொடர்ந்து சொல்லி வந்திருக்கிறார். ஏழை மற்றும் மிடில் கிளாஸ் மக்களுக்கு இதுவே முக்கியம் என்றார்.

ஆனந்த் சீனிவாசன்
இந்தச் சூழலில் தான் கடந்த சில நாட்களுக்கு முன்பு டிஜிட்டல் தங்கம் குறித்துச் செபி முக்கிய அறிவிப்பை வெளியிட்டது. அதாவது டிஜிட்டல் தங்கத்திற்கும் தங்களுக்கும் தொடர்பு இல்லை என்றும் அதை தாங்கள் ரெகுலேட் செய்வதில்லை என்றும் அவர்கள் குறிப்பிட்டனர். இது மக்களிடையே பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியது. இதற்கிடையே பிரபல பொருளாதார வல்லுநரான ஆனந்த் சீனிவாசன் இது தொடர்பாக விளக்கியுள்ளார்.
இது குறித்து அவர் தனது யூடியூப் சேனலில், "நீங்கள் தவறு செய்துவிட்டு, அரசு அதை முறைப்படுத்த வேண்டும் எனச் சொல்வது சரியான போக்கு இல்லை. இதை ரெகுலேட் செய்ய வேண்டும் எனக் கோரிக்கை வைத்தால் உடனடியாக அரசால் அதைச் செய்ய முடியாது. முதலில் இதற்காக ஒரு சட்டத்தை நிறைவேற்ற வேண்டும். இந்தியாவில் ஒருவரால் டிஜிட்டலாக தங்கத்தை வைத்திருக்க முடியுமா என்பது குறித்து ஆய்வு செய்ய வேண்டும். இதற்காக முதலில் தங்க சட்டம் என்றே தனியாக ஒன்று இருந்தது. அதை முதலில் பார்க்க வேண்டும்.
அடுத்து என்ன நடக்கும்
அடுத்து எந்த அமைப்பு இதை ரெகுலேட் செய்வார்கள் என்பதை முடிவு செய்ய வேண்டும். கடைகளில் வாங்கும் தங்கத்திற்கு ஹால்மார்க் இருக்கும். அப்போது டிஜிட்டல் தங்கத்தில் ஹால்மார்க் தங்கம் இருக்குமா என்பதை முடிவு செய்வார்கள். அடுத்து எங்கு வாங்கி சேமித்து வைத்துள்ளனர். அதை யார் ஆய்வு செய்வார்கள் என பல முடிவுகளை எடுக்க வேண்டும். இதைப் பொறுமையாகத் தான் செய்ய முடியும். எனவே, உடனடியாக ரெகுலேட் செய்யுங்கள் எனச் சொல்ல முடியாது.
தடை?
ஆனால், நிறைய மக்கள் இதில் பணம் போட்டுள்ளனர். எனவே, அரசு இரண்டு விஷயங்கள் செய்ய வாய்ப்பு இருக்கிறது. ஒன்று எல்லாம் போதும்.. அனைத்து டிஜிட்டல் கோல்ட் நிறுவனங்களும் 60 நாட்களில் மக்களிடம் வாங்கிய பணத்தைத் திரும்பத் தர வேண்டும் என உத்தரவிடலாம். அப்படி இல்லை என்றால் இது தொடர்பாகச் சட்டத்தை பாஸ் செய்து ரெகுலேஷன் கொண்டு வருவார்கள்.
வாங்க வேண்டாம்
செபி சொன்ன பிறகும் கூட அதிக பேர் டிஜிட்டல் தங்கத்தை வாங்கியுள்ளனர். இதுபோல மக்கள் தவறு செய்துவிட்டு, குத்துகிறது.. குடைகிறது எனச் சொல்லக் கூடாது. என்னைக் கேட்டால் டிஜிட்டல் தங்கமே வாங்க வேண்டாம் என்றே சொல்வேன். அதையும் தாண்டி நீங்கள் வாங்கினால்.. அது நீங்கள் செய்யும் தவறு" என்றார்.
பிளாட்டினம்
மத்திய அரசு சமீபத்தில் பிளாட்டினம் இறக்குமதிக்கு சில கட்டுப்பாடுகளை விதித்திருந்தது. இது குறித்த கேள்விக்கு, "மத்திய அரசு பிளாட்டினம் இறக்குமதிக்கு கட்டுப்பாடு விதித்தாக பார்த்தேன்.. துணிச்சல் இருந்தால் தங்கத்திற்குத் தடை போடச் சொல்லுங்கள். ஏற்கனவே ரூபாய் மதிப்பு சரிந்து வருகிறது. அதை முதலில் சரி செய்ய வேண்டும்.. பொதுமக்கள் இந்த பிளாட்டினத்தை எல்லாம் வைத்து கொள்ளக்கூடாது. பெரும் பணக்காரர்கள் மட்டுமே இதை வாங்க வேண்டும் என நினைக்கிறார்கள் போல!" என்றார்.
எதற்காக இந்த தடை என்பது குறித்து பேசிய அவர், "பிளாட்டினத்தை பொதுவாக யாருமே வாங்க மாட்டார்கள். ஆனாலும், சும்மா தடையைப் போடுவோம் எனப் போட்டுள்ளனர். இது தங்கத்தை விட காஸ்ட்லியானது. மிக சிலரே வாங்குவார்கள். இதனால் ஏன் இந்த தடை என்று எனக்கே புரியவில்லை.
பிளாட்டினத்திற்கு கடன் கிடைக்குமா
இதனால் பிளாட்டினத்தை வாங்கலாமா எனக் கூட சிலர் கேட்கிறார்கள். அது ஒரு உலோகம். ஆனால், அதை வைத்து வங்கிகள் கடன் கொடுக்க மாட்டார்கள். ரிசர்வ் வங்கி வரும் காலத்தில் பிளாட்டினத்திற்கு கடன் கொடுப்போம் என சொன்னால் அது குறித்து யோசிப்போம். அப்படி ஒரு அறிவிப்பு வராத வரை அது வெறும் அழகுக்கு தான்" என்றார்.
-
1,200 கோடி டாலர் தங்கத்தை விற்ற ரிசர்வ் வங்கி? அப்படியெல்லாம் இல்லவே இல்லை! விளக்கம் சொன்ன ஆளுநர்! -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி












Click it and Unblock the Notifications