வரலாற்றில் நடக்காத மாற்றம்.. தங்கம் விலை "வெடிக்க" போகுது.. ரேட் தாறுமாறாக குறையும்! BIS மேஜர் தகவல்
சென்னை: தங்கம் விலை இந்தாண்டு தொடக்கம் முதலே தாறுமாறாக உயர்ந்து வருகிறது. இதற்கிடையே தங்கம் விலை இப்போது பப்பிள் நிலையை எட்டியுள்ளதாக அதில் மிகப் பெரிய மாற்றம் விரைவில் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக பிஐஎஸ் எச்சரித்துள்ளது. அதென்ன பப்பிள்? இதனால் தங்கம் விலையில் என்ன நடக்கும்.. பொதுமக்களுக்கு இதனால் நல்லதா கெட்டதா என்பது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.
தங்கம் விலை வரலாறு காணாத வகையில் இந்தாண்டு உயர்ந்து உச்சம் தொட்டுவிட்டது. டிரம்ப் நடவடிக்கைகள், போர்கள், புவிசார் பதற்றங்கள் காரணமாகவே தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து உச்சம் தொட்டு வருகிறது. தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்குத் தாறுமாறாக உயர்ந்து கொண்டே செல்கிறது.

எச்சரிக்கை
இதற்கிடையே பிஐஎஸ் எனப்படும் சர்வதேச செட்டில்மெண்ட் வங்கி Bank for International Settlements தங்கம் விலை தொடர்பாக எச்சரிக்கையை விடுத்துள்ளது. அதாவது தங்கம் மற்றும் பங்குச்சந்தைகளில் சில்லறை முதலீட்டாளர்கள் அதிகளவில் முதலீடு செய்வதாகவும் இதனால் அவை பப்பிள் போல உருவாகி இருப்பதாகவும் எச்சரித்துள்ளனர்.
பொதுமக்களை தான் சில்லறை முதலீட்டாளர்கள் என அழைப்பார்கள். கடந்த சில ஆண்டுகளில் பொதுமக்கள் தங்கம் மற்றும் பங்குச்சந்தையில் அளவுக்கு அதிகமாக முதலீடு செய்துள்ளதாகவும் இதனால் அது பப்பிள் நிலையை அடைந்துவிட்டதாகவும் எச்சரித்துள்ளனர். சில நேரம் ஒரு முதலீட்டின் மதிப்பு அதன் உண்மை மதிப்பை விடப் பல மடங்கு அதிகம் உயரும். குறுகிய காலத்தில் அசல் மதிப்பை விடவும் பல மடங்கு உயர்ந்து, பின்னர் அது வெடிக்கும். இதைத் தான் பப்பிள் என்பார்கள்.
தங்கம் பப்பிள்
பங்குச்சந்தை பப்பிள் நிலையில் இருப்பதாகப் பல்வேறு தரப்பினரும் ஏற்கனவே எச்சரித்துள்ளனர். இந்தச் சூழலில் தான் சில்லறை முதலீட்டாளர்களால் தங்கம் மற்றும் அமெரிக்கப் பங்குகளும் கூட பப்பிள் நிலைமையை நோக்கிச் சென்றுள்ளதாக பிஐஎஸ் எச்சரித்துள்ளது. இதனால் எதிர்பாராத மாபெரும் சரிவு ஏற்படக்கூடும் என வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு, தங்கம் மற்றும் அமெரிக்கப் பங்குச்சந்தை குறித்த பிஐஎஸின் காலாண்டு மதிப்பீடுகள் வெளியிடப்பட்டு இருந்தது. அதில் தான் இந்தக் கருத்துகளைக் கூறியிருந்தனர். ஓவர் வேல்யூவேஷன் மீடியாக்கள் கொடுக்கும் ஹைப் காரணமாக ஒரு பப்பிள் உருவாகி இருப்பதாக அதில் கூறப்பட்டுள்ளது.
என்ன காரணம்!
தங்கம் விலையைப் பொறுத்தவரை அது நடப்பாண்டில் 60% வரை உயர்ந்துள்ளது. 1979க்கு பின் தங்கம் விலை ஒரேயாண்டில் இவ்வளவு தூரம் உயர்வது இதுவே முதல்முறையாகும். அதேபோல ஏஐ நிறுவனங்களின் பங்குகள் தாறுமாறாக உயர்ந்ததால் அமெரிக்கப் பங்குச்சந்தைகளும் அதிகரித்தன. நம்ம ஊர் மும்பை பங்குச்சந்தை, தேசியப் பங்குச்சந்தை போல அங்கு எஸ் அண்ட் பி 500 மற்றும் நாஸ்டாக் உள்ளன. அவை ஒரே ஆண்டில் முறையே 17% மற்றும் 22% உயர்ந்துள்ளன.
பிஐஎஸ் அறிக்கையில் மேலும், "கடந்த 50 ஆண்டுகளில், தங்கம் மற்றும் பங்குகள் ஒரே நேரத்தில் இப்படி பப்பிள் நிலைக்கு வந்தது இதுவே முதல்முறை. இதுபோல குறுகிய காலத்தில் விலை அதிகரித்தால் அவை நிச்சயம் சரியும். அந்த ப்பிள் வெடித்து மிகப் பெரியளவில் விலை சரிய வாய்ப்பு இருக்கிறது" என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
என்ன நடக்கும்!
ஏஐ நிறுவனங்களால் பங்குச்சந்தை பப்பிள் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாகச் சர்வதேச நாணய நிதியமும், இங்கிலாந்து வங்கியும் ஏற்கனவே எச்சரித்துள்ளனர். ஆனால், தங்கம் பப்பிள் போய் இருப்பதாக இப்போது பிஐஎஸ் எச்சரித்துள்ளது. இதுவே இப்போது முக்கியத்துவம் பெற்றுள்ளது. பிஐஎஸ் சொன்னது போல ஒருவேளை தங்கம் பப்பிள் வெடித்தால் அது குறுகிய காலத்தில் மாபெரும் சரிவை எதிர்கொள்ளும்.
-
கிலோவுக்கு 1000000 தள்ளுபடி! 15% இறக்குமதி வரி.. இந்தியாவில் மீண்டும் தலைதூக்கும் தங்கக் கடத்தல்? -
சும்மா துங்கும் பொக்கிஷம்.. இந்திய வீடு, கோயில்கள் முடங்கிய 32,000 டன் தங்கம்! மத்திய அரசின் ப்ளான்! -
சேலத்தில் விசிக பிரமுகருக்கு 20 பவுன் தங்க மாலை.. மனைவியான பெண் போலீஸ் ஏட்டு சர்ப்ரைஸ் -
இனி தங்கம் உங்க கையில விளையாடும்! தமிழ்நாடு அரசின் சூப்பர் அறிவிப்பு! 5 நாள் ட்ரெய்னிங் போதும்! -
2026 தங்கம் வெள்ளி விலை சரியப்போகுது.. இந்த ஜூனில் வெடிக்க போகும் பலூன்? வல்லுநர்கள் கணிப்பு -
தங்கம்.. இந்திய மக்களின் ஆசையை குழி தோண்டி புதைத்த வரி.. 2 வாரத்தில் தலைகீழாக மாறியது! -
ஆட்டம் போடும் அமெரிக்க டாலர்.. கோடிக்கணக்கான ரூபாய் தங்கத்தை விற்ற ரிசர்வ் வங்கி! இது தான் காரணமா? -
நான் வந்துட்டேன்.. மீண்டும் கெத்தாக திரும்பிய தங்கம்! டாலரால் தலைகீழான மார்க்கெட்! அடுத்து என்ன? -
தங்க திருட்டு வழக்கில் கைதான தம்பதியின் செயலால்... தாம்பரம் சேலையூர் போலீசாருக்கு பெரிய சிக்கல் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்!












Click it and Unblock the Notifications