12.37 லட்சம் ரயில்வே ஊழியர்கள்... 78 நாள் சம்பளம்... ரூ 1,043.43 கோடி போனஸ்: அரசு ஒப்புதல்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: ரயில்வே ஊழியர்களுக்கு இந்தாண்டு போனசாக அவர்களது 78 நாள் சம்பளத்தை வழங்க நேற்று அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

ஆண்டுதோறும் தசரா பண்டிகைக்கு முன்னதாக ரயில்வே ஊழியர்களுக்கு உற்பத்தி தொடர்பான போனஸ் வழங்கப் படுவது வழக்கம். அந்தவகையில், இந்த வருடத்து போனஸாக 78 நாள் சம்பளத்தை ரயில்வே ஊழியர்களுக்கு வழங்க ரயில்வே அமைச்சகம், மத்திய அரசுக்கு பரிந்துரை செய்தது.

நேற்று நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், இதற்கு அனுமதி அளிக்கப் பட்டுள்ளது. அதன்படி, 2012-13ம் ஆண்டுக்கான போனசாக 78 நாள் சம்பளத்தை வழங்க முடிவு செய்யப் பட்டுள்ளது.

தகுதி....

தகுதி....

அரசிதழ் பதிவு பெறாத ரயில்வே ஊழியர்கள் அனைவரும் இந்த போனசை பெற தகுதியானவர்கள்.

12 லட்சம் ஊழியர்கள் பயன்...

12 லட்சம் ஊழியர்கள் பயன்...

இந்த அறிவிப்பின் மூலம் நாடு முழுவதும் உள்ள 12 லட்சம் ரெயில்வே ஊழியர்கள் இந்த பலனை அடைவார்கள்.

78 நாள் போனஸ்....

78 நாள் போனஸ்....

சிறந்த நிதி நிர்வாகத்தை கணக்கில் கொண்டு ஊழியர்களை ஊக்கப்படுத்துவதற்காக ஒரு சிறப்பு நிகழ்வாக இந்த 78 நாள் சம்பள போனஸ் வழங்கப்படுகிறது.

ரூ 1043.43 கோடி போனஸ்....

ரூ 1043.43 கோடி போனஸ்....

கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் சுமார் ரூ.1043.43 கோடி போனசாக வழங்கப்படும் என்று அரசு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வருவாய் அதிகரிப்பு...

வருவாய் அதிகரிப்பு...

இதில், சம்பள உச்சவரம்பு படி ரூ.3,500 மாத சம்பளம் பெறும் ஒரு ஊழியர் போனசாக ரூ.8.975 பெறுவார்.

வருவாய் உயர்வு....

வருவாய் உயர்வு....

2012-13-ம் ஆண்டு மொத்த ரயில்வே போக்குவரத்து கட்டண வருவாய் ரூ.1.24 லட்சம் கோடி. இது கடந்த ஆண்டை விட 18.85 சதவீதம் அதிகமாகும். 2011-12ம் ஆண்டில் இந்த வருவாய் ரூ.1.04 லட்சம் கோடியாக இருந்தது.

கூடுதல் நாட்கள்...

கூடுதல் நாட்கள்...

ரெயில்வே தொழிற்சங்கங்கள் கடந்த ஆண்டை காட்டிலும் கூடுதலான நாட்கள் சம்பளம் போனசாக வழங்க வேண்டும் என்று வலியுறுத்தின. கடந்த காலங்களில் இதைவிட அதிக நாட்கள் சம்பளம் போனசாக வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

13.26 லட்சம் ஊழியர்களுக்கு மட்டுமே....

13.26 லட்சம் ஊழியர்களுக்கு மட்டுமே....

நாட்டில் மொத்தம் 13.26 லட்சம் ரெயில்வே ஊழியர்கள் இருந்தாலும், 1.26 லட்சம் அதிகாரிகளுக்கு இந்த போனஸ் கிடைக்காது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+