சீனா கொடுத்த ஷாக்! 'வெள்ளி விலை' கன்னாபின்னாவென உயர போகுது.. மீண்டும் 4 லட்சமா?

Subscribe to Oneindia Tamil

சீனா மே 1 ஆம் தேதி முதல் சல்பியூரிக் அமிலத்தின் ஏற்றுமதியை முழுமையாக தடை செய்யப் போவதாக அறிவித்துள்ளது. இந்த ஒரு முடிவு உலகம் முழுவதும் உள்ள வெள்ளி சந்தையை பெரிதும் பாதிக்கப்போகிறது. சீனா எப்படி தனது அரிய உலோகத்தை வைத்து உலக நாடுகளை மிரட்டி வருகிறதோ, இதேபோல் தற்போது சல்பியூரிக் அமிலத்தை வைத்து பூச்சாண்டி காட்டி வருகிறது.

வெள்ளிக்கும், சல்பியூரிக் அமிலத்திற்கும் என்ன தொடர்பு..? சீனாவின் அறிவிப்பு என்ன? வெள்ளி விலை எந்த அளவுக்கு உயரும்? இந்த உத்தி எப்படி செயல்படுகிறது? அதன் பின்னணியில் என்ன இருக்கிறது?.. இப்படி பல கேள்விகளை முதலீட்டு சந்தையில் தற்போது எழுந்துள்ளது.

சீனா சல்பியூரிக் அமிலத்தின் ஏற்றுமதியை மே 1 முதல் தடை செய்வது அல்லது கட்டுப்படுத்தும் நடவடிக்கையின் காரணமாக உலகின் மொத்த வெள்ளி விநியோகத்தையும் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முயற்சி செய்கிறது என்பது தான் தற்போதைய முக்கியமான விஷயம்.

China Silver gold Export iran Trump China Sulfuric Acid Ban Silver Price Surge Global Silver Shortage China Silver Control Strategy Sulfuric Acid Export Restriction china sulfuric acid export ban silver price surge 2025 global silver supply crisis china silver accumulation strategy sulfuric acid mining impact silver as mining byproduct copper zinc lead mining halt chile copper production affected indonesia nickel mining stop china controls silver market silver shortage prediction silver industrial demand modern warfare silver importance silver price to 4 lakh china economic dominance silver 2025 4

சீனாவின் சல்பியூரிக் அமில ஏற்றுமதி தடை

சீனா உலகின் மிகப்பெரிய சல்பியூரிக் அமில ஏற்றுமதி நாடாக விளங்குகிறது. 2025 ஆம் ஆண்டு தரவுகளின்படி, சீனா சுமார் 4.6 மில்லியன் மெட்ரிக் டன் சல்பியூரிக் அமிலத்தை ஏற்றுமதி செய்துள்ளது. இனி மே ஒன்று முதல் இந்த ஏற்றுமதியை முழுமையாக நிறுத்துவதாக சீனா அறிவித்துள்ளது.

இந்தத் தடை உடனடியாக உலகின் பல நாடுகளில் சுரங்கத் தொழிலை பாதிக்கும் நிலையை உருவாக்கியுள்ளது. குறிப்பாக வெள்ளி உற்பத்தியுடன் நெருக்கமாக தொடர்புடைய முக்கிய உலோகங்களின் உற்பத்தி குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஒரு நடவடிக்கை மூலம் சீனா உலக நாடுகளின் வெள்ளி உட்பட பல உலோகங்களின் உற்பத்தி சந்தையை முடக்க உள்ளது. இதனால் மே மாதத்தில் இருந்து உலோக சந்தை பெரும் விலை உயர்வை எதிர்கொள்ளும்.

வெள்ளி உற்பத்தியின் ரகசியம்

வெள்ளி என்பது தங்கம் போல் தனியாக சுரங்கத்தில் எடுக்கப்படும் உலோகம் அல்ல. அது லெட், ஜிங்க், காப்பர் ஆகிய உலோகங்களை சுரங்கத்தில் எடுக்கும்போது வரும் ஒரு துணைப் பொருள் (பை-ப்ராடக்ட்) மட்டுமே. இந்த உலோகங்களை பூமியிலிருந்து எடுத்து சுத்திகரிக்கும் போது மட்டும்தான் வெள்ளி கிடைக்கிறது.

சல்பியூரிக் அமிலம் இந்த சத்திகரிப்புக்கு மிக அத்தியாவசியமான பொருள். இது இல்லாமல் லெட், ஜிங்க் அல்லது காப்பர் சுரங்க உற்பத்தி, உலோக சத்திகரிப்பு ஆகியவற்றை நடத்தவே முடியாது. சீனா இப்போது இந்த அமிலத்தின் ஏற்றுமதியை நிறுத்துவதன் மூலம், உலகின் பல நாடுகளில் சுரங்க துறை முடங்கம் விலை உருவாகியுள்ளது. இதனால் வெள்ளி உற்பத்தியும் தானாகவே குறையும். உற்பத்தி குறையும் போது தட்டுப்பாடு நிலவும், அதன் மூலம் விலையும் உயரும்.

இந்து வெள்ளிக்கு மட்டும் அல்லாமல் லெட், ஜிங்க் அல்லது காப்பர் ஆகியவற்றின் விலைக்கும் பொருந்தும்.

China Silver gold Export iran Trump China Sulfuric Acid Ban Silver Price Surge Global Silver Shortage China Silver Control Strategy Sulfuric Acid Export Restriction china sulfuric acid export ban silver price surge 2025 global silver supply crisis china silver accumulation strategy sulfuric acid mining impact silver as mining byproduct copper zinc lead mining halt chile copper production affected indonesia nickel mining stop china controls silver market silver shortage prediction silver industrial demand modern warfare silver importance silver price to 4 lakh china economic dominance silver 2025 4

உலக சுரங்கத் தொழில் பாதிப்பு

சிலி நாடு உலகின் மொத்த காப்பர் உற்பத்தியில் 25 சதவீத பங்கு கொண்டு உள்ளது. அதேபோல் இந்தோனேசியா உலகின் மொத்த நிக்கல் உற்பத்தியில் 61 சதவீத பங்கு கொண்டு உள்ளது. இந்த இரு நாடுகளும் சீனாவிடமிருந்து வரும் சல்பியூரிக் அமிலத்தை பெரிதும் சார்ந்துள்ளன. இப்போது அந்த அமிலம் கிடைக்காத நிலை உருவானால், இந்த நாடுகளின் காப்பர் மற்றும் நிக்கல் சுரங்க உற்பத்தி முற்றிலும் தடைபடும்.

உலகின் எந்த ஒரு உற்பத்தியாளராலும் இந்த இடைவெளியை உடனடியாக நிரப்ப முடியாது. இதனால் உலக அளவில் வெள்ளி உற்பத்தி கணிசமாகக் குறையும். சப்ளை குறைந்தால் தேவை அதிகரிக்கும். இந்த சூழல்தான் வெள்ளி விலை உயர்வுக்கு வழிவகுக்கும்.

ஈரான் போர் தாக்கம்

கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு சுத்திகரிப்பு செயல்முறையின் போது உருவாகும் உப பொருள் தான் இந்த சல்பர். இந்த சல்பர் தான் பின்னர் சல்பியூரிக் அமிலம் (Sulphuric Acid) தயாரிக்கப் பயன்படுத்தப்படுகிறது. ஈரான் போர் காரணமாகவும், ஹார்முஸ் முடக்கம் காரணமாகவும் வளைகுடா நாடுகளில் இருந்து கிடைக்கும் சல்பர் முழுமையாக தடைப்பட்டு உள்ளது. இந்த நேரத்தில் சீனாவின் அறிவிப்பு சல்பியூரிக் அமிலம் சார்ந்த துறையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும்.

காப்பர் (Copper), நிக்கல் (Nickel), கோபால்ட் (Cobalt) போன்ற முக்கிய உலோகங்கள் தான் இன்றைய டிஜிட்டல் மற்றும் எலக்ட்ரிக் உலகின் அடிப்படையாக உள்ளது. உதாரணமாக மின்சார வாகனங்கள் (EV), லேப்டாப், ஸ்மார்ட்போன்கள், டிரான்ஸ்பார்மர்கள், பல்வேறு மின்னணு சாதனங்கள் ஆகியவற்றின் உற்பத்தியில் இந்த உலோகங்கள் முக்கிய பங்காற்றுகின்றன.

இதனால் சல்பர் உற்பத்திலும், சல்பியூரிக் அமிலத்தின் ஏற்பட போகும் தாக்கமும் வர்த்தக சந்தையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்த உள்ளது.

China Silver gold Export iran Trump China Sulfuric Acid Ban Silver Price Surge Global Silver Shortage China Silver Control Strategy Sulfuric Acid Export Restriction china sulfuric acid export ban silver price surge 2025 global silver supply crisis china silver accumulation strategy sulfuric acid mining impact silver as mining byproduct copper zinc lead mining halt chile copper production affected indonesia nickel mining stop china controls silver market silver shortage prediction silver industrial demand modern warfare silver importance silver price to 4 lakh china economic dominance silver 2025 4

சீனாவின் வெள்ளி இறக்குமதி

சீனா சல்பியூரிக் அமிலம் ஏற்றுமதி தடையை அறிவிப்பதற்கு முன்பே தனது உத்தியைத் தொடங்கிவிட்டது. மார்ச் மாதத்தில் மட்டும் 836 டன் வெள்ளியை வாங்கி குவித்துள்ளது சீனா. உலகில் எங்கெல்லாம் வெள்ளி கிடைக்கிறதோ அங்கெல்லாம் அதை தொடர்ந்து வாங்கி வருகிறது.

ஒருபுறம் சல்பியூரிக் அமில ஏற்றுமதியை நிறுத்தி உலக உற்பத்தியைக் குறைக்கும் அதேவேளையில், மறுபுறம் தானே வெள்ளியை அதிக அளவில் வாங்கி வைத்து மறைமுகமாக வெள்ளிக்கான தட்டுப்பாட்டை உருவாக்கியுள்ளது சீனா. இந்த இரட்டை உத்தி மூலம் உலக வெள்ளி சப்ளை செயினை முழுவதுமாக தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர சீனா திட்டமிட்டுள்ளது. இதனால் வரும் காலங்களில் வெள்ளி பற்றாக்குறை, விலை உயர்வாக எதிரொலுக்கும் என கணிக்கப்பட்டு உள்ளது.

போரும்.. வெள்ளியும்..

வெள்ளி இன்று மிக முக்கியமான தொழில்துறை உலோகமாக மாறியுள்ளது. குறிப்பாக நவீனகால போர்க்களத்தில் வெள்ளி இல்லாமல் எதுவும் சாத்தியமில்லை. ராணுவத்தில் கம்யூனிகேஷன், ரேடியோ, சாட்டிலைட் அமைப்புகளில் வெள்ளி மிகவும் அத்தியாவசியமாகும். ஏவுகணை வழிகாட்டி அமைப்புகள், துல்லியமான ஏவுகணை தாக்குதல், சோலார் எனர்ஜி அடிப்படையிலான ராணுவ உபகரணங்கள் ஆகிய அனைத்திலும் வெள்ளி தேவைப்படுகிறது.

மேலும் போர்க்களத்தில் மருத்துவ சிகிச்சைக்கு பயன்படும் ஆண்டிபாக்டீரியல் பண்புகளைக் கொண்ட மருந்துகளிலும் வெள்ளி பயன்படுத்தப்படுகிறது. இந்தக் காரணங்களால் வெள்ளி உலக அளவில் மிக முக்கியமான உலோகமாகக் கருதப்படுகிறது. சீனா வெள்ளி சப்ளையை தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்தால், உலகின் தொழில்துறை மற்றும் ராணுவத் தேவைகளையும் கட்டுப்படுத்தும் நிலை உருவாகியுள்ளது.

சீனாவின் இந்த ஒற்றை முடிவு உலக வெள்ளி சந்தையை நீண்டகால அடிப்படையில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியது என்பதில் சந்தேகமில்லை. இதனால் மே 1ஆம் தேதிக்கு பின்பு வெள்ளி விலை எப்படி நகரும் என்பதை உன்னிப்பாக கவனிக்க வேண்டிய நேரம் இது.

இதனால் வெள்ளி விலை மீண்டும் 4 லட்சம் வரை உயருமா என்றால் வாய்ப்புகள் குறைவு, ஆனால் ஒட்டுமொத்தமாக அனைத்து உலோகங்களும் விலை உயரும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+