500 ரூபாய் நோட்டுகளை மாற்ற ஜூன் 30 வரை அவகாசம் நீடிப்பு-ரிசர்வ் பேங்க்
டெல்லி: ரிசர்வ் பேங்க் அறிவிப்பின்படி 2005 ஆம் ஆண்டில் வெளியான 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்கான காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது.
2005 ஆம் ஆண்டுக்கு முன்பு அச்சிடப்பட்ட 500 ரூபாய் மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளில் அது எந்த ஆண்டு அச்சிடப்பட்டது என்ற விவரம் இடம் பெறவில்லை. இந்த நோட்டுக்களை திரும்ப பெற்றுக்கொள்வதாக ரிசர்வ் வங்கி அறிவித்திருந்தது.

அதன்படி 2015 ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆம் தேதிக்கு முன்னர் ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் கொடுத்து மாற்றிக்கொள்ளுமாறும் அதன்பிறகு 2005 ஆம் ஆண்டு அச்சிடப்படாத 500 ரூபாய், 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்றும் ரிசர்வ் வங்கி அறிவித்திருந்தது. அதன்படி ரூபாய் நோட்டுக்களை மாற்ற இன்னும் 1 வார காலமே இருந்தது.
இந்நிலையில் ரூபாய் நோட்டுகளை மாற்றிக்கொள்ள அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. 2015 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 30 ஆம் தேதி வரை ரூபாய் நோட்டுகளை மாற்றிக்கொள்ளலாம் என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
ஆனால், இனி 10 நோட்டுகளுக்கு அதிகமாக கொடுத்து மாற்றும் போது முகவரி சான்று மற்றும் அடையாள சான்று கொடுத்தால் மட்டுமே மாற்றிக்கொள்ள முடியும்.
கள்ள நோட்டு மற்றும் கருப்பு பணத்தை தடுக்கும் விதமாக ரிசர்வ் வங்கி இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. கணக்கில் வராத கருப்பு பணத்தையும் இதன் மூலம் கட்டுப்படுத்த முடியும்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications