Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வங்கியில் லோன் வாங்கிய பிறகு தந்தை இறந்துவிட்டால்.. அதை மகன் கட்ட தேவையில்லையாம்! ரூல்ஸ் இதுதான்

Subscribe to Oneindia Tamil

சென்னை: வீட்டில் லோன் வாங்கியிருக்கும் யாராவது எதிர்பாராத விதமாக உயிரிழந்தால்.. அந்த கடனை அவர்களின் வாரிசுகள் கட்ட வேண்டும் என்றே நம்மில் பலரும் நினைத்திருப்போம். ஆனால், நமது நாட்டின் விதிகளின்படி எல்லா லோனுக்கும் அப்படி இல்லையாம். இது தொடர்பாகப் பிரபல பொருளாதார வல்லுநர் ராஜேஷ் விளக்கமளித்திருக்கிறார்.

இளைஞர் ஒருவர் சமீபத்தில் தனது ஏற்பட்ட சந்தேகம் குறித்து சமூக வலைத்தளத்தில் எழுப்பியுள்ளார். அதாவது அவரது தந்தை சமீபத்தில் உயிரிழந்துள்ளார். அதன் பிறகு வங்கி டாக்குமெண்டுகளை ஆய்வு செய்தபோதுதான் தனது தந்தை ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவில் ரூ.10.6 லட்சம் பெர்சனல் லோன் எடுத்துள்ளது தெரிய வந்தது.

personal finance home loan bank

பெர்சனல் லோன்

ரூ.18.5 லட்சத்திற்கு அவரது தந்தை வாங்கியுள்ளார். அதில் ரூ.10.6 லட்சம் நிலுவையில் இருந்துள்ளது. வங்கிக் கணக்கை க்ளோஸ் செய்யத் தாயுடன் வங்கி சென்றபோது தான் இவ்வளவு பெரிய பெர்சனல் லோன் இருப்பது தெரிய வந்துள்ளது. தந்தை வாங்கிய பெர்சனல் லோனை தான் கட்ட வேண்டுமா இல்லையா என்ற குழப்பத்திலேயே அவர் இருந்துள்ளார். இது தொடர்பாக அவர் சமூக வலைத்தளத்தில் தனது சந்தேகத்தைப் பதிவிட்டு இருக்கிறார்

சட்டப்பூர்வ வாரிசு

ரெட்டிட் தளத்தில் இது தொடர்பாக அவர், "சில வாரங்களுக்கு முன்பு என் தந்தை மாரடைப்பால் காலமானார். இதையடுத்து நானும் என் தாயும் அவரது வங்கிக் கணக்குகளை க்ளோஸ் செய்ய எஸ்பிஐ வங்கிக்குச் சென்றோம். அப்போது அவருக்கு பெர்சனல் லோன் இருப்பதாக தெரிவித்தனர். நான் மட்டுமே அவரது சட்டப்பூர்வ வாரிசு. ஆனால், அதற்காக அவர் வாங்கிய கடனுக்காக மாதத் தவணையாக ரூ. 36,000 செலுத்துவது சாத்தியமற்றது. ஏனென்றால் இது எனது சம்பளத்தில் 90% ஆகும். என்றும் அவர் குறிப்பிட்டார்.

வங்கியின் பெர்சனல் லோன் பிரிவைச் சேர்ந்த ஊழியர், இந்தக் கடனுக்குக் காப்பீடு இல்லை என்றும் எனவே சட்டப்பூர்வ வாரிசுதான் கடனைச் செலுத்த வேண்டும் என்றும் கூறினார். வேறு எதாவது ஆப்ஷன் இருக்கிறதா என மேனேஜரிடம் கேட்டோம்.. காப்பீடு கிடைக்க வாய்ப்பு இருக்கிறது என்றார். ஆனால், அவருக்கும் கூட தெளிவான பதில் தெரியவில்லை. ஏற்கனவே இஎம்ஐ வர ஆரம்பித்துவிட்டது. அவரது ஓய்வூதியம், பிஎஃப் எல்லாம் வர குறைந்தது 6-12 மாதங்கள் ஆகுமாம். நான் இங்குத் தவித்துக் கொண்டிருக்கிறேன்" என்று அந்த நபர் பதிவிட்டுள்ளார்.

பொருளாதார வல்லுநர் விளக்கம்

இது தொடர்பாகப் பிரபல பொருளாதார வல்லுநர் ராஜேஷ் தனது ட்விட்டரில் விளக்கமளித்துள்ளார். அதில் அவர், "உங்கள் தந்தையோ, கணவரோ, மனைவியோ வாங்கும் பர்சனல் லோனுக்கு நீங்கள் பொறுப்பல்ல. வங்கி, அவர்களது eligibilityயை வைத்து தான் அவர்களுக்கு லோன் கொடுத்து இருப்பார்கள். அவர்கள் வாங்கும் கடனுக்கு நீங்கள் என்றுமே பொறுப்பு எடுத்துக்கொள்ளத் தேவையில்லை.

"என்னுடைய சட்டப்பூர்வ வாரிசிடம் நீங்கள் பணத்தை வசூலித்துக் கொள்ளலாம்" என்று அவர்கள் கையெழுத்து போட்டு கொடுத்து இருந்தாலும், அது செல்லாது. நீங்களாக கையெழுத்து போடாத வரையில் (guarantor/co-applicant) நீங்கள் அந்த கடனை திரும்ப செலுத்த தேவையில்லை.

கட்ட தேவையில்லை

ஒருவேளை லோன் தொடர்பாக வங்கி உங்களைத் தொடர்புகொண்டால்.. அனைத்து செல்போன் உரையாடல்கள் மற்றும் மின்னஞ்சல்களைப் பதிவு செய்து பாதுகாத்துக் கொள்ளுங்கள். தனிப்பட்ட முறையில் உங்களைச் சந்திக்க யாரையும் அனுமதிக்க வேண்டாம்.. சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால் வங்கி கட்ட சொன்னால் முடியாது எனத் திட்டவட்டமாக சொல்லலாம்" என்று அவர் பதிவிட்டுள்ளார்.

ஹோம் லோன் இருந்தால்?

அப்போது ஹோம் லோன் அல்லது வாகன கடன் இருந்தால் என்னவாகும் என்ற சந்தேகம் வரும். இதற்கும் அவர் விளக்கமளித்துள்ளார். இது தொடர்பாக அவர், "ஹோம் லோன் என்பவை குறிப்பிட்ட வீட்டின் மீது வழங்கப்படும் கடனாகும். கடன் பெறுபவர்கள் தங்களின் விற்பனைப் பத்திரத்தை வங்கியில் சமர்ப்பிப்பார்கள். லோன் வாங்கியவர் உயிரிழந்தால் கடனை முழுமையாகத் திருப்பிச் செலுத்தினால் வழக்கம் போல லோன் க்ளோஸ் ஆகும்.

ஒருவேளை கடனைத் திருப்பிச் செலுத்த முடியாவிட்டால், வங்கி லோன் எடுத்த வீட்டை விற்று அதன் பணத்தைப் பெற்றுக்கொள்ளும். எனவே, ஹோம் லோனுக்கு காப்பீடு எடுப்பது எப்போதும் சிறந்தது" என பதிவிட்டுள்ளார். மேலும், ஹோம் லோனை உங்கள் பெயருக்கு மாற்றி, நீங்கள் வழக்கம் போல இஎம்ஐ தொகையைக் கட்டலாம் எனப் பதிவிட்டுள்ளார்.

முக்கியம்

அதேநேரம் இந்திய சட்டத்தின்படி பெர்சனல் லோனில் வாங்கியவருக்கு எதாவது சொத்து அல்லது வீடு இருந்தால்.. அதை விற்று கடனை மீட்க வங்கிகளுக்கு உரிமை இருப்பதாகவும் வல்லுநர்கள் குறிப்பிடுகிறார்கள். கடன் வாங்கியவர் பெயரில் எந்தவொரு சொத்தும் இல்லை என்றால் யாரும் அந்த கடனை கட்ட தேவையில்லை. அதேநேரம் சொத்துகள் எதாவது இருந்தால் அதை விற்று கடனை மீட்கும் உரிமை வங்கிக்கு இருப்பதாகவே வல்லுநர்கள் குறிப்பிடுகிறார்கள். எனவே, லோன் எடுக்கும்போதே அதற்கு இன்சூரன்ஸ் எடுப்பது நல்லது!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+