Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"தலையில் வெள்ளை துண்டு.." ஒரேயடியாக போட்டு உடைத்த ஆனந்த் சீனிவாசன்! என்ன இப்படி சொல்லிட்டாரு

Subscribe to Oneindia Tamil

சென்னை: ரியல் எஸ்டேட் மீதான ஆர்வம் இந்தியர்களுக்கு எப்போதுமே குறைந்ததே இல்லை.. அதிலும் இப்போதெல்லாம் இந்தியாவைத் தாண்டி, துபாயிலும் கூட பலரும் ஆர்வமாக ரியல் எஸ்டேட்களில் முதலீடு செய்து வருகிறார்கள். அப்படி முதலீடு செய்வோருக்கு இருக்கும் ரிஸ்க் என்ன என்பது தொடர்பாக பிரபல பொருளாதார வல்லுநர் ஆனந்த் சீனிவாசன் விளக்கியுள்ளார்.

இந்தியாவில், அதிலும் குறிப்பாக தென்னிந்தியாவில் இருந்து பலரும் மத்திய கிழக்கு நாடுகளுக்கு செல்கிறார்கள். அந்த மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தான் இப்போது போர் வெடித்துள்ளது. இதனால் பதற்றம் அதிகரித்து வருகிறது. இது ஒரு பக்கம் இருக்கக் கடந்த சில ஆண்டுகளாகவே துபாயில் இந்தியர்கள் ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்வது அதிகரித்து இருந்தது. அதில் இருந்த
ஆபத்துகளைப் பிரபல பொருளாதார வல்லுநர் ஆனந்த் சீனிவாசன் விளக்கியுள்ளார்.

Anand Srinivasan real estate personal finance

ஆனந்த் சீனிவாசன்

இது தொடர்பாக அவர் தனது யூடியூப் பக்கத்தில், "ஈரான், அமெரிக்கா இடையேயான போர் தொடர்ந்து நடந்து வருகிறது. அமெரிக்கா தான் ஈரானை துவம்சம் செய்கிறது என நாம் நினைத்துக் கொண்டு இருப்போம். ஆனால், உண்மையில் ஈரானுக்குத் தான்
அட்வான்டேஜ் இருக்கிறது. ஏனென்றால் ஈரானிடம் இழப்பதற்கு எதுவுமே இல்லை. எத்தனை பேரை வேண்டும் என்றாலும் இழக்கத் தயாராக இருக்கிறார்கள். மேலும், ஈரான் தாக்குதலுக்குப் பயன்படுத்தும் ஒரு டிரோன் 20,000 டாலர் தான். டிரோன்களை அனுப்பிக் கொண்டே இருக்கிறது. ஆனால், அந்த டிரோனை தடுத்து, முறியடிக்கப் பெரிய ஏவுகணையை அனுப்புகிறார்கள். அதன் ரேட் 1 மில்லியன் டாலராக இருக்கிறது.

அவன் 20,000 டாலரை இறங்கினால்.. டிரம்ப் 1 மில்லியன் டாலருக்கு சீட்டை இறக்க வேண்டி இருக்கிறது. அதாவது 20,000 ஈரான் சீட் இறக்கினால் 10 லட்சம் சீட்டை ட்ரம்ப் இறக்கவேண்டும். கத்தாரில் உள்ள எல்எல்ஜி பிளான்ட் மூடப்பட்டுள்ளது. அதேபோல அராம்கோவிலும் குண்டு விழுந்து இருக்கிறது. மத்திய கிழக்கில் உள்ள எல்லா நாடுகளும் போரில் இறங்கினால் கச்சா எண்ணெய் விலை 100 டாலரை தாண்டிவிடும்.

டிரம்பிற்கு பிரஷர்

அமெரிக்காவின் விமான படையை மட்டும் வைத்துக் கொண்டு பெரிதாக எதுவும் செய்ய முடியாது. ஆட்களை உள்ளே இறக்க வேண்டும். அப்படி இறக்கும்போது, அவர்களை ஈரான் சுட்டுத் தள்ளுவார்கள். ஒரு சிலரைச் சுட்டுத் தள்ளினாலே போதும்..
போரில் வெற்றியா தோல்வியா என்பது அடுத்தது.. ஆனால், அமெரிக்க வீரர்கள் உயிரிழந்து, அவர்கள் சடலம் அமெரிக்காவுக்கு எடுத்துச் செல்லும்போது அது தலைப்பு செய்தியாகும்.. அப்போது ட்ரம்புக்கு பிரஷர் வரும். நவம்பரில் அங்கு மிட் டேர்ம் தேர்தல் வேற வருகிறது. இதனால் இந்த போர் எப்படிப் போகும் என்பதில் தெளிவில்லாமல் இருக்கிறது.

துபாய் ரியல் எஸ்டேட்

இதற்கு முன்பு வரை துபாயில் ரியல் எஸ்டேட் வாங்குங்கள் என பலரும் சொல்லி வந்தார்கள். நான் துபாய் ரியல் எஸ்டேட், இந்திய ரியல் எஸ்டேட் வித்தியாசம் சொல்லி இருக்கிறேனே தவிர துபாயில் ரியல் எஸ்டேட் வாங்கலாம் என சொன்னதே இல்லை. நானும் வாங்கியது இல்லை. ஏன் வாங்கவில்லை என்பதற்குக் காரணம் சொல்கிறேன்.. எங்கள் குடும்பம் பல ஆண்டுகள் துபாயில் இருந்துள்ளது. அப்போது பிராந்திய மோதலில் போடப்பட்ட குண்டு எங்கள் வீட்டு பால்கனியில் விழுந்தது. அப்போது வீடியோ எல்லாம் எடுக்கும் வசதி இல்லை என்பதால் அதை வீடியோ எடுக்கவில்லை.

தலையில் வெள்ளை துண்டு

அதன் ஒரு பகுதியை நாங்கள் ரொம்ப நாட்களாகவே வீட்டில் ஹாலில் வைத்திருந்தோம். இதுதான் அங்கு நிலைமை. அங்கு எப்போது வேண்டுமானாலும், எங்கு வேண்டும் என்றாலும் ஏவுகணைகள் தாக்கும்.. ஏவுகணைகள் தாக்கினால் வெள்ளைக்காரன் ஓடி போய்விடுவான். வெள்ளைக்காரன் ஓடிவிட்டால் துபாய் ரியல்
எஸ்டேட் படுத்த படுக்கையாகப் படுத்துவிடும். இந்த மோதலில் கூட புர்ஜ் கலிஃபாவை குறிவைத்தும் தாக்குதல்கள் நடந்துள்ளது நாம் கவனிக்க வேண்டும்.

எனவே, துபாயில் கடன் வாங்கி ரியல் எஸ்டேட் வாங்கினவன் கதை தலையில் வெள்ளை துண்டு கதை தான்.. இதன் காரணமாகவே அதையெல்லாம் தவிர்க்க வேண்டும். இந்த போர் முடிந்தாலும் கூட மத்திய கிழக்கு எப்போதும் பதற்றம் நிறைந்தது.. எப்போது வேண்டும் என்றாலும் இன்னொரு போர் தொடங்கும். இதன் காரணமாகவே தங்கம் தான் பாதுகாப்பானது என்கிறேன்" என்று அவர் தெரிவித்தார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+