சமையல் எரிவாயு மானியம் ரூ. 20 நிறுத்தி வைப்பு- விலையில் மாற்றமில்லை
டெல்லி: இந்தியாவில் சமையல் கேஸ் சிலிண்டருக்கான மானியத்தை மத்திய அரசு நிறுத்தியுள்ளது.
அதேசமயம், சிலிண்டர் விலையில் எந்த மாற்றமும் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது மத்திய அரசு எண்ணை நிறுவனங்களின் பெட்ரோலிய பொருட்களுக்கு மானியம் வழங்கி வருகிறது.

பெட்ரோலியப் பொருட்கள் விலை:
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணையின் நிலவரத்தைப் பொறுத்து இந்தியாவில் பெட்ரோலியப் பொருட்களின் விலையை எண்ணை நிறுவனங்கள் நிர்ணயம் செய்கின்றன.

கச்சா எண்ணெய் விலை குறைவு:
சமீபத்தில் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணையின் விலை குறைந்ததால் இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் குறைக்கப்பட்டன.

சிலிண்டர் விலை குறையவில்லை:
ஆனால், சமையல் எரிவாயு சிலிண்டருக்கு அதிக அளவு மானியம் வழங்கப்படுவதால் சிலிண்டர் விலை குறைக்கப்படவில்லை.

மானியம் நிறுத்தி வைப்பு:
அதே சமயம் மத்திய அரசு கேஸ் சிலிண்டர்களுக்கு வழங்கி வந்த மானியத்தில் சிலருக்கு ரூபாய் 20 நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. ஆனால், இதன் மூலம் சிலிண்டர் விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications