தங்கம் ரொம்பவே ரிஸ்க்.. "இந்த" கோல்ட் பக்கமே போக வேண்டாம்.. உடைத்து பேசிய ஆனந்த் சீனிவாசன்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தங்கம் விலையில் வரலாறு காணாத சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் தங்கத்தை இப்போது வாங்கலாமா.. இல்லை கொஞ்சம் காத்திருந்து வாங்கலாமா என்ற கேள்வியே பலருக்கும் எழுந்துள்ளது. இதற்கிடையே தங்கம் தொடர்பாக சில முக்கிய கருத்துகளைப் பகிர்ந்துள்ள ஆனந்த் சீனிவாசன், விலையேற்றம் குறித்தும் முக்கிய பாயிண்டுகளை சொல்லி இருக்கிறார்.

இந்தியா மட்டுமின்றி, சர்வதேச அளவிலும் தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்குக் குறைந்துள்ளது. சர்வதேச அளவில் நடக்கும் பல்வேறு விஷயங்களை இதற்குக் காரணமாகச் சொல்கிறார்கள். இதற்கிடையே தங்கம் விலை சரிவுக்கான காரணத்தை விளக்கியுள்ள பொருளாதார வல்லுநர் ஆனந்த் சீனிவாசன், இதில் உள்ள சில ரிஸ்க்குகள் குறித்தும் விளக்கியுள்ளார்.

Anand Srinivasan gold personal finance

ஆனந்த் சீனிவாசன்

இது தொடர்பாக அவர் தனது யூடியூப் பக்கத்தில், "அமெரிக்காவில் பணவீக்கம் அதிகரித்து வரும் சூழலில், மே மாதம் பெடரல் வங்கி தலைவராகப் பதவியேற்கும் கெவின் வார்ஷ் வட்டி விகிதத்தை உயர்த்த வேண்டும். ஆனால், அவர் உயர்த்தாமல் அப்படியே வைத்திருப்பார். டிரம்ப் தான் அவரை இந்த பதவிக்கு நியமித்திருக்கிறார். எனவே, அந்த விசுவாசத்தைக் காட்ட வட்டி விகிதத்தை உயர்த்த மாட்டார். அதேபோல அங்குப் பணவீக்கம் 4%க்கு மேல் இருப்பதாலும் எரிபொருள் விலை 20%க்கு மேல் உயர்ந்துவிட்டதாலும் வட்டி விகிதத்தைக் குறைக்க மாட்டார் என்றே எதிர்பார்க்கிறோம். எனவே, வட்டி விகிதத்தைக் குறைக்கவும் செய்யாமல் உயர்த்தவும் செய்யாமல் வேடிக்கை பார்ப்பார் என்றே தெரிகிறது.

பொருளாதார அழுத்தம்

பல்வேறு காரணங்களால் அமெரிக்கப் பொருளாதாரம் கடும் அழுத்தத்தில் இருக்கிறது. அங்குப் பொருளாதார மந்தநிலை வருவதற்குக் கூட வாய்ப்பு இருக்கிறது. இதன் காரணமாகவே இந்தியப் பங்குச்சந்தையும் எவ்வளவு வேண்டும் என்றாலும் சரியலாம் என்கிறேன். நமது நாட்டில் ஏற்றுமதி குறையும் சூழலில், இறக்குமதி தொடர்ந்து அதிகரிக்கும். இதனால் ஒருவித டாலர் பற்றாக்குறை கூட ஏற்படலாம். நடப்புக் கணக்கு பற்றாக்குறை 3.5% வரை கூடப் போகலாம் அப்போது இந்தியாவில் அழுத்தம் அதிகரிக்கும்.

தங்கம் விலை சரிந்துள்ளது உண்மை தான். வரும காலத்தில் போர் எப்படிப் போகிறது என்பதைப் பொறுத்தே தங்கம் விலை இருக்கும். கச்சா எண்ணெய் விலை ஏறினால் தங்கம் விலை குறையும். சர்வதேச அளவில் டாலரில் மட்டுமே கச்சா எண்ணெய் வர்த்தகம் நடைபெறுகிறது. எனவே, கச்சா எண்ணெய் விலை உயர்ந்தால் தங்கம் விலை உயரும்.

பெரும் பாதிப்பு

இப்போது மத்திய கிழக்கில் இருந்து கச்சா எண்ணெய்யை வெளியே எடுத்து வர முடியாத சூழல் இருக்கிறது. 30% வரை சப்ளை குறைந்துள்ளது. இந்த செயற்கை தட்டுப்பாடு காரணமாகக் கச்சா எண்ணெய் விலை உயர்ந்துள்ளது. இதனால் டாலர் விலையும் உயர்ந்த நிலையில், தங்கம் விலை குறைந்தது. ஆனால், இந்த சிக்கல் இன்னும் ஒரு 4, 5 மாதங்கள் நீடித்தால் கூட அதில் இருந்து இந்தியா மீண்டு வர 4 ஆண்டுகள் வரை கூட ஆகலாம். இதை ஒரு பணமதிப்பு இழப்பு + கோவிட் போலப் பார்க்க வேண்டும். அந்தளவுக்குப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும்.

ரொம்பவே ரிஸ்க்

இப்போது கோல்ட் ETF வாங்காமல் இருப்பது நல்லது. இப்போது 50% கேஷ் 50% பியூச்சர்ஸ் மார்க்கெட்ஸ் என வந்துவிட்டது. எனவே, ஹெட்ஜிங் சரியாகச் செய்கிறார்களா என்பதை நாம் பார்க்க வேண்டும். அதெல்லாம் ரொம்பவே கடினம். உள்ளே போய் எவ்வளவு உண்மையில் தங்கம் இருக்கிறது.. எவ்வளவு கோல்ட் பியூச்சர்ஸ் வைத்து இருக்கிறார்கள் என்பதை நாம் பார்க்க வேண்டும்.

அதாவது இடிஎஃப்கள் கோல்ட் ஃபியூச்சர்ஸ் 50% வைத்துக் கொள்ளலாம் என ஒரு ரூல் வந்திருப்பதாகச் சொல்கிறார்கள். நான் பணம் தரேன் நீ தங்கம் வாங்கி வை என்பதே சரி. இதுபோன்ற ரூல்ஸ்கள் ஆபத்தானது. தங்கத்தை வாங்கக் கூடாது என்பதற்காகவே இதைக் கொண்டு வந்துள்ளனர். இந்த ரூல் அப்படியே அமலுக்கு வந்தால் நிறைய டிராக்கிங் எரர் வர வாய்ப்பு இருக்கிறது. இப்போதே கூட தங்கத்தை விட கோல்ட் ETF அதிகம் ஏறி இறங்குகிறது. எனவே, என்னைப் பொறுத்தவரை ஒரு பெரிய தொகை வந்தவுடன் இடிஎஃப்களை விற்றுவிட்டுத் தங்கத்தை வாங்கிவிடுவதே சரியாக இருக்கும்" என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+