ரூ.,8500ஐ எட்ட போகுது தங்கம் விலை.. உடனே நகை கடைக்கு ஓடுங்க.. ஆனந்த் சீனிவாசன் பளீச்.. என்ன காரணம்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: நமது நாட்டில் இப்போது தங்கம் விலை ஒவ்வொரு நாளும் புதிய உச்சத்தைத் தொட்டு வருகிறது. இதனால் தங்கத்தை வாங்க முடியாமல் மக்கள் சிரமத்தை எதிர்கொள்கிறார்கள். கொஞ்சம் குறைந்தாலும் தங்கத்தை வாங்கவே மக்கள் ஆர்வமாக இருக்கிறார்கள். இதற்கிடையே தங்கத்தை வாங்குவது தொடர்பாகப் பிரபல பொருளாதார ஆலோசகர் ஆனந்த் சீனிவாசன் சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளது.

தங்கம் விலை கடந்த சில காலமாகவே தொடர்ந்து உயர்ந்து வருகிறது. மத்திய அரசு கடந்த சில மாதங்களுக்கு முன்பு இறக்குமதி வரியைக் குறைத்திருந்த நிலையில், அதையும் தாண்டி இப்போது தங்கம் விலை உயர்ந்துவிட்டது.

anand srinivasan personal finance business

நேற்றைய தினம் சென்னையில், ரூ.7100க்கு விற்பனையானது. அதேபோல 24 கேட் தங்கம் ரூ.7500ஐ தாண்டிவிட்டது. இப்படி தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து புதிய உச்சத்தைத் தொட்டு வருகிறது.

தங்கம்: நமது நாட்டில் பெரும்பாலான ஏழை மக்கள் தங்கள் சேமிப்பிற்குத் தங்கத்தையே நம்பி இருக்கிறார்கள். அப்படியிருக்கும் போது தங்கம் விலை இந்தளவுக்கு உயர்வதால் அவர்களால் தங்கத்தை வாங்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இப்போதும் நமது நாட்டில் கொஞ்சம் தங்கம் விலை குறைந்தாலும் உடனே நகைக் கடைக்குச் சென்று தங்கம் வாங்கவே மக்கள் ஆர்வத்துடன் நிற்கிறார்கள்.

இதற்கிடையே பிரபல பொருளாதார வல்லுநர் ஆனந்த் சீனிவாசன் தங்கம் விலை ஏற்றம் குறித்து விளக்கியுள்ளார். மேலும், தங்கத்தை இப்போது வாங்கலாமா என்பது குறித்தும் பளீச் பதிலை அளித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது சமீபத்திய வீடியோவில், "நமது நாட்டில் ஓரிரு இடங்களில் இப்போது 24 கேரட் தங்கம் ஒரு கிராம் இப்போது ரூ. 7,700ஐ தாண்டி விற்பனையாகிறது. இத்துடன் ஜிஎஸ்டியை சேர்த்தால் அதுவே ரூ.8000ஐ தாண்டிவிடும்.

உச்சம் தொடும்: அதாவது நமது நாட்டில் விற்கப்படும் 24 கேரட் தங்கம் ஒரு கிராம் ரூ.8000 தாண்டிவிட்டது. மிக விரைவில் ஆபரணத் தங்கத்தின் விலையும் ஓரிரு மாதங்களில் ரூ.8000ஐ தாண்டும். வரும் நவ. மாதம் அடுத்த மேஜர் மாற்றம் வரும் என்று எதிர்பார்க்கிறோம்.

நமது நாட்டில் கல்யாண சீசன் வந்துவிட்டது. தங்கம் விற்பனை அதிகரிக்கும் என எதிர்பார்க்கிறோம். மறுபுறம் சீனாவில் பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இதனாலும் அங்கு மக்கள் தங்கத்தை வாங்குகிறார்கள். இந்த இரு நாடுகளில் வசிக்கும் மக்கள் தங்கத்தை அதிகளவில் வாங்குவதாலேயே தங்கம் விலை உயர்ந்து வருகிறது" என்றார்.

இதுவே சரியான நேரம்: அதேபோல அவர் மற்றொரு வீடியோவில், "மத்திய அரசு கடந்த சில மாதங்களுக்கு முன்பு தங்கத்திற்கான இறக்குமதி வரியைக் குறைத்தார்கள். இப்போது அதைத் தாண்டி சில நூறு ரூபாய் வரை தங்கம் விலை உயர்ந்துவிட்டது. அந்த வரி குறைப்பு இல்லை என்றால் இப்போதே தங்கம் விலை ரூ.7500ஐ தாண்டி இருக்கும். தங்கம் விலை நிச்சயம் ரூ.8500ஐ தாண்டிப் போகும். எனவே, நீங்கள் தங்கத்தை வாங்க வேண்டும் என நினைத்தால் இதை விட உங்களுக்கு மிகச் சிறந்த வாய்ப்பு கிடைக்கவே கிடைக்காது" என்றார்.

இது ஒரு செய்தி மட்டுமே. இதை நிச்சயமாக முதலீடு ஆலோசனையாக எடுத்துக் கொள்ளக் கூடாது. முதலீடு சார்ந்த முடிவுகளை எடுக்கும் முன்பு உங்கள் பொருளாதார ஆலோசகரிடம் உரிய ஆலோசனை கேட்ட பிறகு, உங்களுக்கு ஏற்ற முடிவை எடுக்க வேண்டும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+