For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சிறு-குறு தொழில் நிறுவனங்கள் ஜிஎஸ்டி எண்ணுடன் ஆதார் எண்ணை இணைத்தால் சலுகை

மத்திய அரசின் சலுகை பெற ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயம் இல்லை என்றாலும் சிறு-குறுந்தொழில் செய்பவர்கள் தங்கள் ஜிஎஸ்டி - எண்ணுடன் ஆதார் எண்ணை இணைத்தால் சலுகைகள் கிடைக்கும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ள

Google Oneindia Tamil News

டெல்லி: சிறு மற்றும் குறுந்தொழில் முனைவோர்கள் அரசின் பல்வேறு சலுகைகளை பெற ஆதார் எண்ணை தங்களின் ஜிஎஸ்டி எண்ணுடன் இணைப்பது கட்டாயமாகிறது. மிக விரைவில் இது தொடர்பாக தொழில் முனைவோர்களுக்கு நிதி அமைச்சகம் மூலம் கடிதங்கள் அனுப்பபடும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

பல்வேறு சமூக நலத்திட்டங்களின் பலன்களை அடைவதற்கு ஆதார் அடையாள எண்ணை இணைப்பது கட்டாயம் என்ற நிலைப்பாட்டை மத்திய அரசு எடுத்துள்ளது. லிண்டர் மானியம், மண்ணெண்ணெய் மானியம், உரமானியம், மதிய உணவு சாப்பிடும் மாணவர்கள், காசநோயாளிகள், உள்பட பல சமூக நலத்திட்டங்களின் பயனை பெற ஆதார் எண் இணைப்பது அவசியம் என்பது மத்திய அரசின் உத்தரவு. மத்திய அரசின் பல்வேறு நலத்திட்டங்களுக்கு ஆதார் எண் கட்டாயமாக்கப்பட்டு வருகிறது.

Govt to ask MSMEs under GSTN to obtain Udyog Aadhaar

பான் எண்ணுடன், ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டது. ரேசன் கார்டுடன் ஆதார் எண் இணைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த நிலையில் சிறு மற்றும் குறு தொழில் முனைவோர்கள் தங்கள் ஆதார் எண்ணுடன் ஜிஎஸ்டி எண்ணை இணைக்க வேண்டும் என்ற அறிவிப்பு வெளியாக உள்ளது.

சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு உத்யோக் ஆதார் என்கிற திட்டம் 2015ம் ஆண்டில் இருந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த திட்டத்தின் கீழ் இதுவரை 4.1 மில்லியன் நிறுவனங்கள் பதிவு செய்யப்பட்டு உள்ளது.

சிறு மற்றும் குறு தொழில் செய்பவர்கள் தங்கள் ஜிஎஸ்டி – எண்ணுடன் ஆதார் எண்ணை இணைத்தால் அவர்களுக்கு சலுகைகள் அளிக்கப்படும். இது தொடர்பாக நிதி அமைச்சகத்தில் இருந்து அலுவல் ரீதியான தகவல்கள் சில நாட்களில் வெளியாகும் என குறு மற்றும் சிறு தொழில் நிறுவனங்கள் துறை செயலாளர் செக்ரட்டரி ஏகே பண்டா கூறினார்.

சிறுங்குறுந்தொழில் முனைவோர்கள் அரசின் பல்வேறு சலுகைகளை பெற ஆதார் எண்ணை தங்களின் ஜிஎஸ்டி எண்ணுடன் இணைப்பது கட்டாயமாகிறது.

மிக விரைவில் இது தொடர்பாக தொழில் முனைவோர்களுக்கு நிதி அமைச்சகம் மூலம் கடிதங்கள் அனுப்பப்டும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

குறு மற்றும் சிறு தொழில் நிறுவனங்கள் தங்களுடைய தகவல்களை இணைக்கும் போது அத்துடன் ஆதார் மற்றும் ஜிஎஸ்டி எண்ணை இணைத்தால் அவர்களுக்கு எந்த மாதிரியான சலுகைகளை அளிக்கலாம் என்று மத்திய அரசு முடிவு செய்யும் என்றும் கூறாப்பட்டிருக்கிறது.

தொழில் முனைவோர்களின் விருப்பம் இல்லாமல் அவர்களின் தகவல்களை பெற இயலாது என்பது எங்களுக்கு தெரியும் என்று குறு மற்றும் சிறு தொழில் நிறுவனங்கள் துறை செயலாளர் ஏகே பண்டா கூறினார்.

தொழில் முனைவோர்கள் தங்களின் விருப்பம் இருந்தால் மட்டுமே ஆதார் எண்ணை இணைக்கட்டும். ஆதாரை இணைத்தால் அதனால் நன்மைகள் கிடைக்கும் என்று நாங்கள் ஆலோசனைகள் மட்டுமே வழங்குகிறோம். அது கட்டாயம் இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

English summary
The government will urge about one crore MSMEs registered under the GST Network to obtain Udyog Aadhaar number to avail benefits of various government schemes, a top officials said.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X