ஜிஎஸ்டி : இன்சுலினுக்கு 5%, ரூ.100க்கு குறைவான சினிமா டிக்கெட்டுக்கு 18%

Posted By: Staff
Subscribe to Oneindia Tamil

டெல்லி: இன்சுலின் மீதான வரி 12%ல் இருந்து 5% ஆக குறைக்கப்பட்டுள்ளது. 100 ரூபாய்க்கு கீழ் விலை உள்ள டிக்கெட்டுகளுக்கு வரி 18% ஜிஎஸ்டி வரி குறைக்கப்பட்டுள்ளது என்று மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி கூறியுள்ளார்.

சரக்கு மற்றும் சேவை வரியான ஜி.எஸ்.டி அடுத்த மாதம் முதல் அமல்படுத்தப்படவுள்ளது. இந்நிலையில் தற்போது அறிவிக்கப்பட்டுள்ள ஜி.எஸ்.டி. வரி விகிதங்களுக்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து அவற்றுக்கு தீர்வு காணும் வகையில் 18 துறைகள் சார்ந்த குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. நிதியமைச்சர் அருண்ஜெட்லி தலைமையில் நடைபெற்ற இன்றைய ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில் இந்தக் குழுக்களும் கலந்துகொண்டன.

66 பொருட்களுக்கு வரி குறைப்பு

66 பொருட்களுக்கு வரி குறைப்பு

கூட்டத்திற்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய நிதியமைச்சர் அருண்ஜெட்லி, 133 பொருட்களின் வரி விகிதம் தொடர்பாக பரிந்துரைகள் பெறப்பட்டதாகவும், அவை முறையாக பரிசீலிக்கப்பட்ட பின் 66 பொருட்களுக்கான வரி விகிதங்கள் குறைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

இன்சுலின், முந்திரி பருப்பு

இன்சுலின், முந்திரி பருப்பு

உள்ளாடைகள், முந்திரிப் பருப்பு உள்ளிட்டவற்றுக்கு வரி 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. அகர் பத்தி, இன்சுலினுக்கு 12 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக வரி குறைக்கப்பட்டுள்ளதாகவும் நிதியமைச்சர் அருண் ஜெட்லி கூறினார்.

பள்ளி பைகள்

பள்ளி பைகள்

கணினி பிரிண்டர்கள், பள்ளி பைகள் உள்ளிட்டவற்றுக்கு 28 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக வரி குறைக்கப்பட்டுள்ளது. தாகவும் அருண்ஜெட்லி தெரிவித்தார். பள்ளி பைகளுக்கு விதிக்கப்பட்ட வரி 28% இருந்து 18% ஆக குறைக்கப்பட்டுள்ளது என்றும் ஜெட்லி கூறியுள்ளார்.

சினிமா டிக்கெட்டுகள்

சினிமா டிக்கெட்டுகள்

100 ரூபாய்க்கு மேல் விற்கப்படும் அனைத்து சினிமா டிக்கெட்டுகளுக்கு 28 சதவீத வரி என்பதில் மாற்றமில்லை என்று தெரிவித்த அவர், 100 ரூபாய்க்கு கீழ் விலை உள்ள டிக்கெட்டுகளுக்கு வரி 18 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார். கண் மைக்கு 28 சதவிகிதத்தில் இருந்து 18% ஆக குறைக்கப்பட்டுள்ளது.

சினிமா டிக்கெட் விலை குறையுமா?

சினிமா டிக்கெட் விலை குறையுமா?

சினிமா டிக்கெட்டுகள் 140 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. பார்க்கிங், பாப்கார்ன் எல்லாம் சேர்த்து குடும்பத்தோடு தியேட்டருக்கு போனால் 2000 வரை செலவாகிறது. 100ரூபாய்க்கு குறைவான டிக்கெட்டுகளுக்கு ஜிஎஸ்டி வரி 18% என்று நிதியமைச்சர் அறிவித்துள்ளதால் தியேட்டர் உரிமையாளர்கள் டிக்கெட் விலையை குறைக்க முன்வருவார்களா என்பதே எதிர்பார்ப்பாக உள்ளது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
GST Tax rates for certain kitchen items such as pickles and mustard sauce as well as movie tickets costing up to Rs 100 were lowered on Sunday after the Centre and states reduced levies on 66 items.
Please Wait while comments are loading...