For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வரி ஏய்ப்பு செய்து விட்டு தப்ப முடியாது... வருமான வரித்துறை தோண்டி துருவுது

Google Oneindia Tamil News

டெல்லி: ஜிஎஸ்டி வரி செலுத்தியதில் ஏதேனும் வரி ஏய்ப்பு நடந்துள்ளதா? என்பதைப் பற்றி ஆராய்வதற்காக அனைத்து விபரங்களையும் ஜிஎஸ்டி ஆணையத்திடம் இருந்து கேட்டுப் பெற்றுள்ளது மத்திய வருமான வரித்துறை ஆணையம்.

இதோ 2017-18ம் நிதியாண்டு முடிந்து 2018-19ம் நிதியாண்டு ஆரம்பமாகிவிட்டது. கூடவே 2017-18ம் ஆண்டுக்கான வருமான வரி ரிட்டன் தாக்கல் செய்வதற்கான அனைத்து நடவடிக்கைகளும் தொடங்கிவிட்டது.

வர்த்தகர்களும், தொழில் துறையினரும் வருமான வரி ரிட்டன் தாக்கல் செய்வதற்கான அனைத்து பணிகளையும் முடுக்கி விட்டுள்ளனர்.

சரக்கு மற்றும் சேவை வரி

சரக்கு மற்றும் சேவை வரி

ஜிஎஸ்டி வரி விதிப்பு முறை அமல்படுத்தப்பட்டு 9 மாதங்கள் முடிந்துவிட்டது. கடந்த 9 மாதங்களின் ஜிஎஸ்டி வரி வருவாயும் குறிப்பிடத்தக்க அளவில் வசூலாகி உள்ளது. நேரடி வரி வருவாயில் ஜிஎஸ்டி வரி வருவாயின் பங்களிப்பும் குறிப்பிடத்தக்க அளவில் இருந்ததுள்ளது. இதனைப் பற்றிய அனைத்து தகவல்களும் வருமான வரித்துறை தலைமை அலுவலகத்திற்கு வந்துள்ளது.

வரி வசூல் எவ்வளவு

வரி வசூல் எவ்வளவு

பெரும்பாலான தொழில் நிறுவனங்கள், ஜிஎஸ்டி வரி வரம்பிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளதே வரி வசூல் குறிப்பிடத்தக்க அளவில் அதிகரிக்க காரணமாகும், கடந்த 2017-18ம் நிதி ஆண்டுக்கான நேரடி வரிகள் வாரியத்திற்கு வரவேண்டிய வரி வசூலில், ஏற்கனவே மதிப்பிடப்பட்ட அளவை விட சுமார் 10.05 லட்சம் கோடி ரூபாய் கூடுதலாக வரி வசூலானதாக மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லியும் தெரிவித்துள்ளார்.

ஜிஎஸ்டி ஆணையம்

ஜிஎஸ்டி ஆணையம்

வருமான வரி வசூல் அதிகரித்து இருந்தாலும், ஜிஎஸ்டி வரி வசூலில் சில தொழில் நிறுவனங்கள் ஜிஎஸ்டி ரிட்டன் தாக்கலில் முறைகேடு செய்து வரி ஏய்ப்பு செய்துள்ளதாக ஜிஎஸ்டி ஆணையம் சந்தேகம் தெரிவித்துள்ளது. இதனை அடுத்து முறைகேடு பற்றிய அனைத்து தரவுகளையும், தகவல்களையும் ஜிஎஸ்டி ஆணையம் நேரடி வரிகள் வாரியத்திற்கு (Central Board of Direct Taxes) அனுப்பி உள்ளது.

வருமான வரி ரிட்டன் தாக்கல்

வருமான வரி ரிட்டன் தாக்கல்

நேரடி வரிகள் வாரியமும் (CBDT) சந்தேகத்திற்கு உட்பட்ட நிறுவனங்களிடம் இருந்து ஜிஎஸ்டி வரி செலுத்தியதற்கான அனைத்து விபரங்களையும் கேட்டுப் பெற்றுள்ளது. தொழில் நிறுவனங்களிடம் இருந்து கிடைக்கப் பெற்ற தகவல்கள் அனைத்தும் பின்னர் 2017-18ம் நிதியாண்டுக்கான வருமான வரி ரிட்டன் தாக்கல் செய்யும் ரிட்டன்களிலும் இடம் பெற்று இருக்கவேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தகவல்களும் தரவுகளும் வருமான வரித்துறையால் வரி அதிகாரிகளால் தணிக்கை செய்யப்படும்.

வரி ஏய்ப்புக்கு அபராதம்

வரி ஏய்ப்புக்கு அபராதம்

வரித் துறை அதிகாரிகளால் அனைத்து ஆவணங்களும் தரவுகளும் முறையாக தணிக்கை செய்யப்பட்டு, வரி ஏய்ப்பு செய்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டால் கண்டிப்பாக தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், அவர்களிடம் இருந்து வரிகளுடன், அபராதமும் வட்டியிம் சேர்த்து வசூலிக்கப்படும் என்று நேரடி வரிகள் வாரிய உயர் அதிகாரிகளும், வரித்துறை வல்லுநர்களும்

கடும் தண்டனை

கடும் தண்டனை

வாட் வரி விதிப்பு முறையில் வணிக வரித்துறைக்கும் வருமான வரித் துறைக்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லாத நிலை இருந்ததால், பெரும்பாலான நிறுவனங்கள் சரியான கொள்முதல், விற்பனை மற்றும் செலுத்தவேண்டிய வரிகள் போன்றவற்றை தெரிவிக்காமல் வருமான வரித்துறையை ஏமாற்றி வந்தன. ஆனால், தற்போது ஜிஎஸ்டி வரிகள் ஆணையமும் வருமான வரித்துறையும் ஒரே குடையின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளதால் வரி செலுத்தாமல் ஏமாற்றம் செய்வது என்பது அவ்வளவு எளிதான காரியம் அல்ல.

English summary
The Central Board of Direct Taxes (CBDT) wants to mine the GST payments data of Traders and Business people to ensure that, there are no income goes untaxed.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X