Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தங்கம் நல்லது ஓகே.. ஆனால் டிஜிட்டல் கோல்டு வாங்கலாமா.. என்ன பிரச்சனை இருக்கு? ஆனந்த் சீனிவாசன் நறுக்

Subscribe to Oneindia Tamil

சென்னை: நமது நாட்டில் தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஒரே அடியாக ரூ. 7000+ கொடுத்து தங்கம் வாங்க முடியாத பலரும் டிஜிட்டல் முறையில் தங்கம் வாங்குகிறார்கள். இந்த டிஜிட்டல் கோல்டு பாதுகாப்பானதாக இல்லையா என்று பலருக்கும் பல சந்தேகங்கள் எழும். இதற்கிடையே இதற்கான காரணத்தைப் பிரபல பொருளாதார ஆலோசகர் ஆனந்த் சீனிவாசன் விளக்கியுள்ளார்.

தங்கம் விலை கடந்த சில காலமாகவே தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நேற்று மட்டும் சென்னையில் 22 கேரட் தங்கம் ஒரு கிராம் ரூ.80 விலை உயர்ந்து, ரூ. 7,240ஐ எட்டியது. இது வரும் காலத்தில் மேலும் உயரும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

anand srinivasan personal finance


தங்கம் விலை: தங்கம் விலை தொடர்ந்து உயர்வதால் ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தினரால் இப்போது எல்லாம் தங்கத்தை வாங்க முடிவதில்லை. ஏனென்றால் குறைந்தபட்சம் ஒரு கிராம் வாங்க வேண்டும் என்றாலும் கூட ரூ.7000+ தர வேண்டும். அவ்வளவு பெரிய தொகையை நம்மில் பலரால் ஒதுக்க முடியாது. இதனால் மக்கள் பலரும் டிஜிட்டல் கோல்ட் பக்கம் செல்கிறார்கள்.

வெள்ளி தான் அடுத்த தங்கமா.. அதை வாங்கி சேமிக்கலாமா? ஆனந்த் சீனிவாசன் சொன்ன நறுக் பதில்


இந்த டிஜிட்டல் தங்கத்தை ரூ.10ல் இருந்து எத்தனை ரூபாய்க்கு வேண்டுமானாலும் வாங்கலாம் எனப் பல தனியார் நிறுவனங்கள் விளம்பரப்படுத்துகிறார்கள். மக்களும் ஆர்வமாக இதில் டிஜிட்டல் தங்கத்தை வாங்குகிறார்கள். ஆனால், உண்மையில் இது பாதுகாப்பானது தானா என்பதில் பலருக்கும் சந்தேகம் எழுகிறது. இதற்கிடையே இதற்கான பதிலைப் பிரபல பொருளாதார ஆலோசகர் ஆனந்த் சீனிவாசன் அளிக்கிறார்.

ஆனந்த் சீனிவாசன்: இது தொடர்பாக ஆனந்த் சீனிவாசன் கூறுகையில், "நிறையப் பேர் டிஜிட்டல் தங்கத்தை வாங்கலாமா எனக் கேட்கிறார்கள்.. நான் பிரபல ஆங்கில இதழ் ஒன்றில் வந்த செய்தியை இங்குச் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். ரூ. 10க்கு கூட தங்கம் வாங்கலாம் என ஒரு ஆன்லைன் நிறுவனம் விளம்பரம் செய்தார்கள். அதாவது நீங்கள் காசு கொடுத்தால் அவர்கள் உங்களுக்காகத் தங்கத்தை வாங்கி வைப்பார்களாம். அவர்கள் தான் இப்போது பிரச்சினையில் சிக்கியுள்ளார்கள்.

நான் ஏற்கனவே பல முறை சொல்லி இருக்கிறேன். டிஜிட்டல் கோல்ட் பக்கம் போக வேண்டாம் என்று.. தங்கம் மட்டும் எப்போதும் நாம் தொட்டுப் பார்த்து கையில் வைத்துக் கொள்ள வேண்டும் என்பதே எனது கருத்து.. அந்தளவுக்குத் தங்கத்தைச் சேர்க்க முடியவில்லை என்றால் நிஃப்டியில் கோல்ட் ஃபீஸாக வைத்துக் கொள்ளலாம். அதை எப்போது வேண்டுமானாலும் தங்கமாக நம்மால் மாற்ற முடியும். ஊரை விட்ட செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டால் உங்கள் கையில் தங்கம் தேவை.

ஆபத்து: இதுபோல ஆன்லைனில் டிஜிட்டல் கோல்ட் வாங்குகிறேன் எனப் போய் மாட்டிக் கொள்ள வேண்டாம். ஏதோ ஒரு நிறுவனத்தில் தானே பிரச்சினை என நினைக்காதீர்கள்.. எப்போது வேண்டுமானாலும் எந்த ஆன்லைன் செயலியில் வேண்டுமானாலும் பிரச்சினை வரலாம். எனவே, ஏதாவது ஒரு ஆன்லைன் நிறுவனத்தில் போட்டுவிட்டு, பிறகு கவலைப்பட்டுக் கொண்டு இருக்காதீர்கள்.

பிட்காயின் தான் அடுத்த தங்கமா? இப்போது முதலீடு செய்யலாமா! நாலே வார்த்தையில் ஆனந்த் சீனிவாசன் நறுக்


எது பாதுகாப்பானது: தங்கத்தை 2 ரூட்களில் வைத்திருப்பு பாதுகாப்பானது.. ஒன்று தங்கத்தை வாங்கி வைத்துக் கொள்ளுங்கள்.. அப்படி இல்லை என்றால் நிஃப்டி கோல்ட் ஃபீஸாக வைத்துக் கொள்ளுங்கள். இரண்டும் செட் ஆகவில்லை என்றால் எஸ்பிஐ போன்ற வங்கிகள் எஸ்பிஐ கோல்ட் என வைத்திருப்பார்கள். அதில் கூட போட்டு வைத்துக் கொள்ளலாம். தயவு செய்து தெரியாத இடத்தில் போட்டுவிட்டுக் கவலைப்படாதீர்கள். தங்கம் விலை ரூ.8500க்கு போகும் போது இதுபோல பல நிறுவனங்கள் காணாமல் போகலாம். எனவே, ஜாக்கிரதையாக இருங்கள்" என்றார்.

என்ன காரணம்: டிஜிட்டல் கோல்டு என்பது ஆர்பிஐ அல்லது செபி என எந்தவொரு ஒழுங்குமுறை கீழும் வராது.. இதனால் எதாவது பிரச்சினை வந்தால் யாரை அணுகுவது என்றே தெரியாது. இதன் காரணமாகவே வல்லுநர்கள் பலரும் டிஜிட்டல் கோல்டு பக்கம் செல்ல வேண்டாம் என எச்சரிக்கிறார்கள்.

இது சாதாரண செய்தி மட்டுமே.. இதை நிச்சயம் யாரும் ஒரு பொருளாதார ஆலோசனையாக எடுத்துக் கொள்ளக் கூடாது. நிதி அல்லது முதலீடு சார்ந்த முடிவுகளை எடுக்கும் முன்பு உங்கள் பொருளாதார ஆலோசகரிடம் உரிய ஆலோசனை பெறவும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+