For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

உலக பணக்காரர்கள் பட்டியல்.... பில்கேட்ஸை பின்னுக்கு தள்ளிய ஜெப் பிசோஸ்

உலகின் மிகப் பெரிய பணக்காரர்கள் என்ற பெருமையை அமேசான் நிறுவனத்தின் நிறுவனர் ஜெப் பிசோஸ் பெற்றுள்ளார். மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸை இரண்டாவது இடத்துக்கு பின்தள்ளி ஜெப் பிசோஸ் முதலிடத்தை பிடித்துள்ள

Google Oneindia Tamil News

Recommended Video

    OHCHR-லிருந்து விலகியது அமெரிக்கா | உலகின் மிகப் பெரிய பணக்காரர் அமோசன் உரிமையாளர்- வீடியோ

    டெல்லி: உலகின் மிகப் பெரிய பணக்காரர்கள் பட்டியலை ஃபோர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்டுள்ளது. இந்தப் பட்டியலில், அமேசான் நிறுவனத்தின் ஜெப் பிசோஸ் முதலிடம் பிடித்துள்ளார். இவரின் மொத்த சொத்து மதிப்பு 9,68,538 கோடி ரூபாயாகும்.

    பிரபல ஃபோா்ப்ஸ் பத்திாிகை உலக பணக்காரா்கள் பட்டியலை திங்கள் கிழமை வெளியிட்டது. அதில் அமேசான் நிறுவனத்தின் நிறுவனரும், தலைமை செயல் அதிகாரியுமான ஜெப் பிசோஸ் முதல் இடம் பிடித்துள்ளாா். இவருக்கு அமெரிக்க மதிப்பில் 141.9 பில்லியன் டாலா் சொத்து உள்ளதாக தொிவிக்கப்பட்டுள்ளது.

    Jeff Bezos, Worlds Richest, Miles Ahead Of Bill Gates, Shows Latest Data

    நீண்ட காலமாக உலக பணக்காரா்கள் பட்டியலில் முதல் இடத்தில் இருந்த பில்கேட்ஸ் இந்த முறை இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளாா். இரண்டாவது பணக்காராராக உள்ள பில்கேட்சிற்கு 92.9 பில்லியன் டாலா் மதிப்பு சொத்து உள்ளதாக பத்திாிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    54 வயதாகும் ஜெப் பிசோஸ் அமேசான் நிறுவனத்தை 1994-ம் ஆண்டு தொடங்கினார். தற்போது இந்த நிறுவனம் உலகின் மிகப் பெரிய இ-காமர்ஸ் நிறுவனமாக செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் கிட்டத்தட்ட 5 லட்சம் ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். உலகின் மிகப் பெரிய மதிப்பு கொண்ட நிறுவனங்கள் பட்டியலில் ஆப்பிளுக்கு அடுத்து அமேசான் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    பில்கேட்ஸ் பல நூறு கோடி டாலர்களுக்கு மேல் அறக்கட்டளை பணிகளுக்கு கொடையாக அளித்துள்ளார். இல்லையெனில், இப்போதும் ஒப்பிடமுடியாத பணக்காரராக இருப்பார் என்றும் போர்ப்ஸ் குறிப்பிட்டுள்ளது. உலகின் முதல் பணக்காரராக 2013ம் ஆண்டு முதல் பில்கேட்ஸ் இருந்து வந்தார். பில்கேட்ஸ் கடந்த 2015ம் ஆண்டு மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாாி பொறுப்பில் இருந்து விலகி முழுநேர தொண்டு நிறுவன பணிகளை மேற்கொண்டு வருகிறாா் என்பது குறிப்பிடத்தக்கது.

    கடந்த ஆண்டு ஜூலை மாதம் இதே போல பில்கேட்ஸை முந்தினார் ஜெப் பிசோஸ். நியூயார்க் பங்குச் சந்தையில் தொடக்க நேர நிலவரப்படி பிஸோஸ் சொத்து மதிப்பு 9,060 கோடி டாலராக இருந்தது. பில்கேட்ஸ் சொத்து மதிப்பு 9,010 கோடி டாலராக இருந்தது. இதனால் உலக பணக்காரர் பட்டியலில் முதலிடம் பிடித்தார். அதே நாளில் பிற்பகலில் அமேசான் நிறுவனத்தின் பங்குகள் 1 சதவீதம் சரிவைச் சந்தித்தன. இதனால் 1,046 டாலர் சொத்து மதிப்பு குறைந்ததால், பில்கேட்ஸ் மீண்டும் முதலிடத்தை பிடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    English summary
    Bezos' wealth has grown more than $5 billion since June 1 to beat Bill Gates, the principal founder of Microsoft Corporation, who is the second-richest man in the world with $92.9 billion.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X