For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஒரே நிறுவனம்... ஒரே வேலை.. ஆண்களை விட பெண்களுக்கு சம்பளம் குறைவுதான்!

இந்தியாவிலும் உலகளவிலும் ஆண்களை விடப் பெண்கள் சராசரியாக 16.1 சதவிகிதம் குறைவான ஊதியம் பெறுவதாக கார்ன் ஃபெர்ரி நிறுவனத்தின் அறிக்கை கூறுகிறது.

Google Oneindia Tamil News

டெல்லி: இந்தியாவிலும் உலகளவிலும் ஆண்களை விடப் பெண்கள் சராசரியாக 16.1 சதவிகிதம் குறைவான ஊதியம் பெறுவதாக கார்ன் ஃபெர்ரி என்ற நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த நிறுவனத்தின் அறிக்கைப்படி, இந்தியாவில் ஊதிய வேறுபாடு 12.1 சதவிகிதமாக உள்ளது.

கட்டிட வேலை செய்யும் சித்தாள், விவசாய கூலி முதல் ஐடி நிறுவனம் வரை ஆண்கள், பெண்கள் இடையே ஊதிய முரண்பாடு உள்ளது. ஒரே வேலைதான் என்றாலும் ஆண்களுக்கே அதிக சம்பளம் அளிக்கப்படுகிறது.

பெண்கள் எல்லா இடங்களிலும் பாலின பாகுபாட்டை சந்திக்கின்றனர் என்பது பொதுவான வாதமாக இருந்தாலும் அதுதான் உண்மை. நன்றாக படித்து வேலைக்கு சென்றாலும், ஆண்களைவிட பெண்களுக்கு சம்பளம் குறைவாகவே உள்ளது.

இந்தியாவில், ஆண் - பெண் ஊழியர்களிடையிலான சம்பள விகித வேறுபாடு, சராசரியாக, 25 சதவீதமாக உள்ளதாக கடந்த ஆண்டு நடத்தப்பட்ட ஆய்வில் தெரியவந்தது. ஆண் ஊழியர்களை விட, பெண் ஊழியர்களுக்கு குறைவான சம்பளம் வழங்கப்படுகிறது. அமெரிக்கா உட்பட வளர்ந்த நாடுகளிலும் இதே நிலைமைதான் நீடிக்கிறது. அமெரிக்காவின் வெள்ளை மாளிகையிலுமே ஆண்களை விட பெண்களுக்கு குறைவான சம்பளமே அளிக்கப்படுகிறது.

தண்டனைக்குரிய குற்றம்

தண்டனைக்குரிய குற்றம்

உலகிலேயே முதன்முறையாக ஐஸ்லாந்து நாடு, பெண்களைவிட ஆண்களுக்கு அதிக ஊதியம் வழங்குவது தண்டனைக்குரிய குற்றம் என சட்டம் இயற்றியுள்ளது. கடந்த ஆண்டு மார்ச் 8ஆம் தேதி, சர்வதேச பெண்கள் தினத்தன்று, அலுவலகங்களில் பெண்களைவிட ஆண்களுக்கு அதிக சம்பளம் தருவது தண்டனைக்குரிய குற்றமாகும் என ஐஸ்லாந்தில் சட்டம் இயற்றப்பட்டது. இந்த சட்டம் ஜனவரி 1, 2018 முதல் நடைமுறைக்கு வந்தது

சர்வதேச அளவில் பெண்கள்

சர்வதேச அளவில் பெண்கள்

அமெரிக்காவின் கார்ன் ஃபெர்ரி நிறுவனம் சர்வதேச அளவில் 53 நாடுகளில் ஆய்வு மேற்கொண்டது. அதில் 14284 நிறுவனங்களில் சுமார் 1.23 கோடி ஊழியர்களிடம் ஆய்வு நடத்தியது. அதில் ஒரே நிறுவனத்தில் ஒரே பதவியில் இருக்கும் ஊழியர்களில் ஆண்களை விட பெண்கள் குறைவான சம்பளம் பெறுவது கண்டறியப்பட்டது.

ஒரே பணி சம்பளம் வேறுபாடு

ஒரே பணி சம்பளம் வேறுபாடு

கார்ன் ஃபெரியின் பாலின ஊதியக் குறியீட்டின் படி, ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையேயான ஊதியம் வழங்குவதில் உண்மையாகவே வேறுபாடு உள்ளது. ஆனால், ஒரே நிலையிலான பணி, ஒரே நிறுவனம், ஒரே வேலை ஆகியவற்றில் வேறுபாடு மிகவும் குறைவதாக கார்ன் ஃபெர்ரியின் ஆய்வு கூறுகிறது.

ஊதிய வேறுபாடு 0.5 சதவிகிதம்

ஊதிய வேறுபாடு 0.5 சதவிகிதம்

உலகளவில், ஒரே நிலை, ஒரே நிறுவனம் என்ற அடிப்படையில் பார்த்தால், ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையேயான ஊதிய வேறுபாடு 1.5 சதவிகிதமாக மட்டுமே உள்ளது. ஒரே நிலையில் ஒரே நிறுவனத்தில் ஒரே வேலையை ஆண்களும் பெண்களும் செய்யும்போது, ஊதிய வேறுபாடு 0.5 சதவிகிதமாகக் குறைகிறது.

சீனாவை விட அதிகம்

சீனாவை விட அதிகம்

இந்தியாவில், ஒரே பணி நிலையில் வேலை பார்ப்பவர்களுக்கு ஊதிய வேறுபாடு 4 சதவிகிதமாக உள்ளது. ஒரே நிறுவனத்தின் ஒரே பணிநிலையின் அடிப்படையில் பார்க்கையில் ஊதிய வேறுபாடு 0.4 சதவிகிதமாக உள்ளது.

ஒரே நிலையில் ஒரே நிறுவனத்தில் ஒரே வேலையை மதிப்பிடுகையில் ஊதிய வேறுபாடு 0.2 சதவிகிதமாக உள்ளது. இந்தியாவில் ஊதிய வேறுபாடு 12.1 சதவிகிதமாக உள்ளது. இது சீனாவை விட அதிகமாகும்.

ஊதிய வேறுபாடு பிரேசிலில் 26.2 சதவிகிதமாகவும், பிரான்ஸில் 14.1 சதவிகிதமாகவும், ஜெர்மனியில் 16.8 சதவிகிதமாகவும், இங்கிலாந்தில் 23.8 சதவிகிதமாகவும், அமெரிக்காவில் 17.6 சதவிகிதமாகவும் உள்ளது.

English summary
Korn Ferry Gender Pay Index found that, when evaluating the same job level, such as director, the gap fell to 5.3 percent globally. When considering the same level at the same company, the gap further reduced to 1.5 percent.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X