Dhanusu: தனுசு ராசிக்கு வைகாசி மாதத்தில் அதிர்ஷ்டம் ஏற்படுமா?.. முழு பலன்கள் விவரம்
Vaikasi Matha Palangal: வைகாசி மாதத்தில் தனுசு ராசியினருக்கு அதிர்ஷ்டம் கிடைக்குமா, என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கும், வழிபட வேண்டிய தெய்வம் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.
வைகாசி மாதம் என்றாலே சிறப்பான மாதமாகும். முருகர் அவதரித்த மாதம். வைகாசி மாதம் ஆரம்பிக்கும்போது அஸ்வினி நட்சத்திரத்தில் சந்திரன் சஞ்சாரத்தை தொடங்குகிறார். 12 ஆம் இடத்தில் சனி தன் இருப்பை நிலை நிறுத்தியிருக்கிறார். செவ்வாய் மேஷ வீட்டில் ஆட்சியாகி இருக்கிறார். சுக்கிரன் தனுசு வீட்டில் இருக்கிறார். சூரியன் ரிஷப வீட்டில் இருந்து இந்த மாதத்தில் தனது சஞ்சாரத்தை தொடங்குவதே வைகாசி மாதமாகும்.

சுக்கிரன் குரு உச்சமாக இருக்கக்கூடிய கடகத்தில் வந்து அமருகிறார். கேது சிம்ம வீட்டிலும், ராகு கும்ப வீட்டிலும் இருக்கிறார். இந்த கிரக நிலைகள் தனுசு ராசியினருக்கு என்ன விதமான பலன்களைக் கொடுக்கும். கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.
தனுசு
தனுசு ராசியினருக்கு தனிப்பட்ட முறையில் செல்வாக்கு கூடும் காலகட்டம். துணையிடம் மனம் விட்டுப் பேசுவது ஏற்றத்தைத் தரும். குடும்பத்தினருடன் உள்ளூர், வெளியூர், தெய்வமார்க்க பயணங்களை மேற்கொள்ளவது நல்லது. கொடுத்த வாக்கை குடும்பத்திலும், வெளிவட்டாரத்திலும் காப்பாற்றக்கூடிய அமைப்பு உள்ளது. உறவுகளுக்கு செய்ய வேண்டிய அனைத்து விஷயங்களையும் செய்து முடிப்பீர்கள்.
அனுகூலம்
எல்லாவிதமான நன்மைகளும் ஏற்படும். சுப விரய பாக்கியம் உண்டாகும். இழுபறியாக இருந்த சிக்கல்கள் தீரும். எதிர்பார்க்காத நல்ல விஷயங்கள் அனைத்தும் நடக்கும் காலகட்டம். உத்தியோகத்தில் ஏற்றமும், அனுகூலமும் காணப்படும். இதுவரை இருந்து வந்த பாதிப்புகள், சவால்கள் அனைத்தும் பரிபூரணமாக நீங்கும்.
மனநிம்மதி
இந்த வைகாசி மாதம் முன்னேற்றங்களை தரக்கூடிய காலமாக இருக்கும். நீங்கள் எடுக்கும் முயற்சிகளில் நல்ல பலன்கள் கிடைக்கும். நீண்ட நாட்களாக இருந்து வந்த சில பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைத்து மனநிம்மதி ஏற்படும். சட்டம் மற்றும் ஆவணங்கள் தொடர்பான விஷயங்களில் சாதகமான முடிவுகள் கிடைக்க வாய்ப்பு உள்ளது.
பொறுப்புகள்
வேலை மற்றும் தொழில் தொடர்பாக புதிய வாய்ப்புகள் உருவாகும். சரியான நேரத்தில் கிடைக்கும் இந்த வாய்ப்புகளை பயன்படுத்திக் கொண்டால் நல்ல முன்னேற்றம் காணலாம். அரசு துறையில் பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு, பாராட்டு அல்லது புதிய பொறுப்புகள் கிடைக்கும் சூழ்நிலை உருவாகும். கடின உழைப்பிற்கு தகுந்த பலன் கிடைக்கும் மாதமாக இது அமையும்.
முன்னேற்றம்
பொருளாதாரத்தில் முன்னேற்றம் இருந்தாலும் செலவுகளும் அதிகரிக்கக்கூடும். தேவையற்ற செலவுகளை கட்டுப்படுத்துவது நல்லது. குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். நண்பர்கள் மற்றும் உறவினர்களின் ஆதரவு கிடைக்கும். இந்த மாதம் உங்களுடைய தன்னம்பிக்கை அதிகரித்து, பல விஷயங்களில் வெற்றி பெற உதவும்.
வழிபாடு
கால்கள் தொடர்பான பிரச்சனைகளில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். உடற்பயிற்சியை அதிகமாக செய்வது, தவறாமல் செய்வது நல்லது. நரசிம்மர் வழிபாடு ஏற்றத்தை தரும்.












Click it and Unblock the Notifications