For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இந்தியாவின் டாப் 10 கோடீஸ்வரர்கள் லிஸ்ட் ... முகேஷ் அம்பானி தொடர்ந்து நம்பர் 1

இந்தியாவின் கோடீஸ்வரர்கள் டாப் 10 பட்டியலில் நம்பர் 1ல் இருக்கிறார் முகேஷ் அம்பானி. பணம் மதிப்பு நீக்க நடவடிக்கைகளுக்குப் பிறகு பல கோடீஸ்வரர்கள் இந்த லிஸ்ட்டில் இடம் பெறவில்லை.

By Super Admin
Google Oneindia Tamil News

மும்பை: இந்தியாவில் உள்ள கோடீஸ்வரர்களில் ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி நம்பர் 1 தொடர்ந்து நீடிப்பதாக ஹூரன் குளோபல் ரிச் லிஸ்ட்
தெரிவித்துள்ளது.

எஸ்.பி ஹிந்துஜா குடும்பம், சன் பார்மா திலிப் சாங்வி நிறுவனங்கள் அடுத்தடுத்த இடத்தில் உள்ளன. லட்சுமி மிட்டல், ஷிவ் நாடார், ஆசிம் பிரேம்ஜி ஆகியோர் இந்தியாவின் டாப் 10
கோடீஸ்வரர்கள் லிஸ்டில் இடம் பெற்றுள்ளனர்.

Mukesh Ambani still richest - Hurun Global Rich List

இந்தியாவில் உள்ள 132 கோடீஸ்வரர்களில் ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானிதான் முதலிடத்தில் இருக்கிறார் என்று ஹூரன் குளோபல் ரிச் லிஸ்ட்

கூறியுள்ளது. இந்திய அளவில் ரூபாய் நோட்டு வாபஸ் விவகாரம் காரணமாக 11 பேர் இந்த கோடீஸ்வரர் பட்டியலில் இருந்து வெளியேறி உள்ளனர்.

முகேஷ் அம்பானி

முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு 26 பில்லியன் டாலர். ரூ. 175,400 கோடியாகும். இவர் இந்திய கோடீஸ்வரர்கள் பட்டியலில் தொடர்ந்து 3வது ஆண்டாக முதலிடத்தில் இருந்து வருகிறார். முதலிடத்தில் இருந்தாலும் உலக கோடீஸ்வரர்கள் பட்டியலில் 28வது இடத்தில் இருக்கிறார். ரூபாய் நோட்டு வாபஸ் விவகாரத்தால், முகேஷ் அம்பானியின் வர்த்தகம் எந்த பாதிப்புக்கும் ஆளாகவில்லை.

எஸ்.பி. ஹிந்துஜா

இந்துஜா குழும தலைவராக எஸ்.பி ஹிந்துஜா மற்றும் அவரது குடும்பத்தினர் 14 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் 2வது இடத்தில் உள்ளார். அதாவது ரூ.1,01,000 கோடியாகும். இவர் உலக அளவில் 74வது இடத்தில் இருக்கிறார்.

திலீப் சங்வி

இவரையடுத்து சன் பார்மாசூடிக்கல் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் திலீப் சங்வி 99,000 கோடி சொத்து மதிப்புடன் மூன்றாவது இடத்தில் இருக்கிறார். இவரும் உலக அளவில் 74வது இடத்தில் இருக்கிறார். இந்தியாவின் கட்டுமானத்துறை நிறுவன தலைவர் பல்லோஞ்சி மிஸ்ட்ரி 4வது இடத்தில் இருக்கிறார். இவரது சொத்து மதிப்பு 12 பில்லியன் டாலர் ரூ. 82,700 கோடி உலக அளவில் இவர் 97வது இடத்தில் இருக்கிறார்.

லட்சுமி மிட்டல் - ஷிவ் நாடார்

ஆர்செலர் மிட்டல் இரும்பு நிறுவனத்தின் லட்சுமி மிட்டல் சொத்து மதிப்பு ரூ.81,800 கோடி அதாவது 12 பில்லியன் டாலர். இதேபோல 6வது இடத்தில் உள்ள தொழிலதிபர் ஷிவ் நாடார் சொத்து மதிப்பு ரூ.81,200 இவர்கள் இருவருமே உலக அளவில் 97வது இடத்தில் உள்ளனர்.

அசிம் பிரேம்ஜி

இந்த பட்டியலில் 7வது இடத்தில் உள்ள சைரஸ் பூனவாலாவின் சொத்து மதிப்பு 75,400 கோடி இவர் உலக அளவில் 106வது இடத்தில் உள்ளார். 8வது இடத்தில் உள்ள விப்ரோ நிறுவனத்தின் தலைவர் அசிம் பிரேம்ஜியின் சொத்து மதிப்பு ரூ.66,300 கோடி கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு உயர்ந்துள்ளது. இவர் உலக அளவில் 134 இடத்தில் இருக்கிறார்.

உதய் கோடாக் - டேவிட் மற்றும் சிம்சம்

வங்கித்துறை நிறுவனமாக கோடாக் மகேந்திரா நிறுவனத்தின் தலைவர் உதய் கோடாக் சொத்து மதிப்பு ரூ.51,600 கோடி. இவர் 9வது இடத்தில் இருக்கிறார். டேவிட் மற்றும் சிம்சன் சகோதரர்கள் 10வது இடத்தில் இருக்கிறார். இவர்களின் சொத்து மதிப்பு ரூ.45,600 கோடியாகும்.

11 கோடீஸ்வரர்கள் மாயம்

இந்திய அளவில் ரூபாய் நோட்டு வாபஸ் விவகாரம் காரணமாக 11 பேர் இந்த கோடீஸ்வரர் பட்டியலில் இருந்து வெளியேறி உள்ளனர். இதில், ஃபிளிப்கார்ட் உரிமையாளர்கள் சச்சின் மற்றும் பின்னி பன்சால் ஆகியோரும் அடங்குவர்.

English summary
India has 100 billionaires led by Reliance Industries Chairman Mukesh Ambani with a net worth of $26 billion, according to Hurun Global Rich List. Hinduja Group's SP Hinduja and family, and Sun Pharma's Dilip Shanghvi are country's second and third most richest people respectively. Lakshmi N Mittal, Shiv Nadar and Azim Premji are also among India's top 10 richest people.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X