நடப்பாண்டில் பொருளாதார வளர்ச்சி 5% ஆக இருக்கும்: பிரதமர் மன்மோகன்சிங்
டெல்லி: நாட்டின் எதிர்காலம் சிறப்பாக உள்ளது- நடப்பாண்டில் பொருளாதார வளர்ச்சி 5% இருக்கும் என்று பிரதமர் மன்மோகன்சிங் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
டெல்லியில் நேற்று நடைபெற்ற 12-வது ஆண்டு வெளிநாடு வாழ் இந்தியர் தின விழாவில் பிரதமர் மன்மோகன் சிங் பேசியதாவது:
நாட்டின் பொருளாதார வளர்ச்சி விகிதம் 2004-ம் ஆண்டு முதல் இப்போது வரை சராசரியாக 7.9 சதவீதமாக உள்ளது. அண்மைக் காலமாக சிறிய அளவில் பொருளாதார பின்னடைவைச் சந்தித்து வருகிறோம்.
இந்த நிதியாண்டில் நமது வளர்ச்சி விகிதம் 5 சதவீதமாக இருக்கும் என எதிர்பார்க்கிறோம். நாட்டின் பொருளாதாரம் எதிர்காலத்தில் எப்படியிருக்கும் என்ற கேள்வி நம்மில் பலருக்கு எழுந்துள்ளது.

இன்றைய நிலையை பார்த்து அவநம்பிக்கை அடைய வேண்டாம்; எதிர்காலத்தை நினைத்து பயப்படவும் வேண்டாம். எதிர்காலத்தை நம்பிக்கையுடனும், தன்னம்பிக்கையுடனும் எதிர்கொள்வோம். நாட்டின் எதிர்காலம் சிறப்பாக உள்ளது.
சமீபகாலமாக மத்திய அரசு பல்வேறு முக்கிய முடிவுகளை எடுத்து வருகிறது. அரசியல் கட்சிகளின் ஆதரவு கிடைத்திருந்தால் மேலும் பல சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்க முடியும். குறிப்பாக நிதி மற்றும் காப்பீட்டுத் துறையில் முக்கிய மாற்றங்களை கொண்டு வந்திருக்க முடியும்.
எனினும், ஏற்கெனவே நாம் மேற்கொண்டுள்ள சீர்திருத்தங்கள், வெளிநாடுகளிலிருந்து அதிக முதலீடுகளை ஈர்க்கும் வகையில் உள்ளது. அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி என்ற கொள்கையை மத்திய அரசு பின்பற்றி வருகிறது. இந்த கொள்கையை செயல்படுத்துவதன் மூலம்தான் நீடித்த பொருளாதார வளர்ச்சியையும், சமூகத்தில் சமநிலையையும் ஏற்படுத்த முடியும்.
இவ்வாறு பிரதமர் மன்மோகன்சிங் தெரிவித்தார்.
-
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு! -
ஸ்டாலின் கொண்டு வந்த காலை உணவு திட்டம் தொடரும்.. மெனு மாற்றம்.. அமைச்சர் ராஜ்மோகன் உறுதி












Click it and Unblock the Notifications