தூணிலும் AI துரும்பிலும் AI.. ஏஐ துறையில் முதலீடு செய்யலாமா? வேண்டாமா? அக்ஷத் சொல்லும் புது தியரி!
ஏஐ (செயற்கை நுண்ணறிவு) துறை இந்தியாவில் வேகமாக வளர்ந்து வரும் நிலையில், பிரபல முதலீட்டாளர் அக்ஷத் ஸ்ரீவாஸ்தவா ஏஐ-இல் முதலீடு செய்யுமாறு வலியுறுத்தியுள்ளார். 'ஏஐ என்பது இந்த தசாப்தத்தின் சிறந்த வர்த்தக வாய்ப்பு' என்று அவர் தனது பதிவில் கூறியுள்ளார்.
இந்திய அரசும், உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களும் ஏஐ-இல் பெரும் தொகையை முதலீடு செய்ய தயாராகி வரும் நிலையில், அக்ஷத் ஸ்ரீவாஸ்தவாவின் இந்த ஆலோசனை பல முதலீட்டாளர்களுக்கு முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. குறிப்பாக ஏஐ துறையில் முதலீட்டு செய்யலாமா? வேண்டாமா? என்ற குழப்பத்தில் இருக்கும் மக்களுக்கு இந்த பதிவு இத்துறை குறித்த புரிதலை கொடுக்கும்.

இந்தியாவில் ஏஐ துறைக்கு பெரும் முதலீடு
இந்திய அரசு இந்திய ஏஐ மிஷனுக்காக சுமார் ரூ.10,372 கோடி (சுமார் 1.25 பில்லியன் டாலர்) செலவு செய்ய திட்டமிட்டுள்ளது. இது மிகப் பெரிய தொகையாகும். இதேபோல் கூகுள், என்விடியா உள்ளிட்ட உலகின் முன்னணி ஹைபர்ஸ்கேலர் நிறுவனங்கள் (Hyperscalers) இந்தியாவில் மொத்தம் 50 பில்லியன் டாலர் அளவுக்கு முதலீடு செய்ய உறுதியளித்துள்ளன.
இந்தியாவின் மொத்த ஏஐ செலவில் 80 முதல் 85 சதவீதம் அமெரிக்க ஹைபர்ஸ்கேலர் நிறுவனங்களால் மேற்கொள்ளப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த முதலீடுகள் ஏஐ தொழில்நுட்பத்தை இந்தியாவில் வேகமாக வளர்க்க உதவும்.
ஏஐ துறை ஏன் 'தசாப்தத்தின் சிறந்த வர்த்தக வாய்ப்பு'?
அக்ஷத் ஸ்ரீவாஸ்தவா ஏஐ-ஐ 'தசாப்தத்தின் சிறந்த வர்த்தக வாய்ப்பு' என்று அழைக்கிறார். ஏஐ துறையில் முதலீடு செய்ய தாமதப்படுத்துபவர்கள் பெரிய லாப வாய்ப்பை இழக்க நேரிடும் என்று அவர் எச்சரிக்கிறார். 'ஏஐ பங்கு பலூன் வெடிக்கும் என்று காத்திருப்பவர்கள் பெரிய உயர்வைத் தவறவிடுவார்கள்' என்றும் அவர் கூறியுள்ளார்.
அதாவது சந்தையில் ஏஐ துறையில் அதிகப்படியான முதலீடு ஏஐ சார்ந்து செய்யப்பட்டாலும் இதன் மூலம் கிடைக்கும் லாபம் மிகவும் குறைவாக உள்ளது, இதனால் AI Bubble உருவாகியுள்ளதாக கருத்து நிலவி வருகிறது. இது வெடிக்கும் வரையில் காத்திருந்தால் பெரிய அளவிலான வர்த்தக இழப்பு ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போதைய நிலையில் இருந்து மெட்டா, அமேசான் போன்ற நிறுவனங்களின் பங்கு விலை 100 சதவீதம் உயர்வும் வாய்ப்பை காட்டிலும் தற்போதையை நிலையில் இருந்து 60-70 சதவீதம் வரையில் சரிய வாய்ப்பு குறைவாகவே உள்ளது என்றும் சுட்டிக்காட்டியுள்ளார் அக்ஷத் ஸ்ரீவாஸ்தவா.
அக்ஷத் ஸ்ரீவாஸ்தவாவின் சொந்த முதலீட்டு அனுபவம்
அக்ஷத் ஸ்ரீவாஸ்தவா தனது சொந்த ஏஐ முதலீட்டு அனுபவத்தையும் பகிர்ந்துள்ளார். 2025 பிப்ரவரியில் உருவாக்கிய ஏஐ அடிப்படையிலான போர்ட்ஃபோலியோ 40 சதவீதம் (டாலர் அடிப்படையில்) உயர்ந்துள்ளதாகவும், இந்திய ரூபாய் அடிப்படையில் 52 சதவீதம் லாபம் அளித்துள்ளதாகவும் தெரிவித்தார்.
இந்த ஆண்டு தொடங்கிய மற்றொரு ஏஐ போர்ட்ஃபோலியோ 13.15 சதவீதம் உயர்ந்துள்ளது. இந்த வெற்றி ஏஐ துறையின் வளர்ச்சியை நிரூபிப்பதாக அவர் கருதுகிறார்.
முதலீட்டாளர்களே உஷார்
ஏஐ துறை இன்னும் பல ஆண்டுகள் வளர்ச்சி பாதையில் இருக்கும் என்று நம்பும் அக்ஷத், முதலீட்டாளர்கள் இப்போதே ஏஐ துறையில் முதலீடு செய்வதை கவனிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறார். 'உட்கார்ந்து கொண்டு ஏஐ பலூன் வெடிக்கும் என்று காத்திருப்பவர்கள் பெரிய வாய்ப்பை இழப்பார்கள்' என்று அவர் எச்சரிக்கிறார். இருப்பினும், எந்த முதலீடும் சொந்த ஆராய்ச்சிக்குப் பிறகு மட்டுமே செய்ய வேண்டும் என்று அவர் நினைவூட்டுகிறார்.
Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Tamil.oneindia.com அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.












Click it and Unblock the Notifications